ஆற்று மணலுக்கு ஈடாகுமா எம் சாண்ட்?

M-Sand and R-Sand
M-Sand and R-Sand
Published on

கட்டுமானத் துறையில் எம் சாண்ட் என்ற ஒரு வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்டுகிறோம். எம் சாண்ட் என்றால் என்ன என்பதைப் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் வீடுகள் சுண்ணாம்புக் கலவை அல்லது களிமண் கலவைகளைக் கொண்டு கட்டப்பட்டன. சிமெண்ட் அறிமுகமான பின்னர் ஆற்று மணலின் பயன்பாடு அதிக அளவில் நடைமுறைக்கு வந்தது. ஆற்று மணல் (River Sand) என்பது ஆறுகள் மற்றும் ஆற்றுப் படுகைகளின் கரைகளில் இருந்து கிடைக்கும் மணலாகும். ஆற்று மணலானது பாறைகள் மற்றும் தாதுக்கள் முதலானவை தொடர்ச்சியாக பல நூறு ஆண்டுகளாக அரிக்கப்பட்டு அதன் காரணமாக உருண்டையான வடிவத்தில் இயற்கையாக உருவாகிறது. ஆற்றுப்படுகைகளில் இருந்து தொடர்ச்சியாக இத்தகைய மணலை எடுத்து உபயோகிப்பதன் காரணமாக நிலத்தடி நீர் குறைதல், சுற்றுச்சூழல் பாதிப்புகள், பல்லுயிர் இழப்பு முதலான பிரச்சினைகள் உருவாகின. இத்தகைய இயற்கை பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக எம் சாண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது.

எம் சாண்ட் ஆற்று மணலுக்கு ஒரு நல்ல மாற்றாகக் கருதப்படுகிறது. கடினமான கிரானைட் மற்றும் பாறைகளை நவீன தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்தி உடைத்து அவை தூளாக அரைக்கப்படுகின்றன. எம் சாண்ட் ஆற்று மணலைப் போல உருண்டையாக அல்லாமல் கனசதுர வடிவத்தில் (Cubical shape) அமைந்திருக்கும். இது கட்டுமானத்தில் சிறந்த பிணைப்புத் தன்மையையும் வலிமையையும் உறுதி செய்கிறது.

ஆற்று மணலில் சிலிக்கா என்ற நுண்தாது காணப்படுகிறது. மேலும் ஆற்று மணலில் உப்புகள் போன்ற கரிம மற்றும் கனிம அசுத்தங்கள் கலந்திருக்கக்கூடும். எம் சாண்டில் இது போன்ற எந்த அசுத்தங்களும் காணப்படாது. மேலும் தரமும் எளிதில் கிடைக்கும் தன்மையும் இதன் சிறப்புகளாகும்.

இதையும் படியுங்கள்:
ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விளைவை பயன்படுத்தி உறவுகளை மேம்படுத்துவது எப்படி?
M-Sand and R-Sand

கட்டுமானப் பணிகளில் அதாவது காங்க்ரீட் மற்றும் சுவர்களைக் கட்டப் பயன்படுத்தும் எம் சாண்டானது 4 mm அளவினைக் கொண்டதாக இருக்கும். மேல் பூச்சு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் போது நன்கு சலித்துப் பயன்படுத்த வேண்டும். மேல் பூச்சு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் எம் சாண்டானது 2 mm அளவினைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஆற்று மணலில் அதிக அளவில் ஈரப்பதம் காணப்படும். ஆனால் எம் சாண்டில் ஈரப்பதமானது குறைவாகவே இருக்கும். எம் சாண்ட் கலவையினை

தயார் செய்யும்போது ஈரப்பதமானது சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக நல்ல தரமான எம் சாண்ட் ஆனது கறுப்பு நிறம் கொண்டதாக இருக்கும். இதை நீங்கள் உறுதி செய்து கொள்ள விரும்பினால் இதற்கென உள்ள ஆய்வகத்தில் கொடுத்து அதன் தரத்தினை நீங்கள் அறிந்து கொள்ளலாம். எம் சாண்டின் விலையானது ஆற்று மணலை விட குறைவாகவே உள்ளது.

பல சோதனைகளின் மூலம் ஆற்று மணலை விட எம் சாண்ட் சிறந்தது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது உலகின் பல நாடுகளிலும் எம் சாண்ட் பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com