காகம் கரைந்தால் நிஜமாகவே விருந்தினர் வருவார்களா? உண்மை மற்றும் நம்பிக்கை!

Is the cawing of a crow a sign of guests arriving?
crow cawing
Published on

மிழ் சமூகம் பழங்காலம் முதலே இயற்கையோடும் உயிரினங்களோடும் நெருங்கிய தொடர்பில் வாழ்ந்து வருகிறது. அந்த வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் பல நாட்டுப்புற நம்பிக்கைகள் உருவாகின. அவற்றில் ஒன்றாக, வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்த்தும் சில அறிகுறிகள் பற்றிய நம்பிக்கைகளும் கூறப்படுகின்றன. அந்த அறிகுறிகள் உண்மையா அல்லது மனித அனுபவத்தின் விளைவாக உருவான நம்பிக்கைகளா என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

காகம் ஒரு வித்தியாசமான சத்தத்தில் கரையும்போது, ‘இன்று விருந்தினர்கள் வருவார்கள்’ என்று நினைக்கிறேன் என்று பெரியவர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். அதேபோல விருந்தினர்கள் வருவதும் உண்டு. காகம் எந்த திசையை நோக்கிக் கரைகிறது அந்த திசையிலிருந்து விருந்தினர்கள் வருவார்கள். இது வெறும் சொல் அல்ல, உண்மையில் நடைபெறும் விஷயமாகும். ‘காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள்’ என்பது பழைமையான நம்பிக்கை (நாட்டுப்புறச் சொல்லாட்சி) என்பதே சரியான விளக்கம்.

இதையும் படியுங்கள்:
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் மூளையில் நடக்கும் அதிசயம்!
Is the cawing of a crow a sign of guests arriving?

ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது: காகம் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு அருகிலேயே அதிகமாக இருக்கும் பறவை. வீட்டின் முன், மாடி, மரம் போன்ற இடங்களில் காகம் கரையும்போது, அதேநேரத்தில் யாராவது வருவது ஒரு சம்பவ ஒத்திசைவு (coincidence). இப்படிப் பலமுறை நடந்ததால், மக்கள் நினைவில் அது நம்பிக்கையாக பதிந்தது.

அறிவியல் பார்வை:

காகம் கரையக் காரணங்கள்: உணவு தேடல், மற்ற காகங்களை அழைத்தல், ஆபத்து எச்சரிக்கை, இட உரிமை (territory) பாதுகாப்பு, மனித வருகையுடன் இதற்கு நேரடி தொடர்பு இல்லை. கிராமிய வாழ்க்கையில் திடீர் விருந்தினர் வருகை, காகம் கரையும் சத்தம் இரண்டும் சாதாரணமானவை. மனித மூளை ‘நடந்ததை மட்டும் நினைத்து, நடக்காததை மறந்து விடும்’ (confirmation bias). ஆன்மிகக் கோணத்தில் சிலர் இதை நல்ல அறிகுறி என்று கருதுவர்.

சில பழமொழிகள்: ‘காகம் கரைந்தால் விருந்தினர் வருவார், காகம் கூவினால் செய்தி வரும்’ இவை சம்பவ ஒத்திசைவு காரணமாக உருவான பழமொழி மற்றும் விருந்தினர் வருவதற்கான பழைய கால அறிகுறிகள். ‘பூனை தரையில் உட்கார்ந்து கையை நக்கினால் விருந்தினர்கள் வருவார்கள்’ எனக் கூறப்படுவதுண்டு. அரிசி புடைக்கும்போது முறம் தவறி விழுந்தால், வீட்டுக் கதவு தானாக திறந்தால் யாரோ வரப்போகிறார்கள் என்றும் சிலர் நம்புவர். திடீரென வீட்டில் கலகலப்பு சத்தம் அதிகரித்தால் விருந்தினர் வருகைக்கு முன் சூழ்நிலை மாறும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஃபோனில் பேசுவதை விட மெசேஜ் அனுப்பத்தான் இளைய தலைமுறைக்கு அதிகம் பிடிக்கிறது! ஏன் தெரியுமா?
Is the cawing of a crow a sign of guests arriving?

அடுப்பில் சமையல் அதிகமாகத் தோன்றினால் ‘வீட்டில் விருந்து இருக்கப்போகிறது’ என்ற நம்பிக்கை. வீட்டில் திடீரென பொருள் கீழே விழுவதால் வெளியில் இருந்து யாரோ வரப்போகிறார்கள் என்பர். நாய் திடீரென வால் ஆட்டி மகிழ்ச்சியுடன் ஓடுவது யாரோ வரப்போகிறார்கள் என்ற நம்பிக்கை. வீட்டு முன் பறவைகள் அதிகமாகச் சுற்றுவது விருந்தினர் வருகை சின்னமாகக் கருதுவர்.

ஆன்மிக / பண்பாட்டு அறிகுறிகள்: வீட்டில் விளக்கு திடீரென மங்கலாக அல்லது பிரகாசமாக எரிவது விருந்தினர் வருகையின் சின்னம். திடீரென இனிய வாசனை உணரப்படுவதை நல்ல மனிதர்கள் வருவார்கள் என்பர். கனவில் ஒருவரைப் பார்ப்பது விரைவில் அவரை சந்திப்போம் என்று நம்புவர்.

விருந்தினர்கள் வருவதற்கான அறிகுறிகள் என்று சொல்லப்படுபவை பல்வேறு சம்பவங்களில் நிகழும் ஒத்திசைவுகளின் காரணமாக அவை உண்மை போலத் தோன்றுகின்றன. இருப்பினும், இந்த நம்பிக்கைகள் தமிழர் பண்பாட்டின் ஒரு அங்கமாகவும், சமூக உறவுகளை இனிமையாக்கும் எண்ணங்களாகவும் இருந்து வருகின்றன. ஆகவே, அவற்றை முழுமையாக மறுப்பதற்கும், கண்மூடித்தனமாக நம்புவதற்கும் இடையே சமநிலையைப் பேணுவது அவசியம். பண்பாட்டை மதித்து, அதேசமயம் அறிவியல் சிந்தனையையும் கடைப்பிடிப்பதே சிறந்த அணுகுமுறையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com