Unparalleled Benefits of Oma Water
Unparalleled Benefits of Oma Waterhttps://www.onlymyhealth.com

ஓம வாட்டர் தரும் ஒப்பற்ற நன்மைகள்!

Published on

மம் என்பது பண்டைய காலம் தொட்டு புழக்கத்திலிருந்து வரும் ஓர் அற்புத மூலிகை விதை. ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் ஓம விதைகளைச் சேர்த்து சில நிமிடங்கள் ஊற விட்டு வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் கிடைக்கும் நன்மைகள் பல.

ஓமம் நல்ல பசியைத் தூண்டிவிடும். சிரமமில்லா ஜீரணத்துக்கு உதவும். மெட்டபாலிசம் அதிசயிக்கத்தக்க வகையில் நடைபெற உதவி புரியும். அதன் மூலம் கொழுப்புகள் எரிக்கப்பட்டு எடை அதிகரிக்கும் அபாயம் தடுக்கப்படும். ஆயுர்வேதத்தில் இது ஒரு சக்தி வாய்ந்த துப்புரவுத் தொழிலாளியாகக் கருதப்படுகிறது.

இந்த மூலிகை விதையானது ஜீரண மண்டலப் பாதையில் உண்டாகும் வீக்கங்களைக் குறைத்து சுத்தமாகச் செய்யும்; அசிடிட்டியால் உண்டாகும் அசௌகரியங்களைக் களையும்; மலச் சிக்கலை நீங்கச் செய்யும்; தீங்கேற்படச் செய்யும் பாக்ட்டீரியா மற்றும் பூஞ்சைகளை ஒழிக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் செய்யும். மொத்தத்தில் அத்தனை ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் ஓமம் பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
கடந்த கால நினைவுகளில் இருந்து மீண்டு வர, உளவியலாளர்கள் கூறும் 2 டெக்னிக்குகள்!
Unparalleled Benefits of Oma Water

சுடு நீரில் ஓம விதைகளைச் சேர்த்துத் தயாரித்த ஓம வாட்டருடன் சிறிது தேன், பிளாக் சால்ட் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து சுவையான அஜ்வைன் (Ajwain) டீயாகவும் தயாரித்து அவ்வப்போது அருந்தலாம். சில நேரங்களில் வயிறு உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் பசியின்மை ஏற்படும்போது ஓம விதைகளுடன் சுக்கு சேர்த்துப் பொடித்து அதனுடன் பனஞ் சர்க்கரை கலந்து சிறு சிறு உருண்டைகளாக்கி ஒரு உருண்டை உண்ணும்போது பிரச்னையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் அளிக்கும் ஓமம் என்ற மருத்துவ மூலிகை விதைகளை சமையல் அறையில் எப்பவும் வைத்திருந்து தேவையேற்படும்போது உசிதமான முறையில் உபயோகித்து ஆரோக்கியம் பெறுவோம்.

logo
Kalki Online
kalkionline.com