வெள்ளைப் பொய் சொல்வது நல்லதா? கெட்டதா?

White Lye
வெள்ளை பொய்https://www.keetru.com

வெள்ளைப் பொய் என்பது யாருக்கும் பாதிப்பில்லாத அல்லது அற்பமானதாக கருதப்படும் ஒரு பொய். ஒருவரின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க இத்தகைய பொய்களை மக்கள் அடிக்கடி கூறுகின்றனர்.

வெள்ளைப் பொய் என்ற பெயர் வந்தது எதனால்?

பொதுவாக, வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பொய் சொல்லுதல் என்பது தீங்கு விளைவிக்கும், அழிவுகரமான மற்றும் தவறான ஒரு செயல் என்று மக்கள் கருதுகிறார்கள். யாருக்கும் தீங்கு தராத பொய்கள் வெள்ளைப் பொய்கள் என்று பெயரிடப்பட்டன.

உண்மையான பொய்க்கும் வெள்ளை பொய்களுக்கும் உள்ள வித்தியாசம்: யாருக்கும் தீங்கு விளைவிக்காத நேர்மறையான, விளைவுகள் அதிகம் இல்லாத உண்மையின் பாதிப்பில்லாத வெள்ளைப் பொய்கள் சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியவை. சில சூழ்நிலைகளில் அவசியமானதாகக் கருதப்படுகின்றன. வெள்ளைப் பொய்களில் சில எடுத்துக்காட்டுகள்:

ஒருவரிடம், ''இந்த அலங்காரத்தில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்'’ என்று சொல்வது, சிரிப்பு வராத ஜோகிற்கு சிரிப்பது, வெற்று அரட்டை அடிக்க யாராவது போனில் அழைத்தால், ''பிஸியாக இருக்கிறேன்'’ என்று சொல்வது, விருந்தில் கலந்து கொண்டு அந்த உணவு பிடிக்காவிட்டால் கூட நன்றாக இருப்பதாக சொல்வது போன்றவை.

உண்மையாக சொல்லப்படும் பொய்கள் சுயநலத்திற்காக சொல்லப்படுவது. பிறருக்கு வலி. சங்கடம். துன்பத்தை தருபவை. உண்மையாக பொய் சொல்பவர்கள் பிறருடைய உணர்வுகளை மதிப்பதில்லை. தன்னுடைய காரியம் நடந்தால் போதும் என்கிற சுயநல மனப்பான்மை உடையவர்கள்.

வெள்ளைப் பொய்கள் அவசியம்தானா?

வெள்ளைப் பொய்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மை, சூழல் மற்றும் அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை பொறுத்து மாறுபடும். சிறிய பொய்கள் கூட காலப்போக்கில் நம்பிக்கையைக் குலைத்து விடும்.

இதையும் படியுங்கள்:
இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவுதான்… ஜாக்கிரதை மக்களே! 
White Lye

வெள்ளைப் பொய்யை சொல்லும் முன்பு அது தேவைதானா? உங்களுடைய நோக்கத்துடன் ஒத்துப்போகிறதா? என்பதை கருத்தில் கொள்வது மிக அவசியம். நல்ல நோக்கத்துடன் சொல்லக்கூடிய வெள்ளைப் பொய் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால், அதுவே வழக்கமாகி போகும்போது பிறருடைய நம்பிக்கை இன்மையை சம்பாதிக்க வேண்டி வரும். தினமும் சொல்லும்போது ஒரு பழக்கமாகவே மாறி உண்மை பேசுவது என்கிற இயல்பு மாறிப் போய்விடும். எனவே. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மிகவும் தேவைப்பட்டால் மட்டுமே வெள்ளைப் பொய்களை உபயோகிக்க வேண்டும்.

ஒருவரை பாதுகாப்பதற்காகச் சொல்லலாம். துஷ்பிரயோகம் செய்பவனிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வெள்ளைப் பொய் சொல்லலாம். போதையில் இருப்பதாக தோன்றும் நபரிடம் சொல்லலாம். மனநல பிரச்னை உள்ளவர்களிடம் சொல்லலாம்.

நேர்மைக்கும் உண்மைக்கும் எப்போதும் தனி மரியாதையும் மதிப்பும் உண்டு. நேர்மை மிகச் சிறந்த கொள்கை. அன்பிற்குரியவர்களிடம் சொல்லப்படும் வெள்ளைப் பொய்கள் திகட்டிவிடும். அந்த அன்பில் விரிசல் உண்டாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com