குறைந்த பராமரிப்பு தேவைப்படும் உட்புற தாவரங்கள்! 

Indoor plants
Indoor plants

வீட்டின் உள்ளே வளர்க்கப்படும் உட்புறத் தாவரங்கள் உங்கள் வாழும் இடத்திற்கு இயற்கை அழகை சேர்ப்பது மட்டுமல்லாமல், காற்றின் தரத்தை மேம்படுத்தவும், மனநிலையை அமைதியாக்கவும் உதவுகின்றன. நீங்கள் ஒரு பிசியான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருந்தால், குறைந்த பராமரிப்பு தேவைப்படும் உட்புறத தாவரங்களைத் தேர்ந்தெடுப்பது நல்ல முடிவாக இருக்கும். இந்தப் பதிவில் அத்தகைய தாவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். 

ஸ்நேக் பிளான்ட்
ஸ்நேக் பிளான்ட்

ஸ்நேக் பிளான்ட்: இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் காணப்படும் இந்த ஸ்நேக் பிளான்ட், சுற்றுப்புறத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரவு நேரத்தில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து காற்றை சுத்தப்படுத்தும் தன்மைக்காகப் பிரபலமானதாகும். இவற்றிற்கு அதிக அளவிலான பராமரிப்புத் தேவையில்லை. அதிகப்படியான சூரிய ஒளியும், நீர்ப்பாசனமும் தேவையில்லை. இது தாவரங்களை முறையாகப் பராமரிக்க முடியாதவர்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும். 

ZZ பிளான்ட்
ZZ பிளான்ட்

ZZ பிளான்ட்: இந்தத் தாவரம் இந்தியாவின் சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலையிலும் செழித்து வளரும் ஒரு சிறப்பான உட்புறத் தாவரமாகும். பளபளப்பான கரும்பச்சை இலைகளைக் கொண்டு பார்ப்பதற்கே அழகாக இருக்கும். குறைந்த ஒளியிலேயே செழித்து வளரக்கூடியது. குறைந்த தண்ணீரே தேவைப்படும் இந்த தாவரம் அதிக வறட்சியையும் தாங்கக் கூடியதாகும். அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இந்தத் தாவரம் சரியான ஒன்று. 

Pothos பிளான்ட்
Pothos பிளான்ட்

Pothos பிளான்ட்: பொதுவாக டெவில் ஐவி என்று அழைக்கப்படும் இந்தத் தாவரம் இந்திய வீடுகளில் செழித்து வளரும் தாவரமாகும். இதற்கும் குறைந்த பராமரிப்பு போதும். பச்சை நிறத்திலான இதய வடிவிலான இலைகளைக் கொண்ட இத்தாவரம், குறைந்த ஒளியிலும் செழித்து வளரும். இது கூடைகளில் வைத்து அழகாக தொங்கவிடுவதற்கு மிகவும் பிரபலமானது. இதன் கொடிகளும் விரைவாக வளராது என்பதால், தாராளமாக இதை வீட்டின் உட்புறத்தில் வளர்க்கலாம். 

ஸ்பைடர் பிளான்ட்
ஸ்பைடர் பிளான்ட்

ஸ்பைடர் பிளான்ட்: ஸ்பைடர் பிளான்ட் ஒரு அழகான உட்புறத் தாவரமாகும். இதன் வளைந்த வண்ணமயமான இலைகள் கூடுதல் கவர்ச்சியை சேர்க்கிறது. இந்திய வீடுகளுக்கு மிகவும் பொருத்தமான இந்தத் தாவரம் எல்லா சூழ்நிலைகளிலும் நன்றாக வளரக்கூடியதாகும். இது தன்னைச் சுற்றி இருக்கும் ஒளிக்கு ஏற்றவாறு வளரக்கூடிய தன்மை கொண்டது. இவற்றிற்கு அதிக நீர் தேவையில்லை. இந்தச் செடி விரைவாக கிளைச் செடிகளை உருவாக்கினாலும், யார் வேண்டுமானாலும் சிரமமின்றி இவற்றை வளர்க்கலாம். 

இதையும் படியுங்கள்:
Cod Liver Oil: ஆண்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் காட் லிவர் ஆயில்!
Indoor plants

நீங்கள் புதிதாக வீட்டின் உள்ளே செடி வளர்க்க விருப்பப்பட்டாலும் சரி, அல்லது பிசியான வாழ்க்கை முறைக்கு நடுவே குறைந்த பராமரிப்பு தேவைப்படும் செடியை வளர்க்க விரும்பினாலும் சரி, மேலே குறிப்பிட்டுள்ள நான்கு செடிகள் உங்களுக்கு உண்மையிலேயே சரியானதாக இருக்கும். இவை உங்களது வேலையை குறைப்பது மட்டுமின்றி, வீட்டின் அழகு, காற்றின் தரம், மன அமைதி போன்றவற்றையும் மேம்படுத்தும் என்பதால், இவற்றை உங்கள் வீட்டில் தாராளமாக வளர்க்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com