இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?
https://ta.quora.com

ந்தியாவில் இன்று காலை 10 மணி ஆகும்போது, அமெரிக்காவில் முந்தைய நாள் இரவு 9 மணியாக இருப்பதை ஏன் என்று எப்போதாவது யோசித்தது உண்டா? அதற்குக் காரணம் நேர மண்டலம் (டைம் சோன் - Time Zone) தான்! ஒரே நாட்டுக்குள் 11, 12 விதமான நேரங்கள் பின்பற்றப்படுகின்றன. அதாவது ஒரே நாட்டில் ஒரு இடத்தில் மணி 9 ஆகும், மற்றொரு இடத்தில் மணி 10.20 ஆகும். அது எப்படி?

நேர மண்டலம் என்பது வணிக ரீதியாக மற்றும் சட்ட ரீதியாக ஒரே நிலையான நேரத்தைக் கடைப்பிடிக்கும் பகுதி. இந்த யோசனை முதன்முதலில் ஸ்காட்டிஷ் கண்டுபிடிப்பாளரான சர் சாண்ட்ஃபோர்ட் ஃப்ளெமிங்கின் என்பவரால் 1878ல் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலான நாடுகளில், குறிப்பாக சிறிய நாடுகளில், ஒரே ஒரு நேர மண்டலம் மட்டுமே உள்ளது.

உலக நாடுகளின் நேரத்துக்கு ஆதாரமானது இங்கிலாந்து நாட்டில் உள்ள கிரீன்விச் என்ற நகரின் மீது செல்லும் தீர்க்க ரேகை கோடு. இந்தக் கோட்டிற்கு அதே பெயரை வைத்தார்கள். நேரத்திற்கு 'கிரீன்விச் மெரிடியன் டைம்' என்று பெயர் இட்டார்கள். இதை சுருக்கமாக கிரீன்விச் நேரம் என்றார்கள். தற்போது அது , UTC நேரம் எனப்படுகிறது. இந்த '0' டிகிரி 'லாங்கிடியூடில்' என்ன நேரம் காட்டுகிறதோ அதை மையமாக வைத்துதான் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் நேரத்தை டிகிரி வித்தியாசத்துக்கு ஏற்றபடி சரியாக கணக்கிட்டு வைத்துக் கொள்கின்றன.

உலகின் நேர மண்டலங்களின் தொடக்கமானது பிரைம் மெரிடியனின் கிழக்கு மற்றும் மேற்காக 7.5° பரவியுள்ளது. தீர்க்கரேகையின் ஒவ்வொரு 15° பிரிவும் தோராயமாக ஒரு மணி நேரத்திற்கு சமமாக இருந்தாலும், உண்மையான டைம் சோன்கள் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை.

சில நாடுகளில் அரை மணி நேர மண்டலங்கள் இருப்பதால், உலகில் 24 மடங்குக்கும் அதிகமான மண்டலங்கள் உள்ளன. பெரும்பாலான நாடுகளில், குறிப்பாக சிறிய நாடுகளில், ஒரே ஒரு நேர மண்டலம் உள்ளது. குறைந்தது இரண்டு நேர மண்டலங்களைக் கொண்ட 23 நாடுகள் உள்ளன. உலகில் அதிக நேர மண்டலங்களைக் கொண்ட நாடு பிரான்ஸ் ஆகும். பிரான்ஸ் , மொத்தம் 12 வெவ்வேறு நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. அண்டார்டிகா கண்டத்தில் பிரான்ஸ் உரிமை கோரியுள்ள பகுதியை சேர்த்தால், பிரான்சில் மொத்தம் 13 வெவ்வேறு நேர மண்டலங்கள் உள்ளன. பிரான்சின் வெளிநாட்டுப் பகுதிகள் நாட்டின் பல நேர மண்டலங்களில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளன. பிரான்சின் நேர மண்டலம் UTC +01:00 ஆகும்.

