குளியலறை பல்லிகளைத் தவிர்க்க அல்லது விரட்ட என்ன செய்யலாம்?

avoid lizards in bathroom
Lizards in bathroom
Published on

ல்லிகள் ஊர்வன வரிசையைச் சேர்ந்தவை. இதில் மொத்தம் 6000 இனங்களுக்கும் மேல் உள்ளன. அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இவை  காணப்படுகின்றன. காட்டில் வாழும் பல்லிகள் சில பறக்கும் திறன் கொண்டவை. பல்லிகள் தங்கள் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு நஞ்சு, உருமாறும் திறன், இழந்த வாலை மீண்டும் வளர்த்தல் போன்ற அமைப்புகளைப் பெற்றுள்ளன.

பல்லிகள் பொதுவாக உணவு, தண்ணீர், தங்குவதற்கு இடம் தேடி வீட்டுக்குள் நுழைகின்றன. இவை பொதுவாக சமையலறை, குளியலறை மற்றும் வீட்டின் இருண்ட மூலைகளால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. குளியலறையில் பல்லிகளைத் தவிர்க்க சில விஷயங்களை கவனமாக கையாண்டாலே போதும், பல்லிகளை அங்கிருந்து விரட்டலாம்.

இதையும் படியுங்கள்:
மனைவி அமைவது மட்டுமல்ல; கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான்!
avoid lizards in bathroom

1. குளியலறையை அழுக்குகள், கறைகள் எதுவும் இல்லாமல் சுத்தமாகப் பராமரிப்பதன் மூலம் பல்லிகள் உள்ளே நுழைவதைத் தவிர்க்கலாம்.

2. குளியல் அறையை அதிக ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளாமலும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக்கொள்வது நல்லது. பல்லிகள் தண்ணீராலும் ஈரப்பதத்தாலும் ஈர்க்கப்படுகின்றன. குளியலறை தொட்டிகள், சிங்க், குளியலறையில் இருக்கும் வாஷ்பேசின் போன்றவற்றை சுத்தமாகப் பராமரிப்பது அவசியம்.

3. பல்லிகள் பொதுவாக வீட்டின் இருண்ட மூலைகளில் காணப்படும் பூச்சிகளைப் பிடித்துத் தின்பதற்காக வருகின்றன. குளியலறையில் இருக்கும் ஈரப்பதத்தின் காரணமாக சிறு சிறு பூச்சிகள் அங்கு காணப்படும். அவற்றைப் பிடிப்பதற்காக குளியலறையில் பல்லிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே, சிறு பூச்சிகளை ஈர்க்கும் பொருட்களை குளியல் அறையில் வைக்காமல் பார்த்துக்கொள்வதும், அடிக்கடி ஒட்டடை அடித்து தூசு தும்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் செய்தால் பூச்சிகளும் பல்லிகளும் வராது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்க சில எளிய வழிகள்!
avoid lizards in bathroom

4. குளியலறை கதவை மட்டுமல்லாமல், ஜன்னல் கதவுகளையும் மூடி வைப்பதன் மூலம் (ஜன்னல்களில் பொருத்தக்கூடிய கொசுவலைகள் அமைப்பதன் மூலம் அறையை காற்றோட்டமாக வைத்துக் கொள்ளலாம்) பல்லிகள் வீட்டின் உள்ளே நுழைவதைத் தடுக்கலாம்.

5. சில மயிலிறகுகளை குளியலறையில் வைப்பதன் மூலம் பல்லிகள் ஓடிவிடும் என்று நம்பப்படுகிறது. மயிலிறகுகளைக் கண்டால் பல்லிகள் பயப்படுமாம்!

6. பூண்டு ஐந்தாறு, வெங்காயம் ஒன்று இரண்டையும் அரைத்து குளியலறையில் தெளிப்பதன் மூலம் பல்லிகளை விரட்டலாம் அல்லது வெங்காயத்தை நான்கைந்து துண்டுகளாக நறுக்கி குளியலறை ஜன்னல்களில் வைக்கலாம்.

7. உணவுப் பொருட்களை கீழே சிந்தாமலும், சிந்தும் பொருட்களை உடனடியாக சுத்தம் செய்வதும் பல்லிகளின் வரவை குறைக்கும். சமைத்த உணவுகளை மூடி வைப்பதும் நல்லது.

இதையும் படியுங்கள்:
எதிர்மறை ஆளுமைப் பண்புகளின் தாக்கத்தை எப்படித்தான் கையாள்வது?
avoid lizards in bathroom

8. சிறிய இடைவெளிகள் மற்றும் சிறிய விரிசல்கள் வழியாக பல்லிகள் வீட்டினுள் நுழையலாம். எனவே, அதன் நுழைவுப் புள்ளிகளை சரிபார்த்து அடைப்பதன் மூலம் பல்லிகளின் வரவைக் குறைக்கலாம்.

9. செல்லப் பிராணிகளை வைத்திருப்பவர்கள் அவற்றிற்கு உணவுகளை காற்று புகாத டப்பாக்களில் சேமித்து வைப்பதும்,  இரவு முழுவதும் திறந்தே கிடக்காமல் பார்த்துக் கொள்வதும் பூச்சிகளையும், பல்லிகளையும் வர விடாமல் செய்யும். செல்லப்பிராணிகள் சாப்பிடும்போது கீழே சிந்தும் உணவுகளை உடனடியாக சுத்தம் செய்வதும் பல்லிகளின் நடமாட்டத்தை குறைக்கும்.

10. ஈரப்பதம் பூச்சிகள், பல்லிகளை ஈர்க்கும் என்பதால் பூச்சிகளை விரட்ட குளியலறையில் கடுமையான ரசாயனக் கலவைகளைப் பயன்படுத்தாமல் முட்டையின் ஓடுகளை நொறுக்கி குளியலறையின் மூலையில் போட்டு வைக்கலாம்.

11. மிளகை நன்கு விழுதாக அரைத்து தண்ணீர் கலந்து பல்லிகள் நடமாட்டம் அதிகமிருக்கும் இடங்களில் தெளிப்பது அவற்றை எளிதில் விரட்ட உதவும். இயற்கை முறைகள் பலனளிக்கவில்லையெனில் நாப்தலின் உருண்டைகளைப் போட்டு வைக்கலாம். அத்துடன் அதிக ஒலியை உருவாக்கும் ‘மீயொலி’ எனப்படும் மின்னணு பல்லி விரட்டிகளை பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com