இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவுதான்… ஜாக்கிரதை மக்களே! 

Curd
Foods You Should Avoid Eating with Curd

தயிர் என்பது உலகெங்கிலும் பல நபர்களால் உட்கொள்ளப்படும் பிரபலமான மற்றும் சக்துமிக்க பால் பொருளாகும். இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ப்ரோபயோடிக்கள் நிரம்பியுள்ளதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும் செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படாமல் இருக்க, சில உணவுகளை தயிருடன் சேர்த்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.‌ அத்தகைய உணவுகளைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்: 

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களை தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இந்த பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் தயிரிலுள்ள லாடிக் அமிலத்துடன் வினைபுரிந்து, செரிமான அசௌகரியம் மற்றும் வயிற்று உபாதையை ஏற்படுத்தும். 

தயிர் பெரும்பாலும் காரமான தன்மையை சமநிலைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. எனவே மிகவும் காரமான உணவுகளுடன் இதை உட்கொள்வது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். மிளகாய் தூள், காரமான சாஸ்கள் மற்றும் அதிகப்படியான மசாலா பொருட்கள் போன்றவை வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி செரிமான அமைப்பில் பாதிப்பை உண்டாக்கலாம். 

மீன் மற்றும் தயிரை ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் இந்த இரண்டின் கலவையானது ஹிஸ்டமைன் என்ற நச்சுப் பொருளை உருவாக்கி ஒவ்வாமை எதிர்வினைகள், தோல் சிவத்தல், தலைவலி மற்றும் செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும். மேலும் தயிரின் குளிர்ச்சியூட்டும் பண்புகள் மீன் செரிமானத்தில் குறிக்கிடலாம். 

தயிர் ஒரு புளித்த உணவாக இருந்தாலும், ஊறுகாய், புளித்த சோயா பொருட்கள் போன்ற புளித்த உணவுகளுடன் அதை சேர்த்து சாப்பிடுவது குடலில் அதிக நொதிப்பை ஏற்படுத்தும். இது வீக்கம், வாயு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குடல் பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க மற்ற புளித்த உணவுகளுடன் தயிரை ஒருபோதும் உட்கொள்ளாதீர்கள். 

இதையும் படியுங்கள்:
International Burger Day: பர்கர் பிரியர்களே ஒன்று கூடுங்கள்! 
Curd

தயிரே ஒரு பால் பொருளாக இருந்தாலும் இதை மற்ற பால் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. தயிர் புளிப்பாகவும், பால் இனிப்பாகவும் இருப்பதால் இந்த கலவை செரிமானத்தில் தடையிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பாலையும் தயிரையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது வயிற்றில் பாலை திரிந்து போகச்செய்து அஜீரணம் மற்றும் வயிற்று கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.  

எனவே மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பார்த்துக்கொள்வது நல்லது. மேலும் எதுபோன்ற உணவுகளுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்ற தகவல்களை தெரிந்துகொண்டு சரியான உணவுகளை எடுத்துக்கொள்வதனால், எந்த பாதிப்புகளும் இன்றி ஆரோக்கியமாக இருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com