இந்தியாவின் 'தூங்கும்' மாநிலம்: காரணம் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!

India's 'sleeping' state
Himachal Pradesh House
Published on

ந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் ஏதாவது ஒரு வகையில் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. சில மாநிலங்கள் ஆடைகள் தயாரிப்பதில் பெயர் பெற்றதாக இருக்கும். சில மாநிலங்கள் உணவு தயாரிப்பதில் சிறந்ததாக இருக்கும். ஒருசில மாநிலங்கள் கட்டடக் கலைக்கு பெயர் பெற்றதாக இருக்கும். இப்படி தனித்தனி துறையில் அந்தந்த மாநிலத்திற்குரிய சிறப்புகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால், இந்த ஒரு மாநிலமோ அதன் அமைதியான தன்மை மற்றும் தேசிய அளவில் மிகக்குறைவான சமூக செயல்பாட்டை வெளிபடுத்துவதன் காரணமாக, ‘இந்தியாவின் தூங்கும் மாநிலம்’ என்றழைக்கப்படுகிறது. இந்த மாநிலத்திற்கு ஏன் இத்தகைய புனைப்பெயர் வந்தது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ஒரு மாநிலத்தை ‘தூங்கும் நிலையில் உள்ள மாநிலம்’ என்று கூறும்போது, அம்மாநில மக்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள் அல்லது அந்த மாநிலம் முற்றிலும் வளரவில்லை என்பதாக அர்த்தமில்லை. அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையானது அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கிறது என்பதையே இது குறிக்கிறது. அத்தகைய இடங்களில் உள்ள மக்கள் ஆரோக்கியமான உறக்கம் மற்றும் எளிமையான, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையையே அதிகமாக விரும்புகிறார்கள். குறிப்பாக, பெரிய பெரிய நகரங்களின் வேகமாக செயல்படும் செயல்பாட்டிலிருந்தும் சத்தத்திலிருந்தும் விலகியிருப்பதையே இவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இனி வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வராது! இந்த 5 மேஜிக் ட்ரிக்ஸ் போதும்!
India's 'sleeping' state

வட இந்தியாவில் உள்ள ஒரு அழகிய மலை மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசம்தான் இந்தியாவின் தூங்கும் மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் சீக்கிரமாகத் தூங்கி, சீக்கிரமாக எழுந்திருக்கும் வழக்கத்தை மேற்கொள்கிறார்கள். மக்கள் தங்கள் நாளை சூரிய உதயத்துடன் தொடங்குகிறார்கள். அவர்கள் பகலில் வேலை செய்து, இருட்டுவதற்குள் இரவு உணவை முடித்து விடுகிறார்கள். இரவு 8 அல்லது 9 மணிக்குள் பெரும்பாலான குடும்பங்கள் உறங்கி விடுகின்றன. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு விடும் மற்றும் தெருக்களும் அமைதியாகக் காணப்படும். இரவு நேரத்தில் தெருக்கள் அமைதியாகவும் இருட்டாகவும் காணப்படுகின்றன. போக்குவரத்து சத்தம் என்பதே இருப்பதில்லை. அமைதியான மலை சூழல் நிம்மதியான வாழ்க்கையை ஊக்குவிக்கிறது. இந்த அமைதியான சூழ்நிலையானது, பெருநகரங்களின் பரபரப்பான வாழ்க்கை முறையிலிருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது.

ஹிமாச்சலப் பிரதேசம் இத்தனை அமைதியான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. பசுமையான மலைப்பகுதி, காற்று மற்றும் இயற்கை சூழலைக் கொண்டுள்ளது. பெரிய நகரங்களுடன் ஒப்பிடும்போது குறைவான தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தை கொண்டுள்ளது. மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள் மற்றும் பாரம்பரிய கிராம நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ஐஸ்கிரீம் உருவான கதை: நீரோ முதல் நியூசிலாந்து வரை!
India's 'sleeping' state

இமாச்சலப் பிரதேசத்தில் இந்த அமைதியான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் சில கிராமங்கள் குறித்து இனி காண்போம்.

சிட்குல்: இது இந்தியாவின் கடைசி கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

கல்பா: அழகிய மலைக்காட்சிகளையும் ஆப்பிள் பழத்தோட்டங்களையும் கொண்டது இக்கிராமம்.

தீர்த்தன் பள்ளத்தாக்கு: இயற்கையை விரும்பும் ஆர்வலர்களுக்கும் அமைதியான சூழ்நிலைக்கும் மிகவும் ஏற்றது இக்கிராமம்.

ஸ்பிடி பள்ளத்தாக்கு: அமைதிக்குப் பெயர் பெற்ற உயரமான பாலைவனம் இது.

ஹிமாச்சலம் ‘தூங்கும் மாநிலம்’ என்று அழைப்பதால் அந்த மாநிலம் வளர்ச்சியடையவில்லை என்று பொருளாகாது. உண்மையில் ஹிமாச்சலப் பிரதேசம் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். ஹிமாச்சலப் பிரதேசத்தில் நல்ல சாலைகள், பள்ளிகள் மற்றும் சுற்றுலா வசதிகள் உள்ளன. புகை இல்லாத முதல் இந்திய மாநிலம் இதுவாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கடுமையான பிளாஸ்டிக் எதிர்ப்புச் சட்டங்களை இந்த மாநிலம் அமல்படுத்தி இருக்கிறது. அதிக அளவு ஆப்பிள்களை உற்பத்தி செய்வதால் இது, ‘இந்தியாவின் ஆப்பிள் மாநிலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. தர்மசாலா தலாய் லாமாவின் தாயகமாகவும், திபெத்திய கலாசாரத்திற்கான முக்கிய மையமாகவும் இது உள்ளது.

மேற்கூறிய அனைத்து காரணங்களாலும், மக்களின் தனித்துவமான வாழ்க்கை முறையாலும் ஹிமாச்சலப் பிரதேசமானது இந்தியாவின் தூங்கும் அதாவது அமைதியாக இருக்கும் மாநிலம் என்றழைக்கப்படுகிறது. நகர வாழ்க்கையின் இரைச்சலில் இருந்து விடுபட்டு இயற்கையை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் இந்த மாநிலத்திற்கு வருகை தருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com