நீங்கள் புத்திசாலியாக இருந்தால் இந்த 9 விஷயங்களை பொதுவெளியில் பேச மாட்டீர்கள்!

If you're smart you won't say these 9 things in public!
If you're smart you won't say these 9 things in public!https://ta.wikipedia.org

புத்திசாலியான மனிதர்கள் எப்போதுமே தனித்துவமானவர்கள். தங்கள் இமேஜை கட்டிக்காப்பதில் மிகுந்த கவனமாக இருப்பார்கள். தன்னைப் பற்றிய இந்த ஒன்பது விஷயங்களை நிச்சயமாக அவர்கள் பொதுவெளியில் பகிர மாட்டார்கள். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. பிரத்தியேகத் துயரங்கள்: ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட சோகமும் துயரமும் இருக்கும். அதை பொதுவெளியில் பகிரவேண்டும் என்ற அவசியமில்லை. புத்திசாலி மனிதர் அவற்றைப் பகிர்வதால் ஏற்படும் விளைவுகளை பற்றி நன்றாக அறிந்திருப்பார். தனக்கு மிகவும் நெருங்கியவர்களிடம் வேண்டுமானால் பகிர்ந்து கொள்வார், பொதுவெளியில் அல்ல.

2. பயம்: தங்களது பிரத்தியேக பயங்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். சிலருக்கு இருட்டில் செல்லும்போது பயமாக இருக்கலாம். மேடைப்பேச்சு பயமாக இருக்கலாம். அதைப்பற்றி எல்லாம் வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

3. சம்பள விவரங்கள்: ஒருவரின் ஊதிய விவரங்கள் மிகவும் பர்சனல் விஷயங்கள். நிறைய உலக நாடுகளில் ஒருவரின் ஊதியத்தைப் பற்றி பேசுவது ஒரு அநாகரிகமான செயலாகக் கருதப்படுகிறது. சில சமயங்களில் ஊதியத்தைப் பற்றி வெளியே பேசும்போது கேட்பவர்கள் மனதில் பொறாமை தோன்றக்கூடும். ஏமாற்றுபவர் தனக்கு சாதகமாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. குடும்ப விவ(கா)ரங்கள்: இவை எப்போதுமே பிரத்தியேகமானவை மற்றும் சிக்கல் மிகுந்தவை. குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றிய விஷயங்களை வெளியில் பேசுவது அநாகரிமான செயல். தேவையில்லாத பிரச்னைகள் வரும். அண்ணன் தம்பிக்குள் சொத்துத் தகராறு, அக்கா தங்கைக்குள் விரிசல், கணவன், மனைவி ஊடல் என்று தெரிந்தால், அவற்றை சிலர் ஊதி பெரிதாக்கி உறவுகளை பாதிக்கும் அளவுக்கு செய்து விடுவார்கள்.

5. பழைய தவறுகள்: தவறு செய்வது மனித இயல்பு. அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அவற்றை மறந்து விடுவது நல்லது. ஞாபகம் வைத்துக் கொண்டு பிறரிடம் பகிர்ந்து கொள்ளும்போது அதை குத்திக்காட்டி பேச வாய்ப்புகளும், பிரச்னைகளும் வரலாம்.

6. கனவுகள் மற்றும் லட்சியங்கள்: இவற்றை தனது மனதோடு வைத்துக் கொண்டு அதை அடைவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். இதை பொதுவெளியில் சொல்லும்போது சிலர் அதைக் கேட்டு பரிகசிக்கக் கூடும். அல்லது அவநம்பிக்கை ஏற்படுமாறு பேசக்கூடும். இன்னும் சிலர் நம் முயற்சியையே கைவிடும் அளவிற்கு எதிர்மறையாக பேசலாம். நமக்கு வரும் வாய்ப்புகளையும் தட்டிப் பறிக்கலாம். எனவே, இவற்றை வெளியே பேசக்கூடாது.

இதையும் படியுங்கள்:
அள்ள அள்ளக் குறையாத விபூதி; சுருளிமலை வேலப்பர் கோயில் அதிசயம்!
If you're smart you won't say these 9 things in public!

7. மன வருத்தங்கள் மற்றும் இழந்துவிட்ட வாய்ப்புகள்: சில சமயங்களில் நாம் ஆசைப்பட்டது நமக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். அதை மனதோடு வைத்துக்கொள்ள வேண்டும் ஆசைப்பட்ட வேலைக்கு பதிலாக வேறு வேலை கிடைத்திருக்கலாம். மிகவும் விரும்பியவரின் கரம் பிடிக்க முடியாமல் போயிருக்கலாம். இதை வெளியில் செல்லும்போது தற்போதைய திருமண வாழ்க்கைக்கு ஆபத்து வரும். ‘அந்த மாதிரி பெரிய வேலைக்கு ஆசைப்பட்டு இப்ப சின்ன வேலைல இருக்கியே’ என்று உங்களைப் பற்றி அவர்கள் கேலி செய்யக்கூடும்.

8. தன்னுடைய உடல்நல பிரச்னைகள்: உடல்நலப் பிரச்னைகளைப் பற்றி பொதுவெளியில் பேசும்போது தேவையில்லாத அறிவுரைகள், ஆலோசனைகள் வரக்கூடும். சில தவறான வழிகாட்டுதல்கள் உங்கள் நோயை இன்னும் அதிகமாக்கலாம். எனவே அவற்றை தகுந்த நண்பர்களிடம், மருத்துவர்களிடம் மட்டும் கூறி தீர்வு காணலாம்.

9. வாழ்க்கை சரித்திரம்: ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், இன்ப துன்பங்கள், அனுபவங்கள் நிறைந்திருக்கும். அவற்றையும் வெளியில் அப்படியே சொல்ல வேண்டிய அவசியமில்லை. தேவையில்லாத விபரங்களை பொதுவெளியில் பகிரும்போது அதைக் கேட்பவர்கள் நம்மைப் பற்றி தவறான முடிவுக்கு வரக்கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com