Gas lighter repair
Gas lighter repair

கிச்சன் கேஸ் லைட்டர் வேலை செய்யலையா? நோ டென்ஷன்… கீழே படியுங்கள்!

Published on

கேஸ் லைட்டர் வேலை செய்யாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதற்கான காரணங்கள் மற்றும் எப்படி சரி செய்வது என்பது குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்.

சமையலறையில் இன்றியமையாத ஒரு பொருள் என்றால் அது கேஸ் லைட்டர்தான். ஒரு டிஷை சமைக்கும்போது செய்முறையிலிருந்து பொருட்கள் வரை அனைத்தையும் தயார் செய்துவிட்டு இறுதியில் கேஸ் லைட்டர் வேலை செய்யவில்லை என்றால் எப்படி இருக்கும்? அட போங்கடா! என்றுதான் தோன்றும்.

வேலைக்கு செல்வோர் காலையில் அவசரமாக சமைக்கும் வேளையில் இது போன்ற சிக்கல்கள் சிரமத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். லைட்டரில் சிறு சிறு பிரச்சனைகள் என்றால் நீங்களே சரி செய்யலாம். கீழ் உள்ள குறிப்புகளை பின்பற்றியும் சரியாகவில்லை என்றால், புதிதாக லைட்டர் வாங்குவது நல்லது.

கேஸ் லைட்டரின் தலைப்பகுதியில் அதாவது நுனி பகுதியில் அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்திருந்தால், முதலில் அதை கவனியுங்கள். ஒரு சிறிய பிரஷ் அல்லது காய்ந்த துணியால் அந்த பகுதியை சுத்தம் செய்யவும். மெல்லிய ஊசியால் உள்ளே இருக்கும் அடைப்புகளை மெதுவாக நீக்கலாம்.

இல்லையெனில் அந்த பகுதியை நெருப்பில் ஒரு 5 முதல் 10 நொடிகள் காட்டுங்கள். பின் காதுக்கு பயன்படுத்தப்படும் பட்ஸ் எடுத்து மெதுவாக க்ளீன் செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
அமானுஷ்ய கோஸ்ட் ரயில்கள் - நீங்கள் பார்த்ததுண்டா?
Gas lighter repair

லைட்டரில் நாம் அமுக்கும் இடத்தில் அழுக்கு அல்லது எண்ணெய் படிந்திருந்தால், பட்டன் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதையும் ஒரு மெல்லிய துணியால் சுத்தம் செய்யுங்கள்.

தீப்பொறியை உருவாக்கும் லைட்டரின் தலைப்பகுதியில் அமைந்திருக்கும் peizo crystal தேய்மானம் அடைய வாய்ப்பிருக்கிறது. அப்படி தேய்மானமானால் தீப்பொறி வராது. இந்த கல் தற்போது உற்பத்தி செய்யப்படும் லைட்டர்களில் மாற்றுவது இயலாத காரியம். ஆகையால் புதிதாக ஒரு லைட்டர் வாங்குவது நல்லது.

சில சமயம் அடுப்பின் பர்னரில் உள்ள துளைகள் அடைப்பட்டிருக்கலாம். அப்போது தீப்பொறி வரும். ஆனால், ஆன் ஆகாது. அதேபோல் திப்பொறி வந்தும் அடுப்பு ஆன் ஆகவில்லை என்றால், சிலிண்டர் ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அல்லது பைப், மற்ற அனைத்தும் சரியாக உள்ளதா என்று சரிசெய்துக்கொள்ளுங்கள். இதற்கு லைட்டர் குறித்த கவலை வேண்டாம்.

கேஸ் லைட்டர்களை சரி செய்யும்போது கவனமுடன் கைய்யாளுங்கள். இது எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட பொருள் இல்லை என்றாலும், கவனமுடன் இருத்தல் நல்லது. சிறு பிரச்சனைகளை நீங்களே பாருங்கள். முழுவதுமாக பிரித்துப் பார்க்க வேண்டிய நிலை வந்தது என்றால், அவசரத்திற்கு தீப்பெட்டி வாங்கிக்கொள்ளுங்கள். இல்லையெனில் புதிதாக லைட்டர் வாங்கிப் பயன்படுத்துங்கள்.

logo
Kalki Online
kalkionline.com