ரஷ்யா வைத்திருக்கும் நிலத்தின் அளவைக் கருத்தில் கொண்டால், அது உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இதன் விளைவாக, ரஷ்யாவில் ஏராளமான நேர மண்டலங்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. மொத்தத்தில், ரஷ்யாவின் வெளிநாட்டுப் பகுதிகளை உள்ளடக்கியபோது, அது மொத்தம் 11 வெவ்வேறு நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. இதேபோல அமெரிக்காவிலும் 11 டைம் சோன்கள் பின்பற்றப்படுகின்றன.

இந்தியாவில் ஒரே ஒரு நேர மண்டலம் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. 1947 முதல் நாடு அதிகாரப்பூர்வமாக இந்திய தர நேரத்தை (IST- இந்தியன் ஸ்டாண்டர்டு டைம்) கடைப்பிடிக்கிறது. இருப்பினும், UTC+5:30 1906 முதல் இந்தியாவில் உள்ளூர் நிலையான நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இது 5 மணி 30 நிமிடங்கள் யுனிவர்சல் கோ ஆர்டினேட்டடு நேரத்திற்கு முன்பாக உள்ள நேரம்.உத்திரபிரதேசத்திலுள்ள மிர்சாபூரை கடந்த செல்லும் நிலநடுக்கோட்டை அடிப்படையாகக் கொண்டது.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இந்தியா இரண்டு நேர கால மண்டலத்தை பின்பற்றியது. ஒன்று பாம்பே டைம் மற்றொன்று கொல்கத்தா டைம். இதனால் வியாபாரிகள் நல்ல வெளிச்சத்தில் தங்களது வியாபாரத்தை கவனித்தனர். 1905ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரே நேர மண்டலமாக இந்தியாவில் அமல்படுத்தியது.

இதையும் படியுங்கள்:
அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்!
இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

இந்த நேர அடிப்படையில் குஜராத்தில் இரண்டு மணி நேரம் கழித்துதான் சூரியன் அஸ்தமிக்கும். அதேவேளையில் அருணாசல பிரதேசத்தில் இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே சூரியன் அஸ்தமிக்கும். ஆனால், இந்திய நேரப்படி ஒரே நேரம்தான் இருக்கும். இதனால் தூக்க நேரம் குறையும். போதிய வெளிச்சம் இல்லாததால் வியாபாரம் பாதிக்கும். இந்த நேர அடிப்படையில் இந்தியா சராசரியாக 29,000 கோடி பணத்தை இழப்பதாக கண்டறிந்துள்ளனர். எனவே, இந்தியன் ஸ்டாண்டர்டு டைமை கோடை காலத்தில் அரை மணி நேரம் பின்னதாகவும் வைக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

ஒரு நேர மண்டலத்தை வைத்திருப்பதில் சில குறைபாடுகள் உள்ளன. தேயிலை தோட்டங்களில் இருந்து பார்த்தால், சூரிய உதயம் குறைந்த பகல் நேரம் உள்ள இடங்களில் தூக்கம் மற்றும் உற்பத்தித்திறனை இழக்கச் செய்கிறது. மேலும், சூரிய அஸ்தமனம் அதிக ஆற்றல் நுகர்வுக்கு வழிவகுக்கும். ஆனால், இப்போதைக்கு, ஒரு நேர மண்டலத்தின் குறைபாடுகள் இரண்டின் நன்மைகளை விட அதிகமாக இல்லை.

இருப்பினும், மேற்கு வங்காளம் தொடங்கி வட கிழக்கு நாடுகளில் சூரிய உதயம் மறைவும் மற்ற இடங்களை விட சீக்கிரம் தொடங்கி சீக்கிரம் முடிகிறது. கோடைக் காலத்தில் இரண்டு நேர மண்டலம் அமைக்க பலராலும் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டாலும் தொழில்நுட்ப காரணங்களால் இந்தியாவில் இரண்டு டைம் சோன்கள் பின்பற்றப்படுவது இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com