Cod Liver Oil: ஆண்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் காட் லிவர் ஆயில்!

Cod Liver Oil
Cod Liver Oil

Cod எனப்படும் ஒருவகை மீனின் கல்லீரலில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் அத்தியாவசிய விட்டமின்களும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இது ஆண் பெண் என இரு பாலருக்குமே ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், ஆண்களுக்கு இந்த மீன் எண்ணெய் எத்தகைய ஆரோக்கிய நன்மைகள் வழங்குகிறது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.  

இதய ஆரோக்கியம்: காட் லிவர் எண்ணெய் ஆண்களுக்கு இருதய ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், EPA மற்றும் DHA போன்ற அமிலங்கள், ட்ரைகிளிசரைட் அளவைக் குறைத்து ஆரோக்கியமான கொழுப்பை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் ரத்த அழுத்தம் சீராகி ரத்த உறைவு உருவாகும் அபாயம் குறைகிறது. இத்தகைய காரணங்களால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இருதய நோய்க்கான வாய்ப்புகள் குறைகின்றன. 

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம்: பொதுவாகவே ஆண்கள் என்றாலே உடல் ரீதியாக அதிக செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இதனால் மூட்டு வலி, உடல் சோர்வு போன்ற பாதிப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடலாம். காட் லிவர் ஆயிலின் அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூட்டு வலி மற்றும் உடல் வலியைப் போக்க உதவும். இதை வழக்கமாக எடுத்துக் கொண்டு வந்தால் ஆண்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பராமரிக்க முடியும். 

நோய் எதிர்ப்பு சக்தி: ஒரு வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முக்கியமானது. காட் கல்லீரல் எண்ணெய் உடலின் பாதுகாப்பு அம்சத்தை வலுப்படுத்துவதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இது பெரிதளவில் உதவும். இந்த எண்ணெயில் உள்ள அதிக அளவு விட்டமின் ஏ மற்றும் டி நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு அவசியம். விட்டமின் ஏ ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி உடலின் திறனை மேம்படுத்த விட்டமின் டி பயன்படுகிறது. எனவே காட் லிவர் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆண்கள் தங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். 

இதையும் படியுங்கள்:
CBD Oil: மனநிலையை மேம்படுத்தும் Cannabidiol எண்ணெய்!
Cod Liver Oil

அறிவாற்றல் ஆரோக்கியம்: எல்லா வயதினருமே தங்களின் அறிவாற்றல் செயல்பாட்டை பராமரிக்க வேண்டியது அவசியம். காட் லிவர் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 உள்ளடக்கம் சிறந்த மூளை ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. இதில் இருக்கும் DHA மூளை திசுக்களுக்கு மிக முக்கியமானது. இது நினைவாற்றலை மேம்படுத்தி அறிவாற்றல் செயல்பாடுகள் சிறப்பாக மாற உதவுகிறது. ஆண்கள் தங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்க தேவையான மனக்கூர்மையை இந்த மீன் எண்ணெய் வழங்குகிறது. 

எனவே எல்லா ஆண்களும் முறையான சுகாதார நிபுணரின் ஆலோசனைப்படி, காட் லிவர் ஆயிலை எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com