வாழ்க்கைக்கு இனிமை தருவது தோட்ட வீடா? அப்பார்ட்மெண்ட் வீடா?

Garden House, Appartment House
Garden House, Appartment House
Published on

வீடு என்றால், ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்’ என்ற பாரதியின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வரும். அப்படி தோட்ட வீட்டை அவர் சிலாகித்து பாடியிருப்பார். அதுபோல், தோட்டத்தின் இடையே வீடுகளை கட்டிக்கொண்டு அதற்குள்ளாகவே வாழ்ந்து வருவது கேரளா, தமிழ்நாடு மற்றும் பல இடங்களில் நடக்கும் நிகழ்வு. அதேபோல், அப்பார்ட்மெண்ட் பெருகி வருவதிலிருந்து அதில் வாழ்வதை மக்கள் எவ்வாறு விரும்புகிறார்கள் என்பதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இவற்றில் வசிப்பதால் ஏற்படும் சாதக, பாதகமான விளைவுகளை இப்பதிவில் காண்போம்.

தோட்ட வீடு: தோட்ட வீட்டில் இல்லாத சிறப்பு வேறு எந்த வீட்டிலும் இல்லை என்றுதான் கூற வேண்டும். அப்படி நினைத்த நேரத்தில் நினைத்த உணவு பதார்த்தங்களை தோட்டத்திலே விளைவித்து சுத்தமானதாக, உடம்புக்கு சத்து நிறைந்ததாக சாப்பிட முடியும். அதேபோல அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் கொடுத்து மகிழ முடியும்.

ஊருக்கு போய்விட்டு வந்தால் கடையில் காய்கறிகள் வாங்கித்தான் சமைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. தோட்டத்திற்கு வந்தால் அங்கு இருக்கும் காய்கறிகளை பறித்தே ஒரு விருந்து வைத்து விடலாம். அதில் அப்படி ஒரு நன்மை இருக்கிறது. மேலும், தென்னை மரங்களிலிருந்து விழும் காய்களை காய வைத்து எண்ணெய் ஆட்டி வைத்துக் கொண்டால் வருடத்திற்குத் தேவையான எண்ணெய் அதிலேயே கிடைத்துவிடும்.

இதையும் படியுங்கள்:
இந்த 9 காய்கறிகள், பழங்களை இப்படித்தான் வாங்க வேண்டும்!
Garden House, Appartment House

கோடைக்காலம் என்று வந்துவிட்டால் தோட்டத்து வீடுதான் குளுமையை கொடுக்கும். அந்த வீட்டில் இருக்கும் நபர்கள் தோட்டத்தில் இருப்பதையே அதிக நேரம் விரும்புவர். அக்கம் பக்கத்தினர் கூட வந்தால் தோட்டத்திலிருந்து பேசுவதைதான் விரும்புவார்கள். இரவில் உறங்குவதற்கு ஏ.சி தேவையில்லை.

வீட்டில் எப்பொழுதும் காய்கறி, கனி, பூக்கள் என்று நிறைந்து இருக்கும். விருந்தினர்களுக்கு தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பதற்கு வெற்றிலை, தேங்காய், பூ ,பழம் என்று வீட்டில் இருப்பதை வைத்துக் கொடுத்து ஆனந்தப்படலாம்.

கூட்டுக் குடும்பமாக வாழ சிறந்த இடம் தோட்டத்தில் அமைந்திருக்கும் வீடே. தோட்டம் இருப்பதால் எப்பொழுதும் தோட்டத்தில் வேலை இருந்து கொண்டே இருக்கும். ஆதலால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் காலையில் சீக்கிரமாக எழுவது, சுறுசுறுப்பாக வேலைகளை பார்ப்பது என்று எப்பொழுதும் விறுவிறுப்பாக வேலையைச் செய்வார்கள். இப்படித் தோட்டத்தில் இருக்கும் வீட்டில் அனேக நன்மைகள் உண்டு.

