
நம் அனைவருக்கும் வாழ்வில் சில விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். திருமணம், நல்ல வேலை, நல்ல வாழ்க்கை துணை, குழந்தை எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பல ஆசைகள் நம் மனதில் இருக்கும். Law of attraction படி ஒரு விஷயத்தை மிகவும் ஆழமாக நம்பும் போது அது நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை உணர்த்தும் 5 அறிகுறிகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. ஏஞ்சல் நம்பர்.
ஒரே மாதிரி நாம் பார்க்கக்கூடிய சில எண்களை ஏஞ்சல் நம்பர் என்று சொல்வார்கள். 111, 222, 333 போன்ற எண்களுக்கு தனித்துவமான சில காரணங்கள் இருக்கின்றது. இந்த எண்களை அடிக்கடி காணக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் அந்த எண்ணுக்கான காரணம் உங்கள் வாழ்க்கையில் விரைவில் நடக்கப் போகிறது என்று அர்த்தம்.
2. எதிர்ப்பாரத நபரின் தொடர்பு.
நம்முடன் பல வருடங்களாக மிகவும் நெருக்கமான நபராக பழகி இருந்தவர்களிடம் இருந்து திடீரென்று வரும் அழைப்பு அல்லது மெசேஜ் நம் வாழ்க்கையில் அந்த நபரின் மூலமாக குறிப்பிட்ட மாற்றம் நிகழப் போவதை உணர்த்துவதாக இருக்கும்.
3. அதிர்ஷ்டமான பொருட்கள்.
நீங்கள் அதிர்ஷ்டம் என்று சில விஷயங்களை நினைத்திருப்பீர்கள். அது பொருளாக இருக்கலாம், உயிரினமாக இருக்கலாம். அத்தகைய பொருளோ அல்லது உயிரினமோ உங்கள் கண்களில் அதிகம் படக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இதுப்போன்ற சூழ்நிலைகள் உங்களுக்கு நல்ல நேரம் ஏற்படப் போகிறது, உங்களுக்கு அதிர்ஷ்டம் வர போகிறது என்பதை குறிக்கக்கூடிய அறிகுறிகளாகும். வீட்டிற்கு சிட்டுக்குருவி, குளவி, காகம் வருவதை மக்கள் அதிர்ஷ்டமாக கருதுவார்கள்.
4. காலையில் தோன்றும் யோசனைகள்.
விடியற்காலையில் எழுந்திருக்கும் நபர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், காலையில் எழும்போது ஏற்படும் யோசனைகள் பெரும்பாலும் வெற்றியைத் தரும் என்று சொல்லப்படுகிறது. இந்த அறிகுறியும் உங்கள் லட்சியத்தை சீக்கிரம் அடையப் போகிறீர்கள் என்று சொல்லக்கூடிய வழிமுறையாகக் கருதப்படுகிறது.
5. பொருள் தொலைந்துப்போதல்.
நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் நெகட்டிவ் எனர்ஜிகளை தரக்கூடியதாக இருக்கும். அத்தகைய பொருட்கள் திடீரென்று தொலைந்துப் போவது நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான வழி என்று சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு செருப்பு தொலைந்து போவதை சிலர் நல்லது என்று சொல்வார்கள். இந்த 5 அறிகுறிகளில் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் நடந்திருக்கிறதா? என்று சொல்லுங்க பார்க்கலாம்.