வாகனம் பளபளத்தால் போதுமா? இதுதானே முக்கியம்!

Bike and Car
Bike and Car
Published on

என்னதான் பல நவீன வசதிகளுடன் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வந்தாலும், அந்த மொத்த செயல்பாட்டையும் அனுபவிக்க நீங்கள் உபயோகிக்கும் டயருக்குத்தான் முக்கிய பங்குள்ளது. அப்படிப்பட்ட டயரை எப்படி வாங்கி பராமரித்துக்கொள்ளலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

டயர் வாங்கும் முறை:

டயர் வாங்கும் போது, நாம் சில செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் வாகனத்தின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் அதன் இயல்பான இயக்கத்திறனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் கவனிக்க வேண்டியது வண்டி வாங்கும் இடத்தில் கொடுக்கப்படும் கையேட்டில்(Owner’s manual) அந்த வண்டிக்குப் பரிந்துரைக்கப்பட்ட டயரின் அளவு மற்றும் டயர் தாங்கக்கூடிய சுமை (Load rating) பற்றி குறிப்பிட்டிருப்பார்கள்.

அடுத்து, நீங்கள் ஓட்டும் சாலை நிலைமைகளின் வகைகளைக் கவனியுங்கள். நீங்கள் அடிக்கடி ஈரமான காலநிலையில் வாகனம் ஓட்டுகிறீர்களா? மழை நீர் மற்றும் பனிகளால் சூழ்ந்த சாலைகளைக் கையாளக்கூடிய டயர்கள் உங்களுக்குத் தேவையா? அல்லது நீங்கள் பெரும்பாலும் வறண்ட சாலைகளில் ஓட்டுகிறீர்களா? போன்ற கேள்விகளுக்கு பதில்களை தெரிந்துகொண்டு, பின் சரியான டயர் வகையைத் தேர்ந்தெடுங்கள். எடுத்துக்காட்டிற்கு அனைத்து சீசன்(All Seasons), குளிர்காலம்(Winter) அல்லது செயல்திறன் டயர்கள்(Performance Tyres) போன்று ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் தேவையை அறிந்து தேர்வு செய்யலாம்.

இவ்வாறு உங்கள் விருப்பங்களை வரிசைப்படுத்திய உடன், பிராண்டுகள் மற்றும் மாடல்களை ஒப்பிடுவதற்கான நேரம் இது.

முக்கியமாக டிரெட் லைஃப்(tread life), பிரேக்கிங் தூரம்(braking distance) மற்றும் சவாரியின் வசதி(ride comfort) போன்ற சில விஷயங்களைக் கவனத்தில்கொண்டு நல்ல மதிப்புரைகள்(Good Reviews) மற்றும் மதிப்பீடுகளைக்கொண்ட டயர்களைத் தேர்ந்தெடுங்கள்.

மறக்காமல் உத்தரவாதம் பற்றிய முழு விவரம் மற்றும் சில்லறை விற்பனையாளரால் வழங்கப்படும் கூடுதல் சேவைகளான இலவச சுழற்சிகள்(free rotations) அல்லது சாலை ஆபத்துக் கவரேஜ்(road hazard coverage) போன்றவற்றைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!

டயர் தரத்தைப் பராமரித்தல்:

உங்கள் டயர்களின் ஆயுளை நீட்டிப்பதற்கும் சாலையில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவற்றை நன்கு பராமரிப்பது மிகவும் அவசியம்.

நம்பகமான கேஜ்(Pressure Gauge) மூலம் உங்கள் டயர் அழுத்தத்தைத் தவறாமல் சரிபார்க்கவும்; காரணம் தவறான காற்று அழுத்தம் தேவையற்ற சேதங்கள், ரோட்டுடன் இருக்கும் செயலற்ற பிடிப்பு மற்றும் எரிபொருள் நுகர்வு அதிகரிக்க(Fuel Consumption) வழிவகுக்கும்.

உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்பட்ட அட்டவணையின்படி உங்கள் டயர்களைச் சுற்றவிட்டு பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தாமல் இருந்தாலும் சில நேரங்களில் டயர்களில் சேதங்கள் ஏற்படும்.

வெட்டுக்கள், வீக்கம் அல்லது ஆணிகள் போன்ற கூர்மையான பொருட்கள் ஏதேனும் குத்தி உள்ளதா என்பதை வண்டியை ஒவ்வொரு முறை ஸ்டார்ட் செய்யும் முன் பரிசோதிக்கவும்.

சீரமைப்பு மற்றும் சமநிலைப்படுத்துதல்(Alignment and balancing) ஆகியவை டயர் பராமரிப்புக்கு முக்கியமாகும். சில நேரங்களில் சமநிலையற்ற சக்கரங்களின் நிலையால் (Misaligned Wheels) விரைவாக உங்களின் டயரில் தேய்மானங்கள் ஏற்பட்டுவிடும். அதே சமயம் சமநிலையற்ற டயர்கள் தேவையற்ற அதிர்வு(Vibration) மற்றும் சஸ்பென்ஷன் கூறுகளில்(Suspension Components) முன்கூட்டியே பழுது வர வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
பேசுங்க… ஆனால், பேசாதீங்க!
Bike and Car

உங்கள் டயரை எப்போது மாற்ற வேண்டும்:

உங்கள் டயர்களை மாற்றுவதற்கான நேரம் எப்போது என்பதை அறிந்துகொள்வது அவசியம். ட்ரெட்டின் ஆழத்தை(Tread Depth) சரிபார்க்க வேண்டும். சில டயர்கள் ட்ரெட் சேதத்தின் குறிகாட்டிகளுடன் வருகின்றன. அவை எப்போது மாற்ற வேண்டும் என்று நினைவூட்டுகின்றன. மற்றொரு அடையாளம் டயரின் வயது. டயர்கள் பார்ப்பதற்கு நன்றாகத் தெரிந்தாலும், பெரும்பாலான உற்பத்தியாளர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற பரிந்துரைக்கின்றனர்.

சாலையுடனான உங்கள் ஒரே தொடர்பு டயர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். எனவே, அவற்றின் தரம் அல்லது பராமரிப்பில் ஒருபோதும் சமரசம் செய்யாதீர்கள். உங்கள் பாதுகாப்பு மற்றும் வாகனத்தின் செயல்திறன் ஆகியவை அவற்றைத்தான் அதிகம் சார்ந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com