அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்!

Protein rich foods
Protein rich Veg foods
Published on

புரதம் என்றாலே முட்டை, சிக்கன் என்று அசைவத்தில் தான் புரதம் இருப்பதாக நினைப்பதுண்டு. ஆனால் இவற்றிற்கு நிகராக அல்லது அதைவிட அதிகமான புரதம் சைவ உணவுகளிலும் உண்டு. அப்படிப்பட்ட புரதம் நிறைந்த சைவ உணவுகளை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
Neuralink Brain Chip: விபத்தில் சிக்கிய நோயாளியின் வாழ்கையை மாற்றிய எலான் மஸ்க்!
Protein rich foods
  1. பொட்டுக்கடலை: மறந்து போன கொறிக்கும் பண்டங்களில் பட்டாணியை அடுத்து பொட்டுக்கடலையும் ஒன்று. இது புரோட்டின் நிறைந்தது. புரோட்டின் பானங்களில் சேர்க்கப்படும் அடிப்படையான உணவுப் பொருள் இந்த பொட்டுக்கடலை தான்.

  2. கருப்பு கொண்டைக்கடலை: மூக்கடலை என அழைக்கப்படும் கருப்புக் கொண்டக்கடலை அதிகளவு புரத சத்து மற்றும் இரும்பு சத்து கொண்டது. தினம் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்து சாப்பிடலாம்.

  3. குயினோவா: கொழுப்பு சத்து குறைந்த, அதிக புரதம் கொண்ட உணவான குயினோவாவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நீர் சத்து மிகுந்த இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.

  4. பச்சைப்பயிறு: ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த பச்சை பயறு நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. சிக்கனை விட இதில் அதிகம் புரதம் உள்ளது.

  5. ராஜ்மா: சிவப்பு பீன்ஸ் என அழைக்கப்படும் ராஜ்மாவும் நிறைய புரதச்சத்து நிறைந்த பயறு வகையாகும். இது உடலுக்கு ஊட்டமளிக்கும் உணவுகளில் முக்கியமான ஒன்று.

  6. கொள்ளு: நார்ச்சத்து மிகுந்த கொள்ளை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் இளைக்கவும், நம் உடலுக்கு தேவையான புரதமும் அதிக அளவில் கிடைக்கிறது. இதனை கோடை காலத்தில் முளைகட்டி சாப்பிடுவது நல்லது.

  7. வெள்ளை கொண்டைக்கடலை: புரதம் நிறைந்த சைவ உணவு என்று வரும்போது கொண்டைக்கடலைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. தினம் 1/2 கப் கொண்டைக்கடலையை ஊறவைத்து முளைகட்டி சாப்பிட உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதுடன் நம் தசைகளையும் வலுவாக்கும்.

  8. சோயா பீன்ஸ்: சோயா பீன்ஸ், சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் சோயா சங்க்ஸ் எனப்படும் மீல்மேக்கரிலும் அசைவத்தை விட அதிக அளவு புரதமும், நார்ச்சத்தும், அமினோ அமிலங்களும் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இதனை சுண்டலாகவோ, பொரியலில் முளைகட்டி சேர்த்தோ பயன்படுத்தலாம். சப்பாத்திக்கு கோதுமை மாவு அரைக்கும் போது இதனை ஒரு கிலோவுக்கு 100 கிராம் வீதம் சேர்த்து அரைத்து வரலாம்.

  9. சியா விதைகள்: அதிக புரதம் நிறைந்த சியா விதைகளில் ஆன்ட்டி ஆக்சிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன.

  10. பாதாம் முந்திரி போன்ற நட்ஸ் வகைகள்: பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், கொட்டை வகைகள் புரதத்தின் சிறந்த மூலமாகும். தினசரி உணவுகளில் இவை இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com