இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையே உள்ளது. அந்த வகையில், ஸ்மார்ட் போன் நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். பலரும் தங்களுடைய செல்ஃபோன் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உறை அல்லது பவுச் போட்டு வைத்திருக்கிறார்கள். தற்போது செல்போன்களை வைப்பதற்கு விதவிதமான கவர்கள் வந்து விட்டன.
சிலர் தங்கள் பர்ஸ் வைத்துக்கொள்வதற்கு கஷ்டப்பட்டு ஆதார் அட்டை, ரூபாய் நோட்டு போன்றவற்றை செல்போன் கவரின் உள்ளே வைத்துக் கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இதுபோன்று அதிகளவு பயன்படுத்துகிறார்கள். இது பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றினாலும், இதுபோன்று செய்வது மிகவும் ஆபத்தானது என்பதை மறந்து விடுகிறார்கள்.
தற்போது, பல மொபைல் போன்கள் வெடித்த அல்லது தீப்பிடித்த சம்பவங்கள் குறித்து அடிக்கடி செய்தித்தாள்களில் நாம் பார்க்கிறோம். இதற்கு கவனக்குறைவே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
ரூபாய் நோட்டுகளை செல்போன் கவரில் வைத்ததால் அந்த போன் வெடித்தது அல்லது தீப்பிடித்தது போன்ற சம்பவங்கள் குறித்து அடிக்கடி செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
பலரும் செல்போன்களை அதிக நேரம் உபயோகிக்கிறார்கள். தினமும் சார்ஜ் செய்கிறார்கள் இதனால் செல்போன்கள் விரைவில் சூடாகி விடுகின்றன. அதிக பயன்பாட்டின் காரணமாக அதிலிருந்து வெளிப்படும் வெப்பமும் ரூபாய் நோட்டில் இருக்கும் கால்சியம் கார்பனேட்டும் வினைபுரிந்து செல்போன் வெடிக்க கூடிய அபாயங்கள் ஏற்படுகிறது.
செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்தும்போது வெப்பமடைவது இயல்பு. உதாரணமாக, பலர் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது, கேம் விளையாடுவது, வீடியோக்கள் பார்ப்பது, அதிக நேரம் சார்ஜ் போடுவது என நீண்ட நேரம் பயன்படுத்துவதால் வெப்பம் அதிகம் ஆகும்.
இதன் விளைவாக, மொபைலில் ஒரு காந்தப்புலம் உருவாகிறது. இந்த நேரத்தில், செல்போன் கவருக்கு பின்னால் பணம் அல்லது ஏ.டி.எம் கார்டு போன்ற அடையாள அட்டைகளை வைக்கும்போது, வெப்பம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இதனால், செல்போன்களின் வெப்பநிலை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி தொலைபேசியின் செயலி அல்லது பேட்டரியில் அதிகப்படியான அழுத்தம் தீயை ஏற்படுத்தும்.
அதிக வெப்பம் காரணமாக பேட்டரி வீக்கம் அடைந்து வெடிக்கும் அபாயம் உண்டு. கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மட்டுமல்ல ரூபாய் நோட்டுகளை செல்போன் கவரின் பின்னால் வைப்பதும் பாதுகாப்பானது அல்ல. அதனால் செல்போன் கவரில் ரூபாய் நோட்டுகள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை வைப்பதை தவிர்ப்பதன் மூலம் ஆபத்து ஏற்படாமல் காக்கலாம்.
மொபைல் அனைவரது வாழ்விலும் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டதால் அதை பயன்படுத்துவதில் அலட்சியம் வேண்டாம்.
பணம் வைக்க சிறந்த இடம் பர்ஸ் அல்லது பாக்கெட்டுகள் தானே தவிர, செல்போன்கள் அல்ல.