
செல்வம் செழிக்க வேண்டும், பண வரவு அதிகரிக்க வேண்டும் என பலர் பல விஷயங்களை செய்கின்றனர். எவ்வளவு உழைத்தாலும், சில சமயங்களில் பணப் பற்றாக்குறை ஏற்படுவதுண்டு. எதிர்பாராத செலவுகள், பண விரயம் போன்றவை மனதை சோர்வடையச் செய்யும். ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில தாவரங்கள் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, நம் வீட்டின் செல்வ வளத்தைப் பெருக்கும் சக்தி கொண்டவை.
குபேரரின் ஆசீர்வாதத்தை அள்ளித் தரும் ஜேட் செடி:
ஜேட் செடி (Jade plant): வாஸ்து நிபுணர்கள், இந்தச் செடியை வீட்டில் வளர்ப்பது பண வரவுக்கு எந்தக் குறையையும் ஏற்படுத்தாது என்று உறுதியாகக் கூறுகின்றனர். வீட்டின் அழகை அதிகரிப்பதோடு, மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் அளிக்கும் பச்சை நிற செடிகள், சுற்றுப்புறச் சூழலையும் தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, ஜேட் செடி செல்வ செழிப்பைப் பெருக்கும் ஒரு அதிசக்தி வாய்ந்த தாவரமாகக் கருதப்படுகிறது.
சரியான திசையில் வளர்ப்பது அவசியம்:
இந்த அதிர்ஷ்டச் செடியை வளர்க்க பெரிய இடம் தேவையில்லை. சிறிய தொட்டிகளில் கூட இதனை எளிதாக வளர்க்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, தென்மேற்கு திசையில் ஜேட் செடியை வைப்பது மிகவும் உகந்தது. ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால், வடக்கு திசையும் ஏற்றதே. சூரிய ஒளி இந்தச் செடியின் மீது படும்படி பார்த்துக் கொள்வது அதன் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மணி பிளான்ட் போலவே, ஜேட் செடியும் செல்வத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இதை வீட்டில் வைப்பதால், தொழில் மற்றும் வேலையில் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் கைகூடும். கிரக தோஷங்களின் தாக்கத்தைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் சக்தி இதற்கு உண்டு என்றும் வாஸ்து வல்லுநர்கள் நம்புகின்றனர்.
ஜேட் செடியைத் தவிர, வீட்டில் மஞ்சள் செடி மற்றும் செம்பருத்தி போன்றவையும் செல்வ வளத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவை. மேலும், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த துளசி செடியை வீட்டில் வளர்ப்பது தெய்வீக ஆற்றலை ஈர்த்து, அன்னை மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்றுத் தரும்.
இந்தத் தாவரங்களை நம் வீட்டில் வளர்ப்பதன் மூலம், நேர்மறை அதிர்வுகளை அதிகரித்து, செல்வ வளத்துடன் மன அமைதியையும் பெறலாம் என்பது நம்பிக்கை.