பொதுவாக ஒருவர் Introvert என்றால். ‘திமிரு புடிச்சவன், யார்கிட்டயும் பேச மாட்டான், மூஞ்சிய தூக்கி வச்சுட்டே இருப்பான்’ என்றுதான் ஏளனம் செய்வார்கள். ஆனால், உண்மையில் உள்முகச் சிந்தனையாளர்களாக இருப்பவர்கள் (introvert) அதிகம் பேசுவதை விரும்பமாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் தனிமையைத்தான் விரும்புவார்கள். வெளிப்படை தன்மை உடையவர்கள், தனது பார்ட்னராகவோ, நண்பராகவோ இருந்தால் அவர்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். பொதுவாக, Introverts எப்படி இருப்பார்கள்? அவர்களை எப்படிப் புரிந்துகொள்வது? என்பதைத் இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
1. Introverts எப்போதும் மொபைலில் மெசேஜ் செய்யவே விரும்புவார்கள். போன் கால் செய்வதைவிட மெசேஜ் செய்வது, மெயில் அனுப்புவதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
2. Introverts வெளியில் ஷாப்பிங் செய்ய செல்லும்போதும் அல்லது வார இறுதி நாட்கள் வெளியில் சென்று சுற்றிப் பார்க்கும்போதும் தனியாக செல்லவே விரும்புவார்கள். தங்களுக்கான முழு நேரத்தையும் தனக்காகவே செலவிடுவார்கள். தன்னை யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். தங்களுடைய விருப்பத்தில்தான் முதலில் கவனம் செலுத்துவார்கள்.
3. Introverts அவர்களின் உணர்வுகளை யாரிடமாவது சொல்லி ஆறுதல் அடைய வேண்டும் என்று நினைத்தாலும் அது அவர்களுக்குக் கடினமாகவே இருக்கும். பெரும்பாலும் அவர்கள் தங்கள் உணர்வுகளை நோட்டிலோ அல்லது டையிரிலோ எழுதி வைத்துக்கொள்வார்கள்.
4. ஒருவர் introvert என்றால் யாரிடமும் பேச மாட்டார்கள் என்றுதான் நினைப்போம். ஆனால், உண்மையில் அது அப்படி அல்ல. அவர்கள் யாரிடமாவது மிகவும் நெருங்கிப் பழகி விட்டார்கள் என்றால் அவர்களுடனான பேச்சை நிறுத்தவே மாட்டார்கள். இவர்கள் அதிக பேருடன் நட்பு கொள்ள மாட்டார்கள். ஆனால், ஒருவரிடம் பழகி விட்டார்கள் என்றால் மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒருவேளை அந்த நண்பர்கள் பிரிந்தால் அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
5. Introverts பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங்கே செய்வார்கள். ஒரு பொருள் வாங்கும்போது அதனுடைய ரேட் பற்றி. அந்தப் பொருளைப் பற்றி கேட்டு கலந்துரையாடி வாங்குவது அவர்களுக்குப் பிடிக்காத ஒன்று. அதனால் அந்தப் பொருட்களை பற்றி ஏற்கெனவே பதிவிட்டு, ரேட்களும் ஏற்கெனவே இருக்கும் ஆன்லைன் ஷாப்பிங்தான் தேர்ந்தெடுப்பார்கள்.
6. Introverts அதிகமாக கற்பனை கதைகள் படித்து தனக்கான ஒரு கற்பனை உலகத்தில்தான் எப்போதும் இருக்க விரும்புவார்கள்.
Introverts பற்றிய இந்த குணாதியசங்களைத் தெரிந்துகொண்டாலே அவர்களை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.