கேஸ் அடுப்பில் மஞ்சள் தீயா? பாத்திரம் கறுப்பாகுதா? இதோ சுலபமான தீர்வு!

gas Stove
gas Stovegas Stove
Published on

உங்கள் வீட்டு கேஸ் அடுப்பில் தீ திடீரென மஞ்சள் நிறத்தில் எரிகிறதா? அப்படி எரிந்தால், சமைக்க வைக்கும் பாத்திரங்கள் எல்லாம் சீக்கிரமே கறுப்பாக மாறிவிடும். அது மட்டும் இல்லாமல், உங்கள் வீட்டு கேஸ் சிலிண்டரும் சீக்கிரமாகத் தீர்ந்துவிடும். இந்த மஞ்சள் நிறத் தீயை எப்படி நாமே சரிசெய்து, திரும்பவும் நீல நிறத் தீயாக எரிய வைப்பது என்று இந்தப் பதிவில் எளிமையாகப் பார்க்கலாம்.

மஞ்சள் தீயால் வரும் பிரச்சனைகள்!

மஞ்சள் தீ எரிந்தால் நாம் சமைக்கும் பாத்திரத்தின் அடிப்பாகத்தில், அடுப்பில் வைத்த கொஞ்ச நேரத்திலேயே கறுப்பாக கறி பிடிக்க ஆரம்பித்துவிடும். இதுவே அடுப்பு நீல நிறத்தில் சரியாக எரிந்தால், பாத்திரம் கறுப்பாகாது. முக்கியமான பிரச்சனை, கேஸ் மிகவும் வீணாகும். அதாவது, எரிபொருள் முழுமையாக எரியாததால், உங்கள் சிலிண்டர் வழக்கத்தை விடச் சீக்கிரமே காலி ஆகிவிடும்.

இதற்கு என்ன காரணம்?

இதற்கான காரணம் மிகவும் எளிமையானது. எந்த ஒரு தீயும் முழுமையாக எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. கேஸ் சிலிண்டரிலிருந்து வரும் எரிபொருளும், காற்றும் சரியான அளவில் ஒன்று சேரும்போது, அது முழுமையாக எரிந்து நீல நிறத்தில் ஒளிரும். ஆனால், கேஸ் வரும் அளவிற்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால், எரிபொருள் பாதியாக எரிந்து மஞ்சள் நிறத் தீயை உருவாக்கும்.

நமது அடுப்புக்கு அடியில், கேஸ் வரும் குழாய்ப் பகுதியில், காற்று உள்ளே செல்வதற்காக இரண்டு சிறிய ஓட்டைகள் வைக்கப்பட்டிருக்கும். நாட்கள் செல்லச் செல்ல, அந்த ஓட்டைகளில் தூசி, அழுக்கு, அல்லது பெரும்பாலும் சிலந்தி வலை வந்து அடைத்துக் கொள்ளும். இப்படி அடைத்துக் கொள்வதால், எரிபொருளுடன் கலப்பதற்குத் தேவையான காற்று உள்ளே செல்ல முடியாது. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறைதான் மஞ்சள் தீயை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
ஹைத்ராபாத் அணி தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து!!
gas Stove

சுத்தம் செய்வது எப்படி?

இதைச் சரி செய்ய, முதலில் கேஸ் அடுப்பை முழுமையாக அணைத்துவிடுங்கள். அடுப்பு சூடு ஆறிய பிறகு, மேலே இருக்கும் ஸ்டாண்ட் மற்றும் பர்னர் இரண்டையும் தனியாக எடுத்துவிடுங்கள். இப்போது அடுப்பை மெதுவாகத் தலைகீழாகத் திருப்புங்கள். பர்னருக்கு கேஸ் வரும் அந்த குழாய்ப் பகுதியைப் பாருங்கள். அதன் பக்கவாட்டில் இரண்டு காற்று ஓட்டைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

அந்த ஓட்டைகளில் ஒட்டடை அடைத்திருப்பது உங்கள் கண்ணுக்குத் தெரியும். ஒரு 'டெஸ்டர்' ஸ்க்ரூடிரைவர் அல்லது ஒரு சிறிய குச்சியை வைத்து அந்த ஓட்டைகளுக்குள் விட்டு நன்கு சுத்தப்படுத்த வேண்டும். உள்ளே இருக்கும் எல்லா ஒட்டடை, தூசியையும் முழுமையாக வெளியே எடுத்துவிடுங்கள். நட்டை கழற்றி எடுத்தும் சுத்தம் செய்யலாம், ஆனால் இப்படிச் செய்வதே எளிதானது.

இதையும் படியுங்கள்:
கேஸ் ஸ்டவ் தீ குறைவா எரியுதா? வீட்டிலேயே எளிதா சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்!
gas Stove

நன்றாகச் சுத்தம் செய்த பிறகு, அடுப்பைப் பழையபடி நேராக வைத்து, பர்னர் மற்றும் ஸ்டாண்டை மாட்டிவிடுங்கள். இப்போது அடுப்பைப் பற்ற வைத்துப் பாருங்கள். தீ நல்ல நீல நிறத்தில், அருமையாக எரியும். இதன் மூலம் கேஸ் முழுமையாக எரிகிறது என்று அர்த்தம். 

இனி உங்கள் பாத்திரத்தில் கறி பிடிக்காது, கேஸும் மிச்சமாகும். ஒரு முக்கியமான விஷயம்: உங்கள் அடுப்பு பல வருடங்கள் பழசாக இருந்தால், சில சமயம் இந்த சுத்தம் மட்டும் போதாது. அந்தப் முழுப் பகுதியும் தேய்ந்து போயிருக்கலாம், அதை மாற்றினால்தான் இந்தப் பிரச்சனை சரியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com