காணி நிலம் இருந்தால்... 'மனி' நிலமாக்க 3 வழிகள்!

Land
Land

ஒரு பரந்த செழிப்பான இடத்தில் நீங்கள் கிழக்கு திசையை நோக்கி நிற்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சமயம் சூரியன் உங்கள் முகத்தில் சுளீரென்று அடிக்கிறது. போக போக வெப்பம் உங்கள் உடம்பில் கூடுகிறது. காற்றடிக்கும் போது மறுபுறம், பச்சை பசேலென்ற நெடிந்துயர்ந்த புல்வெளி காற்றில் லேசாக ஆடுவதை பார்க்கையில் உங்களுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இப்போது நீங்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம். அந்தப் பரந்து விரிந்த இடத்தில் உங்கள் கனவு வீட்டைக் கட்டப் போறீங்களா, இல்லை வாடகைக்கு அந்த இடத்தை விடப்போறீங்களா அல்லது பசுமையான சோலையாக அவ்விடத்தை மாற்றுவீர்களா?

1. உங்கள் கனவு இல்லம்

நீங்கள் உங்கள் சொந்த வீட்டை, உங்கள் கனவு இல்லத்தைக் கட்ட ஆசைப்பட்டால், அதன் தொடக்கம் முதலே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டை வடிவமைப்பிலிருந்து,பெயிண்டின் கலர் வரை எல்லாமே உங்கள் ஆசைப்படித்தான் நடக்கும். வீடு என்பது ஒரு நிலையான சொத்து. நிலத்தின் மதிப்பு எவ்வளவு உயருகிறதோ அது போல உங்கள் வீட்டின் நிகர மதிப்பும் காலம் போக போக உயர்ந்துகொண்டே போகும். புதிதாக நீங்கள் கட்டிய வீட்டில் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு நிம்மதி கலந்த மனதிருப்தியுடன் வாழலாம். அடுதது வரும் சந்ததியினரின் வாழ்விலும் நீங்கள் கட்டிய வீடு ஒரு பெரும் பங்காற்றும்.

ஆனால், நிஜத்தில் ஒரு வீட்டைக் கட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல. கட்டுமான பொருட்களை கொள்முதல் செய்யும் முதல், அரசிடம் முறையான பத்திரம் வாங்கும் வரை என பல விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு வீட்டைக் கட்டுவதற்கு பொறுமை மிகவும் அவசியம். சில நேரங்களில் இயற்கை மாற்றங்களால் தாமதம் ஆகலாம். அதுபோல் கட்டினது சின்ன வீடோ இல்லை பெரிய வீடோ எது இருந்தாலும் பராமரிப்பு ரொம்ப அவசியம்.

இதையும் படியுங்கள்:
ஸ்டாயிஸிச தத்துவத்தைப் பயன்படுத்துவதன் 6 பயன்கள்!
Land

2. நிலத்தை வாடகைக்கு விடுதல்:

நிலத்தை வாடகைக்கு விடுவதால் மாதா மாதம் நம் பாக்கெட்டுக்கு பணம் வருவது உறுதி. நீங்கள் இப்போதைக்கு இந்த இடத்தில் வீடு கட்ட போவதில்லை என்று நினைத்தால், இதை வைத்து வேறு என்னென்ன செய்யலாம் என்று யோசிக்க நேரம் கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உங்களுக்கு உண்டாகும். மேலும், நிலத்தைப் பராமரிப்பதற்கான செலவுகள் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அனைத்தும் சம்பந்தப்பட்ட குத்தகைதாரரே பார்த்துக்கொள்வார்.

பல நேரங்களில் நீங்கள் நம்பி குத்தகைக்கு விடும் குத்தகைதாரர் நீங்கள் நினைப்பதுபோல் நல்ல குணம் படைத்தவராக இல்லாமல் போகலாம். அதனால் பல நேரங்களில் உங்களுக்கு வரவேண்டிய வாடகை தொகைகள் வர தாமதம் ஆகலாம். இயற்கை அழிவினால்கூட சில நேரங்களில் உங்களுக்கு வர வேண்டிய லாபம் தடைபடலாம்.

3. பசுமையான சூழ்நிலையை உருவாக்கலாம்:

மரங்களை வளர்ப்பதே ஒரு தனி சுகம்தான். உங்கள் தோட்டத்தில் நீங்கள்தான் ராஜா. ஒரு கட்டிலிலோ அல்லது நாற்காலியோ போட்டு ஒரு நல்ல தூக்கத்தை உணர்ந்து பார்த்தால்தான் தெரியும் அதன் அருமை. அதுபோல் காய்,கனி பயிரிடுவதின் மூலமாக நல்ல லாபத்தை பார்க்கலாம்.

ஆனால், இதிலும் இயற்கை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் சவால்களைச் சந்திக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com