AC Vs Air Cooler: எது வாங்குவது நல்லது? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

AC or Air Cooler: Which is Best to Buy?
AC or Air Cooler: Which is Best to Buy?
Published on

வெயில் காலம் வந்துவிட்டால் போதும் பலர் ஏசி வாங்கலாமா அல்லது ஏர் கூலர் வாங்கலாமா என யோசிப்பார்கள். ஏனெனில் இந்த இரண்டு சாதனங்களும் கடுமையான வெப்பத்திலிருந்து நமக்கு நிவாரணம் அளிக்கக் கூடியவை. இவை இரண்டும் தனித்தனியே அவற்றிற்கென பல அம்சங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும் இந்த இரண்டில் எதை வாங்குவது என்ற குழப்பம் பலருக்கு உள்ளது. சரி, வாருங்கள் இன்று அந்த குழப்பத்தை இப்பதிவில் தீர்த்துவிடலாம். 

1. கூலிங் தன்மை: 

ஏசிகள் உட்புறக் காற்றில் உள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை நீக்கி அறையை குளிர்ச்சிப்படுத்துகின்றன. இதில் குளிர்ச்சிக்காக கூலன்ட் பயன்படுத்தப்படுகிறது. 

இதுவே ஏர் கூலர்கள் அறையில் இருக்கும் காற்றையே மறுசுழற்சி செய்து, கூலிங் பேடுகள் வழியாக அனுப்புவதன் மூலம் ஓரளவுக்கு அறையை குளிர்ச்சியாக்குகிறது. 

2. ஆற்றல் திறன்: 

ஏர் கூலர்களுடன் ஒப்பிடும்போது ஏசிகள் செயல்பட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இதில் இருக்கும் கம்ப்ரஸர் மற்றும் இன்டோர் யூனிட் செயல்பட அதிகப்படியான மின்சாரம் தேவை. எனவே ஏசிகள் அதிக மின்கட்டணங்களுக்கு வழி வகுக்கலாம். 

ஏசிகளை விட ஏர் கூலர்களுக்கு அதிக ஆற்றல் தேவை இல்லை. இதில் காற்றைக் குளிர்விக்க கூடுதல் இயந்திரங்கள் இல்லை என்பதால், குறைந்த சக்தியே தேவைப்படுகிறது. ஏசி பயன்படுத்தும் மின்சாரத்தை விட குறைந்த அளவிலேயே ஏர்கூலர்கள் பயன்படுத்துகின்றன. 

3. இன்ஸ்டலேஷன் மற்றும் பராமரிப்பு: 

ஏசியை நிறுவுவதற்கு தொழில்முறை வல்லுநர்களின் உதவி தேவைப்படும். ஏனெனில் ஏசி யூனிட்டை சரியானபடி பொருத்தினால் மட்டுமே, அது சிறப்பாக இயங்கும். மேலும் ஏசி நன்றாக இயங்க அதை அவ்வப்போது பராமரிக்க வேண்டும். 

ஏர் கூலர்களை இன்ஸ்டால் செய்து பராமரிப்பது மிகவும் எளிதானது. இதற்கு பெரிதளவில் எந்த வல்லுனர்களும் தேவையில்லை. இவை செயல்படுவதற்கு மின்சாரம் மற்றும் நீர் இருந்தால் போதும். அவ்வப்போது கூலிங் பேடுகள் மற்றும் தண்ணீர் சேமிக்கும் தொட்டியை சுத்தம் செய்வது அவசியம். இதை எந்த தொழில்முறை வல்லுனரின் உதவியின்றி நீங்களே செய்யலாம். 

4. காலநிலை: 

அதிக ஈரப்பதம் அல்லது அதிக வெப்ப பகுதிகளில் ஏசிகள் மிகவும் பொருத்தமானவை. அவை காற்றை குளிர்விப்பது மட்டுமல்லாமல் ஈரப்பதத்தை நீக்கி உட்புற வெப்பநிலையை சிறப்பாகக் கையாளும். முறையாக இன்சுலேஷன் செய்யப்பட்ட இடங்களில் ஏசிகள் நன்றாக வேலை செய்யும். 

ஏர் கூலர்கள், குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட காலநிலையில் சரியானதாக இருக்கும். ஏர் கூலர்கள் அறையின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் என்பதால், திறந்தவெளி மற்றும் காற்றோட்டம் நிறைந்த அறைகளுக்கு ஏர் கூலர் பொருத்தமானவை. 

5. விலை: 

ஏசிகள், எல்லா காலநிலைக்கும் உகந்ததாக இருக்கும் என்பதாலும், இதில் இன்டோர் மற்றும் அவுட்டோர் யூனிட் இருப்பதாலும், விலை சற்று கூடுதலாகவே இருக்கும். இருப்பினும் வெப்பம் அதிகமாக இருக்கும் கோடைகாலங்களில், ஏர் கூலரை விட ஏசி சிறந்தது. 

இதையும் படியுங்கள்:
AC Gas லீக் ஆவதற்கான காரணங்களும், தடுப்பு நடவடிக்கைகளும்! 
AC or Air Cooler: Which is Best to Buy?

ஏர் கூலரின் மெக்கானிசம் சாதாரணமானது மற்றும் இதில் அதிக பாகங்கள் இருக்காது என்பதால், ஏசியின் விலையை விட மூன்றில் ஒரு பங்கு விலையிலேயே ஏர்கூலர்கள் இருக்கும். அதிக வெப்பமான பகுதிகளில் ஏர் கூலர் அந்த அளவுக்கு திறன் வாய்ந்ததாக இருக்காது. இருப்பினும் மற்ற காலங்களில் ஏசியை விட ஏர் கூலர் சிறந்த தேர்வாக இருக்கும். 

இந்த 5 விஷயங்களை கருத்தில் கொண்டு, உங்களுக்கு எது ஒத்துவரும் என்பதை சிந்தித்து, ஏசி வாங்கலாமா அல்லது ஏர் கூலர் வாங்கலாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com