ஐபிஎல் தொடரில் ஐத்ராபாத் அணி தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகளும், வீரர்களும் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். யாரும் எதிர்பாரா விதமாக இந்த ஆண்டு சென்னை அணி விளையாடிய 6 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது.
இதனால், சென்னை அணியின் கேப்டன் மாற்றப்பட்டு, மீண்டும் தோனியே தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போதைக்கு குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. டெல்லி அணி இரண்டாவது இடத்திலும், பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது.
அதேபோல், 6 போட்டிகளில் விளையாடிய ஹைத்ராபாத் அணி வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. எவ்வளவு அதிரடியாக விளையாடினாலும், ஹைத்ராபாத் அணி தோல்வியே சந்திக்கிறது.
இப்படியான நிலையில், ஹைத்ராபாத் அணி வீரர்கள் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள Park Hyatt ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்த ஹோட்டலின் முதல் மாடியில்தான் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் புகை சுற்றியுள்ள பகுதிக்கெல்லாம் பரவியது. தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புத் துறையின் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர்.
மேலும், இந்த தீ விபத்து ஏற்பட்டவுடன் அணி வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் வேறு எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தீ விபத்தின் காரணம் இதுவரை தெரியவில்லை, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கும் நிலையில், ஹைதராபாத்தில் தீ விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகரம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களில் தீ பாதுகாப்பு தயார்நிலை குறித்த முக்கியதுவத்தையும் இச்சம்பவம் உணர்த்தி உள்ளது.
இந்தச் சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைத்ராபாத் அணி வரும் 17ம் தேதி மும்பை அணியுடன் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.