அதிகாலையில் எழுந்து பாருங்கள்; எல்லாமே வெற்றிதான்!

If you wake up early in the morning; Everything is a win
If you wake up early in the morning; Everything is a win
Published on

திகாலையில் எழுபவர்களின் மூளை மற்றவர்களை விட நன்கு செயல்படுவதாக சர்வே ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. உங்களின் காலை பழக்க வழக்கம்தான் நீங்கள் நாள் முழுவதும் எப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது அதிகாலை என்றதும் பலரும் காலை 7 மணியைத்தான் சொல்கிறார்கள் என்று நினைப்போம். ஆனால் அதிகாலை என்பது காலை 4.30 அல்லது 5 மணியாகும். இந்நேரத்தில் எழுவதால் உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டுமே மேம்படும். மேலும் அன்றைய நாளில் உங்களது இலக்கை அடைய சிந்திப்பதற்குப் போதிய அளவு நேரம் கிடைக்கும்.

அதிகாலையில் எழுந்ததுமே இரண்டு அல்லது மூன்று டம்ளர் வெதுவெதுப்பான நீர் பருகுங்கள். அதிகாலை நடைப்பயிற்சி, ஏதாவது விளையாட்டு, மெதுவான ஓட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். மேலும் அதிகாலையில் நல்ல சுத்தமானக் காற்றை சுவாசிக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் உடலில் ஆற்றல் அதிகரித்து, வேலையில் உங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.

எப்போதும் வேலை, வீடு என்று மட்டும் இருக்காமல், உலகில் என்ன நடக்கிறது என்பதையும் காலையில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு செய்தித்தாள்களை தினமும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு அரை மணி நேரம் படிப்பதற்கு ஒதுக்குங்கள். உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரியாமல் வாழ்வது மிகவும் கடினம். கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் ஒன் மேன் ஆர்மியாக செயல்பட நினைப்பவரா? அவசியம் இதை வாசியுங்கள்!
If you wake up early in the morning; Everything is a win

அதிகாலை கண்விழிப்பு உங்களுக்கான அந்நாளை பாஸிட்டிவ்வாக மாற்றித் தரும். ஒவ்வொரு செயலையும் மிக நேர்த்தியாக செய்ய முடியும். உங்களின் அன்றாடப் பணிகள் எதுவானாலும் அதிக சிரமிமின்றி செய்து முடிக்க முடியும். மனம் புத்துணர்வு அடையும், மனம் இலகுவாகி, பரபரப்பு இல்லாத வாழ்க்கையால், இரத்த ஓட்டம் சீராகி, உடலும் மனமும் உற்சாகமாகும்

அதிகாலை எழுவது சிரமமா என்ன? முயன்றுதான் பாருங்களேன். அன்றைய தினம் மட்டுமல்ல, வாழ்க்கையில் எல்லாமே உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com