நாய்களை நல்லமுறையில் வளர்ப்பது எப்படி? கடிக்க வந்தால்...

Dog bite
Dog bite

செல்லப்பிராணியான நாய் மனிதர்களிடம் நன்கு பழகக் கூடிய ஒரு உயிரினம். எப்படி மனிதர்களுக்கு கோபம், எரிச்சல் போன்றவை வருகிறதோ அதுபோலதான் அப்பிராணிகளுக்கும் இதுபோன்ற உணர்ச்சிகள் சிறிது நேரம் வந்துவிட்டு போய்விடும். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால், எப்படி கையாளலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

கண் தொடர்பு:

மனித உறவுகளைப் போலவே, கண் தொடர்பு என்பது நம்பிக்கை மற்றும் அன்பின் அடையாளம். உங்கள் நாயின் கண்களைப் பார்க்கும்போது, அது ஆக்ஸிடாஸின்(oxytocin) வெளிபாட்டை செயல்படுத்துகிறது; தாய் நாய்கள் தங்கள் குட்டிகளுக்கு பாலூட்டும்போது வெளியிடப்படும் அதே இரசாயனம். எனவே, உங்கள் செல்லப்பிராணியுடன் இதேபோல் கண்களைப் பார்த்துக்கொண்டு, பிணைப்பை உண்டாக்கிகொள்ளுங்கள்.

பாராட்டு:

நாய்கள் புகழ்ச்சியால் செழிக்கும். பல நாய்கள் உபசரிப்புகளைவிட உங்கள் பாராட்டுகளை மதிக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன! எனவே, அவற்றின் நல்ல நடத்தையை உங்கள் புன்னகையுடன் கைதட்டி வெளிப்படுத்துங்கள். இது உங்கள் செல்லப்பிராணியுடனான பிணைப்பை வலுவடையச் செய்யும்.

தொடுதல் மற்றும் செல்லம்:

செல்லப்பிராணியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொட்டு தடவி கொஞ்சும்போது, அது உங்களில் ஒருவர்போல் உணர ஆரம்பிக்கும். போக போக நீங்கள் சொல்வதை மட்டும் கேட்கும் நிலைக்கு சமத்தாக வந்துவிடும்.

ஒன்றாக விளையாடுங்கள்:

விளையாடும் வாய்ப்பை உருவாக்குங்கள். இது வேடிக்கையான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அருமையான பிணைப்பை ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பும்கூட. உங்கள் நாயுடன் ஓடி பிடித்து விளையாடுவது, கயிறு இழுத்தல், பந்தை தூக்கி போட்டு விளையாடுவது அல்லது ஒளிந்துகொள்ளுதல் போன்றவற்றைப் பழக்கப்படுத்திக் கொடுங்கள்.

அமைதியாக இருங்கள்:

நாய்கள் நம் உணர்ச்சிகளை சுலபமாக புரிந்து கொள்ளும் திறன் படைத்தவை. நீங்கள் அமைதியாகவும் இணக்கமாகவும் இருக்கும்போது, அது அப்பிராணிகளுக்கு நம்பிக்கையான சூழலை உருவாக்கித் தரும். எனவே, உங்கள் நாய் சில பல அட்டகாசங்கள் செய்தாலும், நீங்கள் உங்கள் பொறுமையைக் கடைபிடித்து உங்கள் பிராணிகளை அமைதியாகக் கையாளுங்கள்.

ஒரு வழக்கத்தைப் பழக்கப்படுத்துங்கள்:

உணவளித்தல், நடைப்பயிற்சி மற்றும் விளையாடும் நேரம் ஆகியவற்றை நேரத்துக்கு ஏற்ற வழக்கமாகக் கடைப்பிடிக்கவும். உடல் அளவிலும், திறன் அளவிலும் நல்ல செழிப்பாக, கூர்மையாக நீங்கள் சொல்வதை கேட்கும் சமத்துக்குட்டியாக இருக்கும் உங்கள் செல்லக்குட்டி.

இதையும் படியுங்கள்:
மாணவர்களே! மேற்படிப்பைத் தொடங்கும் முன் இதையும் கொஞ்சம் பாருங்க!
Dog bite

சிறப்பு விருந்துகள்:

சுவையான விருந்துகளுடன் உங்கள் நாயை ஆச்சரியப்படுத்துங்கள். ஏனென்றால் அதை நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்று புரிய வைப்பதே இதன் மூலம்தான்.

ஒரு நாய் கோபமடைந்து, கடிக்க அச்சுறுத்தும்போது, அமைதியாக இருப்பது மிக அவசியம். இதுபோன்ற தருணங்களில் நாம் மேலும் பின்பற்ற வேண்டிய சிலவற்றை தெரிந்துகொள்வோம்

நகராமல் இருங்கள்:

திடீர் அசைவுகளைத் தவிர்க்கவும். நீங்கள் ஓடவோ அல்லது தாக்கவோ முயற்சி செய்யாமல் இருந்தாலே, ஏஞ்சிருக்கும் அதன் கோபம் குறைய வாய்ப்புகள் அதிகம்.

கண்ணை பார்க்காதீர்கள்:

நாய்கள் கோபமாக குறைக்கும் நேரங்களில் அதன் மீது உள்ள நேரடியான பார்வையைத் தவிர்த்திடுங்கள். இது பல சமயங்களில் பதற்றத்தைத் தணிக்க உதவும்.

மெதுவாக பின்வாங்குங்கள்:

உங்கள் முதுகை திருப்பாமல் விலகிச் செல்லுங்கள். இது எந்தவிதமான ஒரு தாக்குதலை தவிர்க்கவும், பாதுகாப்பான தூரத்தை ஏற்படுத்தவும் உதவும்.

ஒரு பொருளைப் பயன்படுத்தவும்:

உங்களுக்கும் நாய்க்கும் இடையில் ஒரு பொருளை (ஒரு பை அல்லது குடை போன்றவை) வைக்கலாம். இது ஒரு தடையாக செயல்படுகிறது. (அதற்காக கட்டை, கற்கள் போன்றவற்றை எடுக்கக் கூடாது)

கூச்சல் அல்லது திடீர் சத்தத்தைத் தவிர்க்கவும்:

உரத்த சத்தங்கள் நாய்களுக்குப் பதற்றத்தை அதிகரிக்கலாம். ஆகையால் மென்மையாக குரல் கொடுக்கலாம் அல்லது பேசவே வேண்டாம்.

ஓடுவதைத் தவிர்த்திடுங்கள்:

ஓடுவது நாயின் இரை இயக்கத்தைத் தூண்டுகிறது. ஆகையால் அப்படியே அதன் கண்ணைப் பார்க்காமல் இருங்கள். அதுவே அதன் ஆர்வத்தை வேறு திசையில் திருப்பிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com