முட்டை - பால் - இறைச்சி - ஒரு கப் சோயா... நோய்களில் இருந்து தப்பிக்க எது பெஸ்ட்?

Which is best?
Which is best?
Published on

முட்டை, பால் மற்றும் இறைச்சியில் உள்ள புரதத்தை விட அதிக புரதம் உள்ள சோயாபீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், பல நோய்களில் இருந்து தப்பிக்க முடியும்.

சோயாபீனில் நிறைய புரதம் உள்ளது. இது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் உள்ள புரதத்தை விட அதிகம். இது தவிர, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இதில் போதுமான அளவில் காணப்படுகின்றன. இது உடலின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தவிர பல நோய்களுக்கான சிகிச்சையிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சோயாபீன் சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தின் களஞ்சியம்:

புரதச் சத்து குறைபாட்டைப் போக்க அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றை உட்கொள்கிறார்கள். ஆனால் சைவ உணவு உண்பவர்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுக்கான தேர்வில், சோயாபீன் சிறந்த தேர்வாகும். ஏனெனில் இதில் முட்டை, பால் மற்றும் இறைச்சியில் காணப்படும் புரதத்தை விட அதிகமாக உள்ளது.

சோயாபீன்ஸில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்:

சோயாபீன் பலவிதமான சத்துக்களின் ஆதாரமாகும். அதன் முக்கிய கூறுகள் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள். சோயாபீனில் 36.5 கிராம் புரதம், 22 சதவீதம் எண்ணெய், 21 சதவீதம் கார்போஹைட்ரேட், 12 சதவீதம் ஈரப்பதம் மற்றும் 5 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.

பால்-முட்டை மற்றும் சோயாபீனில் காணப்படும் புரதம்:

சோயாபீன்ஸ் (100 கிராம்) 36.5 கிராம் புரதம். ஒரு முட்டை (100 கிராம்) 13 கிராம் புரதம். பால் (100 கிராம்) 3.4 கிராம் புரதம். இறைச்சி - (100 கிராம்) 26 கிராம் புரதம். ஆகவே சோயாபீன்ஸில் அதிக அளவு புரதம் இருக்கிறது.

தினமும் எந்த அளவு சோயாபீன் சாப்பிடலாம்?

நீங்கள் ஒரு நாளைக்கு 100 கிராம் சோயாபீன்ஸ் சாப்பிடலாம். 100 கிராம் சோயாபீனில் உள்ள புரதத்தின் அளவு சுமார் 36.5 கிராம். ஒரு நாளைக்கு ஒரு முறை இதைப் பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு பெரும் நன்மைகள் கிடைக்கும். புரதச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இது நல்லது.

சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1. சோயாபீன்களில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பல வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவுகின்றன.

2. சோயாபீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துகின்றன.

3. புரதம் நிறைந்த சோயாபீன் உட்கொள்வது வளர்சிதை மாற்ற அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

4. சோயாபீன் உட்கொள்வது செல்களின் வளர்ச்சிக்கும், சேதமடைந்த செல்களை சரிசெய்யவும் உதவுகிறது.

5. சோயாபீன் மனதையும் மூளையையும் கூர்மைப்படுத்துகிறது.

6. சோயாபீன் உட்கொள்வது இதய நோய்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

பெண்களுக்கு குறிப்பாக மெனோபாஸ் சமயத்தில் உண்பதால் உண்டாகும் நன்மை:

பல பெண்களுக்கு மாதவிடாய் நாட்களிலும் அது முடிந்த பின்பும் ஹாட் ஃப்ளாஷ் (வெப்ப ஒளிக்கீற்று) ஏற்பட்டிருக்கலாம். உடலில் எஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களினால், மாதவிடாய் நின்ற சமயத்தில், ஹாட் ஃப்ளாஷ்கள் மிகவும் பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. மனநிலை ஊசலாட்டம், இரவு வியர்வுகள், மற்றும் சோர்வு போன்ற பிற மாதவிடாய் அறிகுறிககளை ஐசோபிளவோன் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மாதவிடாய் நின்ற நிலைக்கான சிகிச்சை முறையாக, ஐசோபிளவோன் கருதப்படுகிறது அல்லது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஐசோபிளவோன், சோயாவில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
நிம்மதியான வாழ்க்கைக்கு எது முக்கியம் தெரியுமா?
Which is best?

சர்க்கரை நோயாளிகளுக்கு சோயா:

தனி நபர்கள், அவர்களின் உடல், சர்க்கரை அளவுகளை முறைப்படுத்தும் பொறுப்பைக் கொண்ட இன்சுலினைப் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யாமல் இருப்பதாலோ, அல்லது கணையத்தினால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை, அவர்களது உடல் திறம்படப் பயன்படுத்த இயலாமல் இருப்பதாலோ, நீரழிவு நோயாளிகளாக மாறுகின்றனர். பின்னர், உடல் பருமன் காரணமாக ஏற்படும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஏற்படுகிறது.

