Boiled peanuts
Boiled peanuts

வேக வைத்த வேர்க்கடலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

Published on

வேர்க்கடலையை வறுக்காமல், வேகவைத்து சாப்பிடுவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, எடை இழப்பு மற்றும் நீரிழிவு நிவாரணத்துக்கும் சிறந்த காலை உணவாகும்.

பலர் வேர்க்கடலையை விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக, நோன்பு நேரத்திலும், மாலை நேர சிற்றுண்டியாகவும் வேர்க்கடலை சாப்பிட விரும்புவார்கள். ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், இந்த ஆரோக்கியமான வேர்க்கடலையின் நன்மைகளை நீங்கள் அதிகரிக்க விரும்பினால், அவற்றை வறுக்காமல் வேக வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

வேக வைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. உடல் எடை இழப்பு முதல் புற்றுநோய் வரை பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

வேர்க்கடலை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பூர்த்தி செய்யும்: வேர்க்கடலையை வேகவைத்து சாப்பிட்டால் அது முழுமையான உணவு போன்றது. இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பி சகல சத்தும் உடனே கிடைக்கும். நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பல இதில் உள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, வேகவைத்த வேர்க்கடலை அரை கப் 286 கலோரிகளைக் கொண்டுள்ளது மற்றும் கொலஸ்ட்ரால் இதில் இல்லை.

இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது: வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு இது சிறந்தது. தினமும் சிறிது வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் இதய நோய்கள் வராமல் தடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கிறது: வேகவைத்த வேர்க்கடலையில் உள்ள ஃபிளாவனாய்டுகள் உடல் செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கும். இதன் காரணமாக நீரிழிவு, புற்றுநோய் அல்லது இதய நோய் போன்ற எந்த வகையான நாட்பட்ட நோய்களின் ஆபத்தும் குறைகிறது.

இதையும் படியுங்கள்:
பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவும் காண்டாமிருகங்கள் குறித்த 12 சுவாரஸ்ய தகவல்கள்!
Boiled peanuts

எடை இழப்புக்கு உதவும்: நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் காலை உணவுக்கு முன் வேகவைத்த வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுங்கள். இது உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும் உணர்வை தரும். மேலும், தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவீர்கள்.

மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது: வேக வைத்த வேர்க்கடலையில் நல்ல அளவு ஃபோலேட் மற்றும் நியாசின் உள்ளது. அதனால் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. மூளையின் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தை ஆதரிக்க ஃபோலேட் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன.

இரத்த சர்க்கரையை சீராக்கும்: பொதுவாக, வேகவைத்த வேர்க்கடலையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது உடலில் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com