கோபம் எனும் குப்பையை எறியுங்கள்: உறவுகளைக் காக்கும் உன்னத வழிகள்!

Lifestyle Articles
Lifestyle Articles
Published on

வாழ்க்கை என்பது வியாபாரம் அதில் ஜனனம் என்பது வரவாகும், மரணம் என்பது செலவாகும், என்பதுபோல ஏற்றம் இறக்கம் நிறைந்ததே வாழ்க்கை. அதை சரிவர நடத்தத் தொியாமல் என்ன வாழ்க்கை வாழ்கிறோம், எதற்காக வாழ்கிறோம், என வாழ்வின் அர்த்தம் தொியாமல் வாழ்பவர்களும் உண்டு.

நூறு வலிமை வாய்ந்த கரங்களைக் காட்டிலும், ஒரு அறிவு சாா்ந்த தலைமையே சிறந்ததாகும். எனக்கூறினாா் தாமஸ்ஃபுல்லர் என்ற ஒரு அறிஞர்.

ஒரு நாட்டின் நிா்வாகமோ, ஒரு கட்சியின் செயல்பாடோ, ஒரு தொழிற்சாலையின் இயக்கமோ, ஒரு குடும்பத்தின் கட்டுக்கோப்பான செயல்பாடுகளோ, தலைமை வகிப்பவர்களின் திறமையில்தான் உள்ளது. இதுவே நடைமுறை. ஒரு குடும்பத்தை பொறுத்தவரையில் கணவன் மனைவி இரண்டுபேரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் புாிந்து வாழ்ந்து வந்தாலே அனைத்து பிரச்னைகளையும் எளிதில் சமாளித்துவிடலாம்.

ஒரு குடும்பத்தை நிா்வகிப்பது அவ்வளவு எளிதல்ல, நம்மிடம் இருக்கவேண்டிய முக்கியமான விஷயமான நல்ல எண்ணம், நல்ல ஒழுக்கம், நல்ல பண்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

அதேபோல ஒரு குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவருவதில் பெண்களின் பங்களிப்புக்கு அதிக சக்தி உள்ளது என சொல்லலாம்.

பொதுவாக மனிதனிடம் கோபம் எனும் தேவையில்லாத குப்பை சேரவே கூடாது. கோபம் இல்லாத மனிதர்களே இல்லைதான். அதுவே நம்மிடம் தொடர்ந்து வந்தால் தொல்லைதான்.

எதற்குமே சூழ்நிலைகளை குறை சொல்வதை விட்டுவிடுவதே நல்லது. அந்த நேரம் சூழ்நிலையை குறை சொல்லாமல் நோ்மறை சிந்தனையோடு வாழ்க்கைப் பயணத்தை இனிதே கடக்கவேண்டும்.

நமக்கென நாம் கடைபிடித்து வரும் கொள்கையிலேயே பிடிவாதமாக இல்லாமல் விதண்டாவாதம் செய்யாமல், வாழ்வதும் ஒரு சிறப்பம்சமே!

கோபத்தால் செய்வது தொியாமல் நிதானம் தவறுதல், பிடிவாதம் கடைபிடித்தல், உஷ்ணமான தேவையில்லாத வாா்த்தைகளை பிரயோகிப்பதால், ஒரு நன்மையும் வராது. அப்படி நிதானம் தவறி பேசுவதால் என்ன கிரீடம் வரப்போகிறது பகைமைதான் பரிசாகக் கிடைக்கும். அதனால் உறவுகளை தொலைத்துவிட்டு நஷ்டப்படுவதே மிச்சமாகும்.

இதையும் படியுங்கள்:
சும்மா அழகுக்காக மட்டும் ஆடும் நாற்காலி வாங்கிடாதீங்க.. இந்த ரகசியங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.
Lifestyle Articles

பொதுவாகவே நல்ல விஷயங்களை அடுத்தவர் களிடமிருந்து கற்றுக்கொள்வதில் தப்பே கிடையாது. வாழு, வாழவிடு, என்பதே இதன் நோக்கமாகும். எப்போதுமே குறிக்கோளை நோக்கியே இறைவன் துணையோடு நமது வாழ்வானது நடைபோடுவதே நல்லது.

அதேபோல திருமதிகளின் ஆலோசனை, அவர்களின் திறமையை வைத்துத்தான் எதையும் செயல்படுத்த முடியும். யாராக இருந்தாலும் தன் குற்றம் உணர்ந்து செயல்படுவதே நன்மைக்கான வழி.

வரவுக்கேற்ப செலவு செய்து கட்டுக்கோப்பாய் ஆடம்பரம் தவிா்த்து வாழ்வதே நல்லது. அதுவே நன்மை பயக்கும். எனவே ஒரு குடும்பத்தை நல்ல விதத்தில் கொண்டு சொல்வது தலைமைப்பண்புகளுக்கான செயல் என்பதை உணர்ந்து வாழ பழகிக்கொள்ளுங்கள் வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com