அப்பார்ட்மெண்ட் வீடு: அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு இருக்கும் பால்கனி போன்ற இடங்களிலேயே போதுமான அளவிற்கு தேவையான மரம், செடி, கொடிகளை வளர்த்துக் கொள்கிறார்கள். இது குறைவாக இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இவற்றிற்கு குறைந்த நேரம் செலவிட்டால் போதும். மீதி நேரங்களில் மற்ற வேலைகளில் அதிகம் கவனம் செலுத்தலாம்.

கைத்தொழில்களை புதிது புதிதாகக் கற்றுக் கொள்ளலாம். அதற்கு நேரம் கிடைக்கும். வீடு சிறியதாக இருப்பதால் அதை பராமரிப்பதும் எளிது. நாம் அதை பராமரிப்பதற்கு தனியாக தோட்டக்காரரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், வாசல் பெருக்க வேண்டிய அவசியம் இல்லை. மோட்டார் போடுவது போன்ற அனைத்தையும் அதற்காக நியமிக்கப்பட்ட பொது மேலாளரே அனைத்தையும் பார்த்துக் கொள்வார். அதேபோல், வீட்டிலேயே ஏதாவது ரிப்பேர் என்றால் அதை  மெயின்டனன்ஸ் செய்பவரிடம் போன் பண்ணி சொல்லிவிட்டால் போதும் வேலை முடிந்துவிடும்.

அதேபோல் வெளியூர், வெளி தேசங்களுக்குப் போவதும் அப்பார்ட்மெண்ட் வீட்டில் இருப்பவர்களுக்கு எளிது. ஏனெனில், அக்கம் பக்கத்தவர்கள் இருப்பதால் வீட்டுக்கு பாதுகாப்பு. ஆதலால், திருட்டு தொந்தரவு இருக்காது. மரம், செடி, கொடிகள் வைத்து இருந்தாலும் குறைவாகவே இருப்பதால் அதை ஒரு தோட்டக்காரரை போட்டு பராமரிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

அலுவலக வேலைகளுக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு மிகவும் சிறந்த வீடு இது. இந்த வீட்டில் ஒட்டடை, தூசு அதிகம் படியாது. ஆதலால் சுத்தம் செய்து பராமரிப்பதும் எளிது. பாம்பு போன்ற பிரச்னைகள் வராது. மழைக்காலத்தில் வெளியில் எங்கும் தண்ணீர் தேங்காது.

இதையும் படியுங்கள்:
அறுவை சிகிச்சை நிபுணர்கள் பச்சை நிற ஆடை அணிவதன் ரகசியம்!
Garden House, Appartment House

வயதானவர்களுக்கு இதுபோன்ற வீடுகள்தான் வசதியாக இருக்கும். அக்கம் பக்கத்தில் பேச ஆட்கள் கிடைப்பார்கள். உதவிக்கும் துணை கிடைக்கும். தனியாக இருக்கின்றோம் என்று பயப்பட வேண்டியது இல்லை. வெளியூர், வெளி நாடுகளில் தங்கிவிட்ட பிள்ளைகளும் பெற்றோர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் இருப்பார்கள். திருட்டு பயமில்லை. இவையெல்லாம் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் உள்ள வசதிகள்.

தோட்டத்து வீட்டில் எவ்வளவு சௌகரியம் இருந்தாலும் வயதான காலத்தில் அங்கு இருவர் மட்டும் தங்குவது மிகவும் கஷ்டம். திருட்டு பயம், விஷ ஜந்துகளின் பயம், வீடு தோட்டம் இரண்டையும்  பராமரிப்பது போன்றவற்றை செய்வது வயதான காலத்தில் கடினமாக இருக்கும். வாசல் பெருக்கி வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். எத்தனை ஆட்கள் வைத்தாலும் வேலை இருந்து கொண்டே இருக்கும். வீடுகளிலும் ஒட்டடை, தூசு போன்றவை படிந்திருக்கும். வெளியூர் பயணம் செல்வது என்றால் அதற்காக அந்த வீட்டை பார்த்துக் கொள்வதற்கு ஒரு ஆளை நியமித்து விட்டுதான் செல்ல வேண்டும். ஆதலால் கூட்டுக் குடும்பத்திற்கு தோட்ட வீடும், வயதானவர்களுக்கு அப்பார்ட்மெண்ட் வீடும்தான் சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com