வீட்டின் எந்தப் பகுதியில் இன்வெர்ட்டரை வைக்க வேண்டும்?

Inverter Placement in Home
Inverter Placement in Home

வீடுகளுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் தற்போது அதிநவீன வசதிகளுடன் விற்கப்படுகிறது. பொதுமக்களில் பலரும் வீட்டிற்குத் தேவைப்படுகின்ற மற்றும் சௌகரியமாக இருக்கும் அனைத்துப் பொருள்களையும் வாங்குகிறார்கள். அவ்வகையில் சந்தையில் பிரபலமாக விற்பனையாகும் இன்வெர்ட்டர், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் வீட்டிற்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்ந்து விட்டது. பெருமழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் நீண்ட நேர மின்வெட்டு மற்றும் கோடை காலங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினைகளை சமாளிக்க இன்வெர்ட்டர் பெரிதும் உதவியாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இன்றியமையாத அங்கமாக இன்வெர்ட்டர் மாறி வருகிறது.

முந்தைய காலத்தில் இன்வெர்ட்டர் கண்டுபிடிக்கப்படாத நேரத்தில், மின்சாரம் இன்றி பொதுமக்கள் பல மணிக் கணக்கில் பொழுதைக் கழித்தனர். தற்காலத்தில் இன்வெர்ட்டர் இருப்பதனால், எவ்வளவு நேரம் மின்வெட்டு ஏற்பட்டாலும், அதனால் சிரமங்கள் ஏதுமின்றி இருக்கிறார்கள். இன்வெர்ட்டரை வாங்கி வீட்டில் வைத்தால் மட்டும் போதாது. அதனை சரியான முறையில் பயன்படுத்தவும், பராமரிக்கவும் வேண்டும். அப்போது தான் அதனை நல்ல முறையில் பாதுகாக்க முடியும். ஏனெனில் இது ஒரு எலக்ட்ரானிக் மின்சாதனம் என்பதால், சரிவர பயன்படுத்தாமல் இருந்தால் விரைவிலேயே பழுதாகி விடும்.

இன்வெர்ட்டரை ஒருசிலர் மட்டுமே சரியாகப் பயன்படுத்தி வருவதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சில வீடுகளில் முறையான பராமரிப்பு இல்லாததால், இன்வெர்ட்டர்கள் சரியாக வேலை செய்யாமல் பழுதடைந்து விடுகிறது. பல்வேறு காரணங்களால் இன்வெர்ட்டரில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதில் மிகவும் முக்கியமானது வீட்டில் மிகவும் சரியான இடத்தில் இன்வெர்ட்டரை வைக்காதது ஆகும். இன்வெர்ட்டரை நல்ல முறையில் இயங்க வைக்க, அதனுடைய பேட்டரியில் நாம் சிறப்பு கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
மின்சார சாதனங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கை!
Inverter Placement in Home

வீட்டில் இன்வெர்ட்டர் வைக்கும் இடம் மிகவும் முக்கியமானது. இன்வெர்ட்டரை வீட்டில் எங்கு வைத்தால் சரியாக இருக்கும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

வீட்டில் இன்வெர்ட்டர் வைக்கப்படும் இடத்தைக் கொண்டு, பேட்டரியின் ஆயுள் மற்றும் சேதத்தை தீர்மானித்து விடலாம். வீட்டில் எங்கு சுத்தமான காற்று கிடைக்குமோ அந்த இடத்தில் பேட்டரி மற்றும் இன்வெர்ட்டரை வைக்க வேண்டும். மேலும், காற்று சுழற்சிக்குத் தேவையான இடம் இருப்பதும் மிகவும் முக்கியம். பேட்டரியைச் சுற்றிலும் அதிக வெப்பம் மற்றும் உப்பு நீர் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இன்வெர்ட்டரை வீட்டில் வைப்பதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில், இன்வெர்ட்டர் எப்பொழுதும் நிழலான இடத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இன்வெர்ட்டரின் மீது நேரடியாக சூரிய ஒளி பட்டால் அதன் ஆயுளானது படிப்படியாக குறைந்து விடும். பொதுவாக மின்சாதனங்களின் மீது வெயில் பட்டால், உடனடியாக சூடாகி விடும். இது மின்சாதனத்தின் செயல்திறனை பாதிக்கும் என்பதால், இன்வெர்ட்டரையும் நிழலில் வைத்திருப்பது அவசியமாகும்.

இந்த ஆலோசனைகளை முறையாக நடைமுறைப்படுத்தினால் உங்கள் இன்வெர்ட்டரை அதிக நாள்களுக்கு மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com