இன்றைய நவீன வாழ்க்கை முறையில் தினசரி பயன்படுத்தப்படும் பொருட்களில் செண்ட் (Perfume) பாட்டில்கள் முக்கியமானவை. செண்ட் தீர்ந்ததும் அவற்றை பயனற்றதாக கருதி குப்பையில் வீசாமல் சிறிது சிந்தனை மற்றும் படைப்பாற்றல் இருந்தால், இந்த காலியான செண்ட் பாட்டில்களை பல விதங்களில் மறுபயன்பாடு செய்ய முடியும். இதை வைத்து வீட்டிலும், பயணத்திலும் பயன்படும் எளிய டிப்ஸ்களை பார்க்கலாம்.
முதலில் தீர்ந்து போன செண்ட்பாட்டில்களை எடுத்து அதன் சில்வர் மூடியை screwdriver வைத்து கழற்றி விட்டு கட்டிங் பிளேயர் கொண்டு இழுத்து எடுத்தால் நன்கு கழன்று வந்து விடும். பின்னர் பாட்டிலின் மேல் பகுதியில் இருக்கும் பேப்பர் டிசைன்களை நெயில் பாலீஷ் remover அல்லது பாத்திரம் தேய்கும் நார் வைத்து தேய்த்து சுத்தப்டுத்தவும். பின்னர் செய்ய ஆரம்பிக்கலாம்.
உங்களுடைய Perfume தீர்ந்துவிட்டதா? உடனே வாங்க...
1. Paper weight: சதுரமாக இருக்கும் பாட்டிலை எடுத்து அதனுள் சிறிய கடல் சிப்பிகள் சிலவற்றை சுத்தப்படுத்தி ஒவ்வொன்றாக போட்டு விட்டு கிளிற்டர்ஸ் அல்லது ஜிக்னா போட்டு, அத்துடன் சிறிது நீலக்கலர் food colour , கால் அளவு தண்ணீர் மற்றும் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி மூடி பகுதியில் Home Clay வைத்து நன்கு மூடி குலுக்கி பார்த்தால் அருமையான paper weight கிடைக்கும்.
2. ஒரு பாட்டிலை எடுத்து Golden money plant போட்டு வளர விட்டால் மிகவும் அழகான அலங்காரமாக இருக்கும்.
3.Room Freshener (மணமூட்டும் ஸ்ப்ரே): பாட்டிலை நன்றாக கழுவி, தண்ணீர் + சிறிது எசென்ஷியல் ஆயில் (லேவண்டர்/லெமன்) சேர்த்து பயன்படுத்தலாம். அறை, கார், அலமாரிகளில் மணம் தரும். காருக்கான Air Freshener சிறிய செண்ட் பாட்டில்களில் கார் வாசனை திரவம் நிரப்பி பயன்படுத்தலாம்.
4.கை Sanitizer / Alcohol Spray: காலியான பாட்டிலில் கை சுத்திகரிப்பு திரவம் நிரப்பி, பயணங்களில் எளிதாக எடுத்துச் செல்லலாம். பயண Mini Bottle லாக ஷாம்பு, லோஷன், எண்ணெய் போன்றவற்றை சிறிய அளவில் வைத்துச் செல்ல உதவும்.
5.முடி ஸ்ப்ரே: ரோஸ் வாட்டர் அல்லது Hair mist நிரப்பி, முகம்/முடிக்கு லைட் ஸ்ப்ரே ஆக பயன்படுத்தலாம்.
6. Water Spray: சிறிய செடிகளுக்கு மென்மையாக நீர் தெளிக்க இது சிறந்தது.
7.பூச்சி விரட்டி ஸ்ப்ரே: நீர் + சிறிது வினிகர்/நீம் எண்ணெய் சேர்த்து வீட்டில் பூச்சி விரட்டி ஸ்ப்ரே ஆக பயன்படுத்தலாம்.
மூடிகளை பயன்படுத்துவது எப்படி
ஒரு பாட்டில் மூடியை நன்கு சுத்தப்படுத்தி எடுத்து அதனுள் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும் stand ஆக பயன்படுத்தலாம்.
மற்றொரு மூடியை எடுத்து அதனுள் Home Clay எடுத்து நிரப்பி 5 துவாரம் குத்தி வைத்து விட்டால் அதனை ஊதுபத்தி Holder ஆக பயன்படுத்தலாம்
சில மூடிகள் கதவு கைப்பிடி Shap-ல் இருக்கும். அந்த மூடியை எடுத்து ஃபெவிகுயிக் தேய்த்து, உடைந்திருக்கும் கதவு handle அலமாரி handle, ட்ராயர் ஃபிரிட்ஸ் door handle போன்ற இடங்களில் பொருத்தி மீண்டும் பயன்படுத்தலாம்.
தீர்ந்து போன செண்ட் பாட்டில்கள் பயனற்றவை அல்ல; அவை நமக்கு பல்வேறு வழிகளில் உதவும் சிறிய கருவிகளாக மாறக்கூடியவை. அவற்றை மறுபயன்பாடு செய்வதன் மூலம் குப்பை குறையும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும், மேலும் நம் வீட்டிலும் வாழ்க்கையிலும் ஒழுங்கும் வசதியும் அதிகரிக்கும்.
எனவே இனிமேல் செண்ட் பாட்டில் காலியானதும் அதை தூக்கி எறியாமல், பயனுள்ள பொருளாக மாற்றிக் கொள்வது நம் ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பாக இருக்க வேண்டும்.
உங்களுடைய Perfume தீர்ந்துவிட்டதா? உடனே வாங்க...