நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ‘இகிகை’ ஜப்பானிய தத்துவம்!

Ikigai Japanese philosophy
Ikigai Japanese philosophy
Published on

கிகை (ee-key-guy) என்பது ஒரு ஜப்பானிய கோட்பாடாகும். இது, ‘உயிருடன்’ அல்லது ‘வாழ்க்கை’ என்று பொருள்படும். இகி என்ற சொல்லையும் ‘நன்மை’ அல்லது ‘மதிப்பு’ என்று பொருள்படும் காய் என்ற சொல்லையும் இணைத்து இகிகை என்றழைக்கப்படுகிறது. இந்தக் கட்டுரையில் இகிகை மற்றும் அதன் பின்னணியில் உள்ள தத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் இகிகையை எப்படிக் கண்டுபிடிப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் ஆர்வத்தையும் திறமைகளையும் இணைக்கும் இந்த ஜப்பானிய கலையானது, வாழ்க்கையில் உங்கள் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய உதவும் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.

வாழ்க்கையில் உங்கள் நோக்கத்தைக் கண்டறிவது என்பது பெரும்பாலும் கைக்கு எட்டாத விஷயமாகத் தோன்றலாம். ஆனால், கண்டறிந்து கொண்டால் உங்களால் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும். பல நேரங்களில் நோக்கத்தைக் கண்டறிவது என்பது உங்களிடம் உள்ள திறன்களுக்கும் நீங்கள் விரும்பும் விஷயங்களுக்கும் இடையிலான சந்திப்பைக் கண்டறிவதாகும். இகிகை என்பது அதைப் பற்றியதுதான்.

இதையும் படியுங்கள்:
வருமானத்தைப் பெருக்கும், கைமேல் பலன் தரக்கூடிய திருஷ்டி பரிகாரம்!
Ikigai Japanese philosophy

இகிகை என்பது நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? எதில் நீங்கள் சிறந்தவர்? உலகிற்கு என்ன தேவை? உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது? ஆகியவற்றின் குறுக்குவெட்டை ஆராய்வதன் மூலம் உங்கள் நோக்கத்தைக் கண்டறிய உதவும் ஒரு ஜப்பானிய கருத்தாகும். இந்தப் பழைமையான தத்துவம் உங்கள் நோக்கத்தை அடையாளம் கண்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை வழங்குகிறது.

ஜப்பானின் கலாசாரம் மற்றும் வரலாற்றில் ஆழமாக வேரூன்றிய இகிகை, வாழ்க்கையின் மதிப்பு மற்றும் உங்கள் நோக்கத்துடன் இணைந்திருக்கும்போது மகிழ்ச்சிக்கான சாத்தியக்கூறு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தத் தத்துவம் பலரை நோக்கத்துடன் வாழும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வழி நடத்தி இருக்கிறது.

இகிகையின் கூறுகள்: இகிகை நான்கு அத்தியாவசியக் கூறுகளை மையமாகக் கொண்டிருக்கிறது.

* உங்கள் ஆர்வம் (நீங்கள் விரும்புவது)

* உங்கள் தொழில் (நீங்கள் எதில் சிறந்தவர்)

* உங்கள் பணி (உலகிற்கு என்ன தேவை)

* உங்கள் தொழில் (உங்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கும்)

இதையும் படியுங்கள்:
குளியலறை பல்லிகளைத் தவிர்க்க அல்லது விரட்ட என்ன செய்யலாம்?
Ikigai Japanese philosophy

இந்த ஒவ்வொரு கூறுகளையும் சிந்தித்து, அவை எங்கு சரியாகப் பொருந்துகின்றன என்பதை ஆராய்வதன் மூலம், உங்கள் இகிகையைக் கண்டுபிடித்து மகிழ்ச்சி, திருப்தி மற்றும் நோக்க உணர்வு நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கான பாதையை நீங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம்.

உங்கள் இகிகையை தீர்மானிக்க உதவும் 4 வழிகள்:

1. உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துங்கள்: ஆர்வம் என்பது உங்களை உற்சாகத்தோடு உணர வைக்கும் ஒரு செயலாகும். நீங்கள் உங்களுக்குப் பிடித்த காரியத்தை மிகவும் விரும்பிச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது ஒருவேளை அந்த காரியத்திற்கு உங்களுக்கு எந்தவிதமான லாபமோ அல்லது பணமோ கிடைக்காவிட்டாலும் கூட நீங்கள் அதைத் தொடர்ந்து செய்வீர்கள். அவ்வாறு செய்யும்போது மனதிற்கு ஒரு பரிபூரண திருப்தி கிடைக்கும்.

2. உங்கள் தொழிலை அங்கீகரிக்கவும்: உங்களுக்கு சில திறமைகளும் பலங்களும் இயல்பாகவே சிறந்து விளங்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால், அவை மற்றவர்களுக்கு அவ்வளவு எளிதில் வராமல் போகலாம். ஒருவேளை நீங்கள் கணிதம், எழுதுதல் அல்லது இசையில் திறமையானவராக இருக்கலாம். உங்களுக்கு உரிய தொழிலை தேர்ந்தெடுக்க உங்கள் சிறப்புத் திறன்களை அங்கீகரித்து பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மனைவி அமைவது மட்டுமல்ல; கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான்!
Ikigai Japanese philosophy

3. உங்கள் பணியைக் கண்டறியவும்: இகிகையின் இந்த அம்சம், உலகின் தேவைகளை ஆராயவும், நீங்கள் எங்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் ஆராய உதவுகிறது. உங்கள் சமூகத்திலோ அல்லது உலகில் உங்களால் தீர்க்கக்கூடிய பிரச்னைகள் அல்லது சவால்கள் உள்ளதா? அவற்றை அடையாளம் கண்டு அதற்குரிய தீர்வை செய்யுங்கள்.

4. உங்கள் தொழிலை வளர்த்துக் கொள்ளுங்கள்: உங்கள் தொழில் என்பது உங்கள் ஆர்வம் மற்றும் நோக்கத்திலிருந்து எவ்வாறு வாழ்க்கையை உருவாக்குகிறது என்பதைப் பார்க்கும் இடமாகும். உங்கள் ஆர்வத்தையும் நோக்கத்தையும் உங்கள் தொழிலாக மாற்றுவதற்கு நேரம் எடுக்கும். பொறுமையோடு செயல்பட்டால் ஆர்வம் மற்றும் நோக்கம் இவை இரண்டும் இணைந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.

உங்கள் இகிகையைக் கண்டுபிடிப்பதால் உண்டாகும் நன்மைகள்:

இகிகையின் அடிப்படைக் கொள்கைகளுடன் இணங்குவது என்பது சுய கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தொடர்ச்சியான செயல்முறையாகும். மேலும், இது உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள சமூகத்திற்கும் பல நன்மைகளை வழங்கும்.

நீங்கள் உங்கள் இகிகையுடன் இணக்கமாக வாழும்போது, உங்கள் செயல்பாடுகள் உங்களை மகிழ்ச்சியாலும் திருப்தியாலும் நிரப்புகின்றன. ஏனென்றால், நீங்கள் உங்கள் நோக்கத்திற்காகவே வாழ்கிறீர்கள் என்று எண்ணும்போது அந்த எண்ணமானது உங்கள் மனநிலையை உயர்த்தி, வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்க்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com