சோம்பேறியாக உணருவது ஒரு மோசமான விஷயம் என்பது அனைவரும் கூறும் ஒரு பொதுவான கருத்து. எப்படி இந்த உலகில் இருக்கும் அனைவரையும் நல்லவர், தீயவர் என்று வகைப்படுத்துகிறோமோ, அதேபோல் ஒரு சுறுசுறுப்பானவர் இருந்தால் அவருக்கு நேரெதிரே கண்டிப்பாக ஒரு சோம்பேறி குணமுடையவர் காணப்படுவார். என்ன, சரிதானே? காரணம் இயற்கையாகவே சிலருக்கு உடல் பருமனால் சோம்பேறித்தனம் காணப்படும் மற்றும் என்னதான் சிலர் ஆக்டிவாக இருக்க நினைத்தாலும், அவர்களின் இயல்பே சற்று மெல்லமாக செயல்படுவதற்கே இணங்கும். ஆக, இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் சிலருக்கு கோபத்தையோ, சிரிப்பையோ வரவைக்கலாம். ஆனால், கண்டிப்பாக ஒரு சிலருக்கு இது ஒரு வழிகாட்டுதலாககூட அமையலாம், அதைப் பற்றி பார்ப்போம்.
1. ஸ்லீப் ஸ்டடி(Sleep Study) பங்கேற்பாளர்:
தூங்குவதற்கு பணம் பெறுவதை கற்பனை செய்து பாருங்கள்! தூக்க முறைகள் மற்றும் அதன் கோளாறுகளைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களுக்கு தூக்க ஆய்வில் பங்கேற்பாளர்கள் தேவை. உங்கள் தூக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்காணிக்க அவர்களின் ஆய்வகத்தில் நேரத்தை செலவிடுவது ஒரு வேலையையே. நீங்கள் ஏற்கனவே இதை விரும்புவராக இருந்தால், இது ஒரு பணம் சம்பாதிப்பதற்கான எளிதான வழி ஆகும்.
2. வீடியோ கேம் சோதனையாளர்:
கேமிங்கை விரும்புவோருக்கு, வீடியோ கேம் சோதனையாளராக மாறுவது ஒரு கனவு வேலை. சோதனையாளர்கள் பிழைகளை அடையாளம் காணவும் கேம்ப்ளே பற்றிய கருத்துக்களை வழங்கவும் கேம்களை விளையாடுகிறார்கள். இந்த விவரங்களை கொடுக்கும்போது ஒரு சிறிய கவனம் தேவை என்றாலும், உங்கள் வீட்டின் வசதியை விட்டு வெளியேறாமல் ஒரு வாழ்க்கையை அனுபவிக்க இது ஒரு வேடிக்கையான மற்றும் ஈடுபாடு கொண்ட வழியாகும்.
3. சர்வே எடுப்பவர்:
ஆன்லைனில் சர்வே எடுப்பது பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிகளில் ஒன்றாகும். பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த நுகர்வோர் கருத்துக்களுக்கு நிறுவனங்கள் பணம் செலுத்துகின்றன. உங்களுக்கு தேவையானது கணினி மற்றும் இணைய இணைப்பு மட்டுமே. ஆக, இது உங்களுக்கேற்ற நேரங்களில் நீங்கள் செய்யக்கூடிய ஒரு நெகிழ்வான வேலையாகும்.
4. சொகுசு வீடு சிட்டர்(HouseSitter):
ஹவுஸ் சிட்டிங் என்பது வீட்டு உரிமையாளர்கள் வெளியில் இருக்கும்போது வீட்டை கவனித்துக்கொள்ள வேண்டிய வேலை. இது தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது, செல்லப்பிராணிகளுக்கு உணவளிப்பது மற்றும் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது போன்ற பணிகளை உள்ளடக்கியது. மேலும், நீங்கள் ஒரு நல்ல வீட்டில் இருக்கும் பட்சத்தில், வாடகை செலுத்தாமல் தங்கக்கூடிய வசதியையும் இது தரும்.
5. Background ஆர்ட்டிஸ்ட்:
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கியமான நடிகர்களுடன் பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாய் திரையில் வர வாய்ப்பளிக்கும். இதற்கு எந்தவிதமான நடிப்புத் திறன்களும் தேவையில்லை, பொழுதுபோக்குத் துறையில் ஒரு பகுதியாக இருக்க இது ஒரு வேடிக்கையான வழியாகும். மேலும், திரைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை நீங்கள் நேரடியாக பார்க்கலாம், மேலும் சில பிரபலங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெறலாம்!
6. நாய் வாக்கர்(Dog Walker):
நீங்கள் விலங்குகளை நேசிப்பவராக இருந்தால், வெளியில் நேரத்தை செலவிடுவதை ரசிக்கிறீர்கள் என்றால், நாய் நடைபயிற்சி ஒரு சரியான பணியாக இருக்கும். நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது, அவற்றிற்கு உடற்பயிற்சி மற்றும் சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்வது இதில் அடங்கும்.
7. தயாரிப்பு சோதனையாளர்(Product Tester):
புதிய தயாரிப்புகள் சந்தையில் வருவதற்கு முன்பு நிறுவனங்களுக்கு முன்கூட்டியே சில கருத்துகள் தேவைப்படும். ஒரு தயாரிப்பு சோதனையாளராக, நீங்கள் புதிய பொருட்களை முயற்சி செய்து உங்கள் கருத்துகளை வழங்கலாம். இதில் கேஜெட்டுகள் முதல் உணவுப் பொருட்கள் வரை எதையும் சோதிக்கலாம். பணம் சம்பாதிப்பதற்கும் இலவச பொருட்களைப் பெறுவதற்கும் இது ஒரு வேடிக்கையான வழியாகும்.