திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருப்பது வரமா? சாபமா?

single man
single man
Published on

ப்பான், கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் திருமணம் என்பது ஒரு சுமை. அதுவும் பிள்ளைகள் பெற்றுக்கொள்வது இன்னும் அதிக சுமை என்று நினைத்து இளைஞர்களும் இளம்பெண்களும் திருமணத்தை தவிர்த்து வருகின்றனர். மேலும், இந்தியாவிலும் இந்த கலாசாரம் மெல்ல பரவ ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் 2023ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி 18 வயதுக்கு மேற்பட்ட 127 மில்லியனுக்கும் அதிகமான ஒற்றையர்கள் உள்ளனர். இதில் 53 சதவீதம் பெண்கள் மற்றும் 47 சதவீதம் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கிளாக இருப்பதன் நன்மைகள்: திருமணமாகி கணவன், மனைவியாக வாழ்வதை விட தனிமையில் இருப்பவர்கள் தாங்கள் மிகுந்த நன்மைகளை அனுபவிப்பதாகக் கூறுகிறார்கள்.

வயதான பெற்றோர் பராமரிப்பு: சில குடும்பங்களில் ஒற்றைப் பிள்ளைகள் இருப்பார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருப்பதன் மூலம் தங்கள் வயதான பெற்றோரை கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள முடிகிறது. வயதான காலத்தில் அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடிகிறது என்கிறார்கள்.

பொருளாதார ரீதியாக வசதியாக இருத்தல்: ஒற்றை ஆளாக இருப்பதால் அவரது செலவுகள் குறைகிறது. துணைக்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய கல்விச்செலவு வருமானத்தின் பெரும் பகுதியை ஸ்வாஹா செய்து விடுகிறது‌. துணையை மகிழ்விக்க அப்போது பரிசுப் பொருள்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என வாங்கி சம்பளத்தின் பெரும்பகுதி காலி ஆகிவிடுகிறது. ஆனால்இ ஒற்றையாக இருக்கும்போது  நிறைய சேமிக்கலாம் என்கிறார்கள் சிங்கிள்கள். குடும்பத்தோடு வசிக்கும்போது அதற்கேற்ற மாதிரி பெரிய வீடு, பெரிய கார் என செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஒற்றை ஆளுக்கு  சிறிய வீடு, கார் போதும்.

எளிமையான வீட்டு வேலை: ஒருவருக்கு சமைப்பது மிகவும் எளிமையானது. குடும்பத்தினருக்கு அல்லது துணைக்கும் சேர்த்து சமைப்பது, வீடு சுத்தம் செய்வது, துணிகள் துவைப்பது பாத்திரங்கள் தேய்ப்பது என வேலைகளின் சுமைகள் அதிகமாகிறது என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வேக வைத்த வேர்க்கடலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
single man

கவலை இல்லை: குடும்பம் அல்லது கணவன் மனைவியாக சேர்ந்து வாழும்போது அவர்களைப் பற்றிய கவலையும் பயமும் இருக்கும். அவர்கள் வெளியே சென்று விட்டால் குறித்த நேரத்தில் வீடு திரும்ப வேண்டுமே என்று அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சங்களும், அவர்கள் உடல்நிலை சரியில்லை என்றால் அவர்கள் உடல் நலம் பெற வேண்டுமே என்கிற தவிப்பும் நிறைய இருக்கும். சிங்கிளாக இருக்கும்போது இது எதுவுமே அவர்களை பாதிக்காது. மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கலாம். மேலும் சொந்தமாக முடிவெடுக்கும் சுதந்திரமும், தனிப்பட்ட இலக்குகள் மற்றும் நலன்களில் கவனம் செலுத்தும் வாய்ப்பும் இருக்கிறது என்கிறார்கள் சிங்கிள்கள்.

தனிமையில் இருப்பதன் குறைபாடுகள்: எல்லாவித சந்தோஷங்களும் இருந்தாலும் தனிமையாக இருக்கும்போது விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் தனிமை மனதை அழுத்தும்‌. சமூக நிகழ்வுகளுக்கு அல்லது கூட்டங்களுக்கு தனியாகச் செல்ல கடினமாகவும் சங்கடமாகவும் இருக்கும். உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் தோழமை இல்லாமல் மனம் ஏக்கமடையும். துக்கத்தை, சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள துணையின்றி வருத்தமாக இருக்கும். தனிமையாக இருக்கும் போது மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் அதிகரிக்கும். பாதுகாப்பின்மை குறைந்த சுயமரியாதை போன்ற உணர்வுகள் எழும்.

ஆயிரம் தொல்லைகள் இருப்பினும், திருமணமும், குடும்பமும் தரும் நம்பிக்கையும், தைரியமும் நிச்சயமாக சிங்கிளாக இருப்பதில் கிடையாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com