மனதை கட்டுப்படுத்த முடியாவிட்டால், குகையில் போய் வாழ்வதில் லாபமில்லை!

ஜூலை 4, சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்
Swami Vivekananda
சுவாமி விவேகானந்தர்https://www.firstpost.com
Published on

ன்று சுவாமி விவேகானந்தர் நினைவு நாள். (பிறப்பு 12.01.1863 - நிறைவு 04.07.1902) அவரின் நினைவு நாளில் அவருடைய கருத்துக்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

தூய வாழ்வை எப்படி அடைவது? நாம் எல்லோரும் காட்டுக் குகைக்கா போவது? அது எந்த பலனைச் செய்யும்? மனதை கட்டுப்படுத்த முடியாவிட்டால், குகையில் போய் வாழ்வதில் லாபமில்லை! மனத் தொல்லைகள் அங்கும்தான் இருக்கும். மனதைக் கட்டுப்படுத்த முடிந்தால், குகை நாம் இருக்கும் இடத்திற்கு வரும்.

எழுந்து நில், தைரியமாக இரு, வலிமையுடன் இரு, பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீது சுமந்துகொள். உன் விதியைப் படைப்பவன் நீயே என்பதை அறிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடி கொண்டிருக்கின்றன.

உங்கள் சகோதரர்களுக்குத் தலைமை வகிக்க முயல வேண்டாம். அவர்களுக்கு ஊழியம் செய்யுங்கள். தலைமை வகிக்கும் பைத்தியம் வாழ்க்கை என்ற கடலில் எத்தனையோ பெரிய பெரிய கப்பல்களை எல்லாம் மூழ்கடித்துவிட்டது.

மரணம் நேரினும் சுயநலம் கருத வேண்டாம். தொண்டினை மறக்க வேண்டாம். உனக்கு உதவியவரை ஒருபோதும் மறக்காதே, உன்மேல் அன்பு கொண்டவரை ஒருபோதும் வெறுக்காதே, உன்னை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றாதே.

முன்னேறிச் செல்லுங்கள். அளவற்ற சக்தி, அளவற்ற ஊக்கம், அளவற்ற தைரியம், அளவற்ற பொறுமை ஆகியவை நம்மிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் மகத்தான பணிகளைச் சாதிக்க முடியும்.

கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒருபோதும் பாவம் செய்வதில்லை. மனதால் கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை.

கீழ்ப்படிந்து நடப்பது என்ற நற்குணத்தை  வளர்த்துக்கொள். ஆனால், உன் சொந்த நம்பிக்கையை மட்டும் கைவிடாதே. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே செர்க்கமாகிவிடும்.

நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, உன் சுக துக்கங்களை மறந்து வேலை செய். அதுதான் இப்போது கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம்.

வலிமை, அளவற்ற வலிமை - அதுவே நமக்கு இப்போது தேவை என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எது கடினமானதோ அதைத் தவிர்த்துகொண்டே இருந்தால், நாம் ஒரு அடி கூட முன்னேற முடியாது.

எப்போதும் விரிந்து மலர்ந்த கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மரணம்தான்.

பொறாமையை ஒழியுங்கள். இன்னும் செய்ய வேண்டியிருக்கும் பெரிய வேலைகளை எல்லாம் செய்யும் ஆற்றல் பெறுவீர்கள். தன்னை அடக்கப் பழகிக் கொள்பவன் வேறு எதற்கும் சிக்க மாட்டான். ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்தி கொள்வதைவிட, அனைத்தும் நமக்கான பாடம் என்று அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை சிறக்கும்.

யாரும் தானாக மாறுவதில்லை. யாரோ ஒருவரால் மாற்றப்படுகிறோம். நல்லவனாக, கெட்டவனாக, அறிவாளியாக, ஏமாளியாக, முட்டாளாக.

இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகம் பொறுப்புகளைக் கொடுத்து அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறார்.

கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதில்லை. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ரொட்டிப் பழத்தில் உள்ள எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Swami Vivekananda

எந்த நாடு பெண்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையோ, எந்தச் சமுதாயம் பெண்களை மேன்மைப் படுத்தவில்லையோ, அந்த நாடும் சமுதாயமும் இப்போது மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் உயர்வடையப் போவதில்லை.

இந்தியர்களாகிய நமக்கு ஒரு பெரும் குறை இருக்கிறது. நம்முடைய அதிகாரத்தை பிறருடன் பகிர்ந்துகொள்ள நாம் விரும்புவதில்லை. நமக்குப் பின்னால் என்ன ஆகும் என்பதைச் சிந்திப்பதில்லை.

பிற நாட்டின் உதவியை என்றுமே எதிர்பார்த்து நிற்கக் கூடாது. நாடுகளும் தனிப்பட்டவர்களைப் போல, தாமே தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதுதான் உண்மையான தேச பக்தி. எந்த பெரிய காரியமும் ஏமாற்று வித்தைகளின் மூலம் சாதிக்கப்படவில்லை என்பது என்னுடைய திடமான தீர்மானம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com