சாலையோர மைல் கற்களில் மஞ்சள், பச்சை, கருப்பு, ஆரஞ்சு நிறங்கள் சொல்லும் செய்தி என்ன தெரியுமா?

மஞ்சள் மற்றும் பச்சை நிற மைல்கற்கள் உணர்த்தும் முக்கிய செய்தி என்ன?
மைல்கற்கள் நிறம் - Indian milestone colors
மைல்கற்கள் நிறம் - Indian milestone colorsImage credit: Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

இந்தியாவில் சாலையோர மைல்கற்கள் நிறம் வெறும் அழகுக்காக அல்ல; நாம் எந்த வகையான சாலையில் பயணிக்கிறோம் என்பதை எளிதில் அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. சாலைகளில் உள்ள மைல்கற்களின் நிறங்கள் எந்த சாலையில் பயணிக்கிறோம் என்பதை எளிதாக அடையாளம் காண உதவும் வண்ணக் குறியீடுகள் ஆகும்.

நாம் பயணிக்கும் சாலையின் வகையையும், அந்த சாலையை பராமரிக்கும் அரசு அமைப்பையும் இது குறிக்கின்றன. இப்படி நெடுஞ்சாலை வகைகளைக் குறிக்க 4 வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மஞ்சள் மற்றும் வெள்ளை:

தேசிய நெடுஞ்சாலைகளைக் (National Highway-NH) குறிக்கும். நாட்டின் முக்கிய நகரங்களையும் மாநிலங்களையும் இணைக்கும் சாலைகளில் இவை இருக்கும். இவை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பராமரிக்கப்படுகின்றன.

நீண்ட தூர பயணங்களுக்கும், அதிவேகப் போக்குவரத்துக்கும் ஏற்றவாறு இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. பல்வேறு வானிலை நிலைகளிலும் கூடத் தெளிவாகத் தெரியும் வகையில் மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படுவதால் ஓட்டுநர்களுக்கு வழிகாட்டுதல் மிகவும் எளிதாக கிடைக்கிறது.

பச்சை மற்றும் வெள்ளை:

இது மாநில நெடுஞ்சாலைகளைக். (State Highway-SH) குறிக்கும். ஒரு மாநிலத்திற்குள் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களை இணைக்கும் சாலைகளில் இவை இடம் பெறும். இவை அந்தந்த மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன.

கருப்பு (அல்லது நீலம்) மற்றும் வெள்ளை:

இது நகர்ப்புறச் சாலைகள் அல்லது மாவட்டச் சாலைகளைக் (City / District Road) குறிக்கும். இவை உள்ளூர் மாநகராட்சி, நகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படும் உள்ளூர் சாலைகளில் இவை காணப்படும். (சில இடங்களில் முழு வெள்ளை நிறக் கற்களும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன).

மைல்கற்கள் நிறம் - Indian milestone colors
மைல்கற்கள் நிறம் - Indian milestone colorsImage credit: Gemini

ஆரஞ்சு மற்றும் வெள்ளை:

கிராமப்புறச் சாலைகளைக் (Rural/Village Road) குறிக்கும். கிராமங்களை அருகில் உள்ள நகரங்கள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் பாதைகளில் இவை இருக்கும். இவை பெரும்பாலும் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் கீழ் அமைக்கப் படுகின்றன. இந்த சாலைகள் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, விவசாயப் பொருட்கள் கடத்தல் போன்ற அன்றாட தேவைகளுக்கு பெரிதும் உதவுகின்றது. கிராம வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அடிப்படைக் கட்டமைப்பாக இந்த சாலைகள் செயல்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆம்புலன்ஸ் முன்புறம் “AMBULANCE” வார்த்தை தலைகீழாக எழுதப்பட்டிருப்பது ஏன் தெரியுமா?
மைல்கற்கள் நிறம் - Indian milestone colors

மைல்கற்களின் முக்கிய நோக்கங்கள்:

*வழித்தட அடையாளம்:

பயணிகள் தாங்கள் எந்த வகைச் சாலையில் செல்கிறோம், எந்தத்துறை அதை பராமரிக்கிறது என்பதைத் தொலைதூரத்திலேயே புரிந்து கொள்ள இந்த நிறங்கள் உதவுகின்றன.

கூகுள் மேப்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் இருந்தே பயணிகள் தாங்கள் எந்த வகைச் சாலையில் பயணிக்கிறோம் என்பதை உடனடியாக அறிந்து கொள்ள இந்த வண்ணக் குறியீடுகள் உதவுகின்றன.

இரவு நேரங்களிலும், புதிய ஊர்களுக்குப் பயணம் செய்யும்பொழுதும் ஜிபிஎஸ் உதவி இல்லாமலேயே நாம் எந்தத் தரத்திலான சாலையில் பயணிக்கிறோம் என்பதை ஓட்டுநர்கள் எளிதில் அறிந்து கொள்வதற்கு இந்த வண்ணக் குறியீடுகள் உதவுகின்றன.

*அவசரகால உதவி:

சாலையில் ஏதேனும் விபத்தோ, சேதம் ஏற்பட்டாலோ, வாகனப் பழுது ஏற்பட்டாலோ அந்த மைல்கல்லின் நிறத்தை வைத்தும், அந்த மைல்கல்லில் இருக்கும் எண்ணை வைத்தும் மீட்புக் குழுவினருக்கு நமது சரியான இருப்பிடத்தை தெரிவிக்க முடியும். அத்துடன் எந்தத் துறைக்கு (மத்திய அரசு, மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு) தகவல் தெரிவிக்கவேண்டும் என்பதை இதன் மூலம் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

*தூரத்தையும் வழியையும் காட்டுதல்:

அடுத்து வரும் முக்கிய நகரம் அல்லது கிராமம் எத்தனை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதை இவை துல்லியமாக தெரிவிக்கும். அத்துடன் நாம் சரியான திசையில்தான் பயணிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ! சாலையில் உள்ள மேன்ஹோல் மூடி ஏன் வட்டமாக இருக்கிறது தெரியுமா? 
மைல்கற்கள் நிறம் - Indian milestone colors