இளைஞர்களே உஷார்..! பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தினால் ஸ்ட்ரோக் ஏற்படுமாம்..!

Stroke
Stroke
Published on

சீனாவில் உள்ள 19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர், தனது மொபைல் ஃபோனை நீண்ட நேரம் பயன்படுத்தியதால், கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்களின் கூற்றுப்படி, கழுத்து தமனியில் இரத்த உறைவு ஏற்பட்டதால் மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபட்டதே இதற்கு காரணம்.

பீஜிங்கில் அந்த மாணவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நீண்ட நேரம் கழுத்தை குனிந்து வைத்திருக்கும் "டெக்ஸ்ட் நெக்" (text neck) என்ற மோசமான நிலைதான் பக்கவாதத்திற்கு வழிவகுத்தது என்று கூறினர். இந்த நிலையில், கழுத்து வளைந்து இருப்பதால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த உறைவு உருவாகிறது. அறுவை சிகிச்சை மூலம் இரத்த உறைவு அகற்றப்பட்ட பின்னர், அந்த மாணவர் தற்போது குணமடைந்து வருகிறார்.

பக்கவாதம் எப்படி ஏற்பட்டது?

ஃபுஜியான் மாகாணத்தைச் சேர்ந்த ஷியாவோ டாங் என்ற மாணவர், மொபைல் ஃபோனில் கேம் விளையாடுவதில் அடிமையாக இருந்ததாகவும், நீண்ட நேரம் குனிந்தே இருந்ததால் கழுத்து தமனிகளில் இரத்த ஓட்டம் தடைபட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தத் தடை, கழுத்தின் மேல் தமனிகளில் இரத்த உறைவை ஏற்படுத்தியது. இது இறுதியில் உயிருக்கு ஆபத்தான பக்கவாதத்திற்கு வழிவகுத்தது. செய்திகளின்படி, மாணவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, இரத்த உறைவு அகற்றப்பட்டது.

மூளை பக்கவாதம் என்றால் என்ன?

மூளை பக்கவாதம் என்பது ஒரு மருத்துவ அவசரநிலை. மூளைக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காமல் போகும்போது இது நிகழ்கிறது. இரத்தக் குழாய் அடைபடுவதாலோ அல்லது மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுவதாலோ பக்கவாதம் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கீழ்நோக்கிக் காட்சி தரும் முருக வேல்: பெருண்ண ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் ரகசியம்!
Stroke

சில சமயங்களில் மருத்துவர்கள் இதை பெருமூளை இரத்தக்குழாய் விபத்து (cerebrovascular accident - CVA) அல்லது மூளைத் தாக்குதல் (brain attack) என்றும் குறிப்பிடுவார்கள். உலகளவில் இறப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாதம் உள்ளது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

உங்களுக்கோ அல்லது நீங்கள் அருகில் இருப்பவருக்கோ பக்கவாதம் ஏற்பட்டதாக சந்தேகித்தால், உடனடியாக அவசர மருத்துவ சேவைகளைத் தொடர்பு கொள்ள வேண்டும். பக்கவாதம் உயிருக்கு ஆபத்தானது. எனவே, எவ்வளவு சீக்கிரம் ஒருவர் கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுகிறாரோ, அவ்வளவு சீக்கிரம் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆகையால், நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது பக்கவாதத்தை தடுப்பதோடு கண் பிரச்சனை முதுகு வலி, சோர்வு போன்ற அனைத்திலிருந்து உங்களை காக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com