கிச்சன் வாஸ்து டிப்ஸ்: அடுப்பு முதல் சிங்க் வரை... சரியான திசையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

kitchen-vasthu-tips
kitchen-vasthu-tipsImage Credit: Freepik
Updated on

மயலறை உங்களை ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இடமாகும் அங்கு நிலவும் நல்ல சக்தி வீட்டில் உள்ள அனைவரையும் இணைக்கும். சமயலறை வாஸ்து சரியாக இருக்கவேண்டியது முக்கியமாகும். சமயலறை வாஸ்து விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

வாஸ்து நின்றபடி சமயலறை வீட்டின் தென்கிழக்குப் பகுதியில் இருப்பது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இது நெருப்போடு ஒத்துப்போகும் திசையாக கருதப்படுகிறது.‌ இது முடியாவிட்டால் வடமேற்கு பகுதியில் சமையலறையை அமைப்பது நல்லது.

வடக்கு, வடகிழக்கு, மற்றும் தென்மேற்கு திசைகளில் சமயலைறையை அமைப்பது தவிர்க்கப்பட வேண்டும். வாஸ்து பிரகாரம் சமயலறை அமைப்பதற்கு ஏற்ற திசைகள் அல்ல என்று கருதப்படுகிறது.

வாஸ்துவின்படி சமயலறையும், குளியலறையும் இணைத்து அமைப்பது சரியானது அல்ல.

அதிக அளவு நேர்மறை ஆற்றல்கள் பெறுவதற்கு சமையலறையின் நுழைவாயில் மேற்கு திசையோ அல்லது வடதிசையோ இருக்க வேண்டும். இது உங்களுக்கு முடியவில்லை என்றால் தென்கிழக்குப் பகுதியில் சமயலறை நுழைவாயில் அமைப்பது நல்லது.

சமயலறை கதவை சரியான திசையில் வைத்திருந்தால் செல்வமும், குடும்பத்தில் ஒற்றுமையும் பெருகும்.

காஸ் அடுப்பு வாஸ்து

காஸ் அடுப்பை தென்கிழக்கு பகுதியில் வைப்பது சிறந்தது. இந்த திசை அக்னியின் பிரதிநிதியாக கருதப்படுவதே இதற்குக் காரணம். கிழக்கு முகமாக அடுப்பை வைப்பதும் சமையலறையை சமச்சீரான நிலையில் வைக்கும் என்று சமயலறை வாஸ்து கூறுகிறது. இதன் மூலம் உங்களுக்காகத் தயாரிக்கப்படும் உணவு நேர்மறை ஆற்றல்கள் நிறைந்த இடத்தில் தயாரிக்கப்படுகிறது.

சமயலறைக் கதவு ஒற்றையாக இருக்கவேண்டும். இது திறக்கப் படும் திசை வலப்புற கடிகாரச் சுற்று திசையாக இருப்பது மிகச் சிறந்தது‌ இந்தமாதிரி இருப்பதால் செல்வச் செழிப்பும், நேர்மறை ஆற்றல்களும் அதிகமாகும்

சமயலறை ஜன்னல்

சமயலறையில் ஜன்னல்கள் கிழக்கு அல்லது தெற்குப் பகுதியில் அமைப்பது நல்லது. இதன் மூலம் சூரிய வெளிச்சம் அதிகமாக இருக்கும். இரண்டு ஜன்னல்கள் இருந்தால் சிறியதாக ஒன்றும் பெரியதாக ஒன்றும் எதிரெதிரே இருக்குமாறு அமைக்கவேண்டும். வாஸ்துப்படி அமைக்கப்பட்ட கதவு மற்றும் ஜன்னல்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சமயலறை மேடை

சமயலறை மேடைக்கு கருப்பு மார்பிள் மற்றும் கிரானைட் கற்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.‌ நிறங்களில் மஞ்சள் மற்றும் பச்சையை தேர்ந்தெடுப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பெருகும்.

இதையும் படியுங்கள்:
பிள்ளைகளின் நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? பலன் தரும் எளிய உணவு முறைகள்!
kitchen-vasthu-tips

கிச்சன் சிங்க்

இந்த சிங்க் சமயலறையில் வடக்கு அல்லது வடகிழக்குப் பகுதியில் இருப்பது நல்லது.‌ சமயலறை மேடையோடு சிங்க் அமைக்கக் கூடாது. அக்னியும், தண்ணீரும் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதால் அப்படி அமைப்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி சேர்த்து அமைந்துவிட்டால் இவை இரண்டிற்கும் இடையே ஒரு சைனா வேஸ் பூந்தொட்டி வைக்கலாம். இது வாஸ்துவை சரி செய்யும்

ஃப்ரிட்ஜ் வைக்க தென் மேற்கு பகுதி சிறந்ததாக கருதப்படுகிறது‌ அதை வடகிழக்கு பகுதியில் மட்டும் வைக்கக்கூடாது.

சமயலறை பாத்திரங்கள்

பாத்திரங்களை தெற்கு அல்லது மேற்கு பகுதியில் வைக்கலாம். உங்கள் சமயலறை குடிநீர் அமைப்பு வட கிழக்கு அல்லது வடக்கு மூலையில் அமைக்கப்பட வேண்டும். அன்னபூரணியின் அம்சமாக சமயலறை தெய்வீகமாக கருதப்படுவதால் வாஸ்துவின்படி சமையலறையை அமைப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

logo
Kalki Online
kalkionline.com