

ஆரம்பித்தாயிற்று வெயிலின் கொடுமையான தாக்கம். இந்த கொளுத்தும் வெயிலில் சூடான கோடைக் காற்று வீசுவதால் நாம் அதிகமாக வீட்டிலேயே இருப்பது நல்லது.
ஆனால் அதற்காக வெயிலின் சூட்டை தணிக்க நாம் எல்லா நேரங்களிலும் ஏர் கண்டிஷனர் பயன்படுத்துவது இயலாத காரியம். எனினும், ஏர் கண்டிஷனர் இல்லாமலேயே நம் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். அதற்கான எளிய வழிகள் என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
காற்றோட்டத்தை பரவவிடுதல்
வீட்டுக்குள் குளிர்ச்சியை உண்டாக்க சிறந்த வழிகளில் ஒன்று நல்ல காற்றோட்டம் ஏற்படுத்துவது. வீட்டின் எல்லா இடங்களிலும் ஜன்னல்களைத் திறந்து ‘கிராஸ் வென்டிலேஷன்’ ஏற்படுத்தலாம். இதனால் குளிர்ந்த காற்று சுழன்று அறைகளை குளிர்விக்க உதவும். மேலும், வீட்டுக்குள் உள்ள கதவுகளையும் திறந்துவைத்தால் காற்று சீராக பாயும்.
ஜன்னல்களை சரியான நேரத்தில் திறக்கவும்
வீட்டிற்கு வெளியே வெப்பநிலை குறைவாக இருக்கும்போது, அதாவது அதிகாலை அல்லது மாலை நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து வைக்கவேண்டும். இதனால் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் பரவும். ஆனால் மதிய நேரத்தில் உச்சி வெயிலில் ஜன்னல்களை மூடிவைப்பதன் மூலம், காலை மற்றும் மாலையில் கிடைத்த குளிர்ச்சி இரவில் நீடிக்கும்.
திரைகள், பிளைன்ட்ஸ் அல்லது ஷேட்களை பயன்படுத்துங்கள்
சில அறைகளில் ஜன்னல்கள் வழியாக நேரடி சூரிய ஒளி உள்ளே வந்தால் வெப்பநிலை அதிகரிக்கும். எனவே, அங்கு திரைச்சீலைகளை அல்லது பிளைன்ட்ஸ் அல்லது ஷேட்களை பபயன்படுத்துவது நல்லது. வெளிர் நிற திரைகளை தேர்ந்தெடுக்க வேண்டும், ஏனெனில் அவை சூரிய ஒளியை பிரதிபலித்து வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
வீட்டைச் சுற்றிலும் பசுமை வளர்த்தல்
வீட்டின் சுவர்கள் மற்றும் ஜன்னல்கள் அருகே மரங்கள், செடிகள் அல்லது கொடிகள் வளர்ப்பது நல்ல நிழலை உருவாக்கும். இது நேரடி சூரிய ஒளியைத் தடுத்து வீட்டை குளிர்விக்க உதவும். மேலும், செடிகள் காற்றில் ஈரப்பதத்தை அதிகரித்து சூழலை சற்று குளிர்ச்சியாக்கும்.
காற்றாடி (விசிறி) பயன்படுத்துதல்
சீலிங் பேன் பயன்படுத்துவதால் அறையில் காற்றைச் சுழற்றி குளிர்ச்சியான உணர்வை அளிக்கும். சீலிங் ஃபேன் அல்லது போர்டபிள் ஃபேன் பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் சீலிங் விசிறி எதிர் கடிகார திசையில் (counterclockwise) சுழலவேண்டும்.
மின்சார சாதனங்களின் பயன்பாட்டை குறைத்தல்
சமையல் சாதனங்கள், டி.வி, கணினி, இன்காண்டசன்ட் விளக்குகள் போன்றவை வெப்பத்தை உண்டாக்கும். இவற்றை மதிய நேரத்தில் குறைவாக பயன்படுத்த வேண்டும். காலை அல்லது மாலை உணவு தயாரித்தல், மின்சார சேமிப்பு விளக்குகள் பயன்படுத்துதல் ஆகியவை வீட்டை குளிர்விக்க உதவும்.
மாடிகளில் கூலிங் பெயிண்ட் மற்றும் இன்சுலேஷன்
நல்ல இன்சுலேஷன் வீட்டுக்குள் வெப்பம் நுழைவதைத் தடுக்கும். மாடிகளில் கூலிங் பெயிண்ட் மற்றும் சுவர்களில் இன்சுலேஷன் செய்வது வெப்பத்தை குறைக்க உதவும். மேலும், வெளிர் நிறப் பெயிண்ட் அல்லது பிரதிபலிப்பு பூச்சு பயன்படுத்தினால் சூரிய வெப்பத்தின் தாக்கம் குறையும்.
வெயில்காற்று காலங்களில் வீட்டை குளிர்விக்க அதிக செலவு தேவையில்லை. காற்றோட்டத்தை மேம்படுத்துதல், சூரிய ஒளியைத் தடுக்குதல், வீட்டுக்குள் வெப்பத்தை குறைத்தல் மற்றும் நிழல் உருவாக்குதல் போன்ற எளிய வழிகள் மூலம் சுகமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கலாம்.