
மனித மற்றும் மிருக ஆவிகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ரயில் வண்டிகளும் ஆவி உண்டு என்பது தெரியுமா உங்களுக்கு? உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கோஸ்ட் ரயில்களை பார்த்தவர்கள் தங்கள் அமானுஷ்ய அனுபவங்களை எழுதி வைத்து போயிருக்கின்றனர். அவைகளில் மிகவும் பிரசித்தம் ஆன ஆவி வண்டி அமெரிக்காவின் வாஷிங்டன் டி சிக்கும் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங் பீல்டுக்கும் இடையே ஒவ்வொரு வருடமும் தோன்றும் 'லிங்கன்'ஸ் பியூனெரல்' என்று அழைக்கப்படும் ரயில் வண்டி ஆகும்.
ஆபிரகாம் லிங்கன் கொல்லப்பட்ட போது அவரது உடல் ஸ்ப்ரிங் பீல்டுக்கு ரயில் மூலம் எடுத்து செல்லப்பட்டதாம். ஆப்ரஹாம் லிங்கன் மறைந்த ஏப்ரல் மாதம் ஒவ்வொரு வருடமும் அந்த ரயில் தோன்றி மறைக்கிறதாம். உண்மையில் இது இரண்டு ட்ரைன்களாக ஒன்றன் பின் ஒன்று ஓடுவது போல் காட்சி அளிக்கிறதாம்.
முதல் ட்ரைனில் சோக பேண்டு வாசித்தபடி ஒரு குழுவும் இரண்டாவது ட்ரைனில் சவப்பெட்டியை சுமந்தபடி ஒரு திறந்த போகியும் செல்லுமாம்.
இந்த ட்ரைனின் இன்னொரு விசேஷம் என்னவென்றால் அது கடந்து போகும் இடங்களிலெல்லாம் கடிகாரங்கள் நின்று போகிறதாம்.
அமெரிக்காவின் லூசியானாவிலும் ஒரு கோஸ்ட் ட்ரெயின் தென்படுகிறதாம். அதன் முகப்பு விளக்கையும், விசில் சத்தத்தை கூட பார்த்தும் கேட்டும் இருக்கிறார்கள்.
வடக்கு கரோலினாவில் 1891 நேர்ந்த ரயில் விபத்து காட்சிகள் தோன்றி தோன்றி மறைகிறதாம்.
கனடாவில் ரயில் இருப்பு பாதை இல்லாத ஒரு இடத்தில் ஒரு கோஸ்ட் ரயிலின் ஓட்டம் தெரிகிறதாம்.