
வெயிலின் போது ஏசி பயன்படுத்துவது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. தற்போது தமிழகத்தில் இயல்பை விட கோடை வெயில், வாட்டி வதைக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் பலர் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். ஆனால் வீட்டிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக நிலவுவதால், ஏர்கூலர், ஏ.சி.யை நாடுகிறார்கள். ஏ.சி.யை சரியான பராமரிப்பு மற்றும் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம், நீண்ட காலம் உழைக்கும்.
ஏ.சி. வாங்க கடைகளுக்கு சென்றால், அங்கு இன்வெர்ட்டர் ஏ.சி.யா..? இல்லை இயல்பான ஏ.சி.யா..? என கேட்கும்போதே, நமக்கு சிறு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.
சரி... இயல்பான ஏ.சி.க்கும், இன்வெர்ட்டர் ஏ.சி.க்கும் என்ன வித்தியாசம், இவ்விரு ஏ.சி.களும் எப்படி இயங்குகின்றன, எதில் மின்சார செலவு குறைவு என்பதை விளக்கமாக தெரிந்து கொள்வோமா?
இன்வெர்ட்டர் ஏ.சி:
இன்வெர்ட்டர் ஏசி (Inverter AC) என்பது ஒரு வகை ஏர் கண்டிஷனிங் யூனிட் ஆகும். இது சாதாரண ஏசியை விட அதிக ஆற்றல் திறன் கொண்டது. மேலும், இன்வெர்ட்டர் ஏசி சீராகவும், திறமையாகவும் இயங்கக்கூடியது.
இன்வெர்ட்டர் ஏ.சி. என்றதும், இது மின்சாரம் தடைப்படும் சூழலில் மின்சாரத்தை வழங்கும் இன்வெர்ட்டர் கருவியில் இயங்கும் ஏ.சி. என தவறுதலாக நினைத்துவிட வேண்டாம். இன்வெர்ட்டர் ஏ.சி. என்பது, மேம்படுத்தப்பட்ட இயக்கமுறை கொண்ட ஏ.சி. குறிப்பாக, மின்சார பயன்பாட்டை குறைப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்ட செயல்முறை.
இன்வெர்ட்டர் ஏ.சி.யின் முக்கியமான வேலை, ஏ.சி.யின் கம்ப்ரசர் மோட்டாரின் வேகத்தை கட்டுப்படுத்துவது தான். இதன் காரணமாக படுக்கை அறை குளிர்ச்சி அடையும்போது, இன்வெர்ட்டர் ஏ.சி. கம்ப்ரசரை நிறுத்தாது. மாறாக கம்ப்ரசரை குறைந்த வேகத்தில் இயக்கும். அதாவது அறை குளிர்ச்சியானவுடன், இன்வெர்ட்டர் தொழில்நுட்ப ஏர் கண்டிஷனர் இயந்திரம் ஆற்றலைச் சேமிக்கிறது. தேவைக்கேற்ப அறையின் வெப்ப நிலையை பராமரிக்க, இது மோட்டார் வேகத்தையும் குறைக்கிறது. இன்வெர்ட்டர் ஏசி, அறையை சீராக குளிர வைக்கிறது. இதனால், அறையில் ஒரு சமமான வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.
மேலும் அறையில் இருக்கும் நபர்களுக்கு ஏற்ப கம்ப்ரசரை 100 சதவிகிதம், 60 சதவிகிதம், ஏன்..? 40 சதவிகிதம் என்கிற குறைவான ஆற்றலில்கூட இயக்கி மின்சாரத்தை மிச்சப்படுத்தும். அதேபோல, தேவைப்படும் சமயங்களில், குளிர்ச்சியை 100 சதவிகிதத்திற்கு மேலாக கூட தொடர்ந்து வழங்கும். இதனால்தான், இயல்பான ஏ.சி.யை விட இன்வெர்ட்டர் ஏ.சி. அதிக மக்களால் விரும்பி வாங்கப்படுகிறது.
இன்வெர்ட்டர் ஏசியில் உள்ள மோட்டார், சீராக இயங்குவதால், இது நீண்ட காலம் வரை உழைக்கும்.
இன்வெர்ட்டர் ஏசி, சாதாரண ஏசியை விட குறைவான சத்தத்துடன் இயங்குகிறது. இதனால், அறையில் ஒரு அமைதியான சூழலை உருவாக்க முடிகிறது. நீங்கள் அடிக்கடி ஏசியைப் பயன்படுத்தினால், இன்வெர்ட்டர் ஏசி உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில், இது குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகிறது மற்றும் அதிக ஆயுள் கொண்டது.
இயல்பான ஏ.சி:
இன்வெர்ட்டர் அல்லாத இயல்பான ஏ.சி.யின் கம்ப்ரசர் ஒரு நிலையான வேகத்தை பின்பற்றுகிறது. கம்ப்ரசர் இயக்கத்தில் இருக்கும்போது, அறைக்குள் வெப்பநிலை தொடர்ந்து குறையும். அறை மிகவும் குளிராக இருக்கும்போது கம்ப்ரசர் அணைக்கப்படும். அறை மீண்டும் வெப்பமடையும்போது அதை மீண்டும் இயக்குகிறது. தேவைக்கு ஏற்ப கம்ப்ரசரின் ஆற்றலை குறைக்கவோ, கூட்டவோ இதில் எந்த வசதியும் இல்லை.
ஏ.சி. யூனிட்டின் ஆயுட்காலம் அதன் வகை, பராமரிப்பு மற்றும் சூழல் போன்ற காரணிகளைப் பொறுத்தது. ஏ.சி. யூனிட் வைக்கப்படும் இடம், அதன் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கலாம். உதாரணமாக, அதிக சூரிய ஒளி அல்லது ஈரப்பதம் கொண்ட இடங்களில், ஏ.சி. யூனிட்டின் ஆயுட்காலம் குறையலாம்.
ஏ.சி. யூனிட்டின் இயல்பான செயல்பாட்டை பராமரிக்க regular maintenance அவசியம். இதில் ஃபில்டர் மாற்றுதல், வெளிப்புற யூனிட்டை சுத்தம் செய்தல், மற்றும் தொழில்முறை சரிபார்ப்பு ஆகியவை அடங்கும். ஏ.சி. யூனிட்டில் இருந்து கசிவு ஏற்பட்டால், அது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. எனவே, கசிவு ஏற்பட்டால், உடனடியாக சரிபார்ப்பது அவசியம்.
இதன் காரணமாக, இன்வெர்ட்டர் ஏ.சி.யை விட இயல்பான ஏ.சி.யின் மின்சார செலவு சற்று அதிகமாக இருக்கும்.