சோயாபீன் உட்கொள்வது, உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதன் மூலம், இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைக் குறைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்து இருக்கின்றனர்.

இரத்த சோகைக்கு மிகவும் ஏற்றது சோயாபீன்ஸ்:

இரும்புச்சத்து குறைபாட்டு இரத்த சோகையின் மீது, சோயாபீன்ஸ், ஒரு சாதகமான விளைவைக் கொண்டிருக்கக் கூடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இரத்த சோகையைக் கொண்ட விலங்கு மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, சோயாபீன் அளிப்பது, இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையில் ஒரு அதிகரிப்பு,, மற்றும் ஹீமோகுளோபின் அளவுகளில் ஒரு மேம்பாடு, ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது என சுட்டிக் காட்டியது.

ஃபெர்ரிட்டின் என்பது, இரும்புச்சத்தினை சேமித்து, தேவைப்படும் பொழுது விடுவிக்கும் ஒரு வகை புரதம் ஆகும். சோயாபீனில் ஏற்கனவே கொஞ்சம் ஃபெர்ரிட்டின் இருக்கிறது. அது இரும்புச்சத்தினை சேமித்து வைக்க உதவுகிறது. ஃபெர்ரிட்டினுடன் உயிர் வலுவூட்டல் செயல்பாடு, இந்த அளவை மேலும் அதிகரிக்க உதவி செய்து, இரத்தசோகையைத் தடுக்க வழிவகுக்கிறது.

மார்பக புற்றுநோயை தடுக்கும் சோயா:

சோயாவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டதாக இருக்கிறது. பெண்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உணவில் சோயாவை சேர்த்துக் கொள்ளும்போது மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
சப்ஜா: சிறிய விதை, பெரிய நன்மை!
Which is best?

இதய நோயில் சோயாவின் பங்கு:

சோயாவில் உள்ள புரதம் மாற்றம் ஐசோஃபிளாவோன்கள் ஆகியவை, கெட்ட கொழுப்பு அளவுகளைக் குறைப்பதன் மூலம், இதயநாள நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்று சில ஆராய்ச்சியாளர்கள் வாதிட்டிருக்கிறார்கள்.

எலும்பகளின் ஆரோக்கியத்திற்கு சோயாபீன்ஸ்:

சோயாபீன்கள், எலும்புகளை வலிமையாக வைத்திருக்க உதவுகின்றன. ஈஸ்ட்ரோஜென் போன்ற மூலக்கூறுகளை செறிவாகக் கொண்டிருப்பதால் சோயாபீன்கள், எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரு பொருத்தமான உணவாக இருக்கிறது. சோயாபீனில் உள்ள ஐசோஃபிளாவோன்கள், மாதவிடாய் நிற்றலுக்கு முன்னர் மற்றும் பின்னர், பெண்களுக்கு எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் திறன் உள்ளவை ஆகும்.

முக்கிய குறிப்பு:

சோயாபீன்கள், உடலுக்குத் தேவைப்படும் புரதம், வைட்டமின்கள், மற்றும் பிற முக்கியமான மூலக்கூறுகளின் மிகச் சிறந்த ஒரு ஆதாரமாக இருக்கின்றன. அவை, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும் ஐசோஃபுளோவோன்களின் செறிவான ஒரு ஆதாரம் ஆகும். சோயாபீன்களைத் தொடர்ந்து உட்கொண்டு வருவது, அதன் ஆக்சிஜனேற்றப் பண்புகளின் காரணமாக, புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதில் உதவிகரமாக இருக்கிறது.

சோயாபீன்கள், மாதவிடாய் நிற்றல் அறிகுறிகள், எரிச்சல் கொண்ட குடல் நோய், இரும்புச்சத்து பற்றாக்குறை இரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும், மற்றும் இதயத்தைப் பாதுகாக்கவும் உதவக் கூடியவை ஆகும்.

ஆனால், சிலருக்கு, சோயாபீன்கள் மற்றும் சோயா பொருட்கள் மீது ஒவ்வாமை ஏற்படும். மேலும் அது, சிலருக்கு வயிற்றுப் பொருமலை ஏற்படுத்தக் கூடும். அதனால், சோயாபீன்களை உட்கொள்ளும் முன்னர் ஒவ்வாமைகளைப் போக்குவது மற்றும் அதன் பிறகும் கூட மிதமான அளவுகளில் சோயாபீனை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இதையும் படியுங்கள்:
விலங்குகளை உண்ணும் 7 தாவரங்கள் பற்றி தெரியுமா?
Which is best?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com