
என்னுடைய சிநேகிதி வீட்டு பூஜைக்கு அவள் என்னை அழைத்திருந்தாள். கூடமாட உதவி செய்து கொண்டிருந்தேன். பூஜையை நடத்தி வைக்க வந்திருந்த வாத்யாருக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்தேன்.
பூஜை செய்ய வந்திருந்த வாத்யார் மந்திரங்கள் சொல்கையில், பரம்பரை வழக்கம் மற்றும் சந்ததிகளின் பெயர்களைக் கேட்டார். அவளுக்கு சரியாகத் தெரியவில்லை. கணவருக்கும் சொல்லத் தெரியவில்லை. அப்போது வாத்யார் கூறிய விபரங்களை அப்படியே குறிப்பிட்டுள்ளேன்.
வீட்டிலுள்ள பெரியவர்கள், தங்களுடைய. பரம்பரை; பின்பற்றும் விசேஷங்கள்; பூஜைகள்; ஸ்ரார்த்தம் போன்றவைகள் பற்றி குடும்ப உறுப்பினர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு டைரி அல்லது நோட்புக்கில் விபரமாக குறித்து வைக்கவேண்டும்.
மேலும், வீட்டில் உள்ளவர்களுக்கும் சொல்லி வைப்பது, Email. அல்லது WhatsApp-ல் அனுப்புவதும் கூட நல்லது. பூஜை, திதி போன்றவைகள் நடக்கையில், வீட்டு வாரிசுகளுக்கு இந்த விபரங்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். மறந்து போனாலும், டைரியைப் பார்த்துக் கூறலாம்.
எழுதி வைக்க வேண்டிய விபரங்கள்!
நம்முடைய குலம், கோத்திரம், பூர்வீகம், குலதெய்வம். தகப்பனார், தாத்தா, கொள்ளு தாத்தா இவர்களின் பெயர்கள் மற்றும் தாயார், பாட்டி, கொள்ளு பாட்டி பெயர்கள்.
அம்மாவின் பிறந்த வீட்டு கோத்ரம் , அம்மாவின் தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா மற்றும் அம்மாவின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி பெயர்கள்.
தை, ஆடி வெள்ளியில் மாவிளக்கு போடும் வழக்கம் ஸ்ராத்த திதி வரும் தினம் மற்றும் ஸ்ரார்த்த சமையல் முறை.
வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் பெயர்கள், சுமங்கலி பிரார்த்தனை வழக்க விபரங்கள்.
நெற்றியில் விபூதி, கோபி, சந்தனமா? அல்லது அரைத்த கீர் சந்தனமா? வரலக்ஷ்மி விரதம் வீட்டு வழக்கம்...
சமாராதனை செய்யும் வழக்கமென்றால், எந்த தெய்வத்துக்கு? செய்முறை.?
நமது தலைமுறை
குடும்ப Family Tree Chart
கொலு உண்டா..?
குடும்ப வாத்தியார்
இத்யாதி! இத்யாதி!
நமது அடுத்த தலைமுறையினர், பரம்பரை சம்பிரதாயங்களை பின்பற்றுவார்களோ, செய்வார்களோ தெரியாது என்றாலும், நம்முடைய கடமையை நாம் செய்வது உத்தமம்.