உங்கள் பால்கனியில் காகம் இப்படி கத்தினால், ஜாக்கிரதை! நடக்கப்போகும் விபரீதம் இதுதான்!

Crow
Crow
Published on

நமது முன்னோர்களின் நம்பிக்கைகளிலும், ஜோதிட சாஸ்திரத்திலும் காகத்திற்கு ஒரு மிக முக்கிய இடம் உண்டு. அது வெறும் ஒரு பறவையாகப் பார்க்கப்படவில்லை; பித்ருக்களின் பிரதிநிதியாகவும், எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் ஒரு தெய்வீக தூதனாகவும் கருதப்படுகிறது. காகத்தின் ஒவ்வொரு அசைவும், அது எழுப்பும் ஒலியும், அது அமரும் திசையும்கூட நல்ல மற்றும் தீய சகுனங்களைக் குறிப்பதாக 'காக சாஸ்திரம்' விரிவாகக் கூறுகிறது.

காகமும் ஜோதிடப் பின்னணியும்!

ஜோதிடத்தின் பார்வையில், காகம் சனீஸ்வர பகவானின் வாகனமாகும். இதனால், காகத்தின் செயல்பாடுகள் சனி கிரகத்தின் தாக்கத்தோடு நேரடியாகத் தொடர்புபடுத்தப்படுகின்றன. மேலும், மரணத்தின் அதிபதியான யமதர்மனின் தூதுவர்களாகவும் காகங்கள் கருதப்படுவதால், நடக்கவிருக்கும் நன்மை தீமைகளை முன்கூட்டியே அறியும் ஆற்றல் அவற்றுக்கு இருப்பதாக ஒரு வலுவான நம்பிக்கை நிலவுகிறது. இதனாலேயே, மக்கள் காகங்களின் நடவடிக்கைகளை ஆழமாகக் கவனிக்கத் தொடங்கினர்.

உங்கள் வீட்டு பால்கனியில் காகங்கள் கூட்டமாக அமர்ந்து இடைவிடாமல் ஒலி எழுப்புவதைக் கண்டால், அது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் தேவையற்ற சச்சரவுகள், உடல்நலக் குறைபாடுகள் அல்லது ஏதேனும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடக்கவிருப்பதை அந்த காகங்கள் உணர்த்துவதாக நம்பப்படுகிறது. 

குறிப்பாக, ஒரு காகம் தெற்கு திசையை நோக்கி அமர்ந்து கரைப்பது அத்தனை உகந்ததாகக் கருதப்படுவதில்லை. அது, நம்முடைய முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையாமல் இருப்பதாகவும், அதன் விளைவாக 'பித்ரு தோஷம்' ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

நற்செய்தி கொண்டுவரும் காகங்கள்!

காகங்கள் எப்போதுமே துக்க செய்திகளை மட்டுமே கொண்டு வருவதில்லை; அவை சுப செய்திகளையும் சுமந்து வருகின்றன. நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்காக அல்லது ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்லும் போது, ஒரு காகம் பாத்திரத்தில் உள்ள நீரைக் குடிப்பதைப் பார்த்தால், அது மிகவும் நல்ல சகுனமாகும். அந்த நிகழ்வு, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள் என்பதையும், எதிர்பாராத பணவரவு உங்களைத் தேடி வரும் என்பதையும் குறிக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை - செல்போன் பார்த்த காகம்
Crow

அதேபோல், ஒரு காகம் தன் அலகில் ஒரு ரொட்டித் துண்டையோ அல்லது வேறு ஏதேனும் உணவுப் பண்டத்தையோ கவ்விக்கொண்டு உங்கள் கண்முன்னே பறந்து சென்றால், அது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய அறிகுறியாகும். உங்கள் மனதில் நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்த ஒரு பெரிய விருப்பம் அல்லது கனவு விரைவில் நனவாகும் என்பதை அந்த காகம் உங்களுக்கு சூசகமாகத் தெரிவிக்கிறது.

காகங்களின் செயல்பாடுகளை சகுனங்களாகக் கருதுவது என்பது நமது கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு நம்பிக்கையாகும். அவை நல்ல சகுனங்களையும், வரவிருக்கும் ஆபத்துகளுக்கான எச்சரிக்கைகளையும் ஒருசேர வழங்குகின்றன. இந்த நம்பிக்கைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் தனிப்பட்ட மனநிலையைப் பொறுத்தது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com