motivation
motivationImage credit - pixabay.com

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

Published on

ம்மில் பலர் ஏதோ வாழ்கிறோம், ஏதோ செய்கிறோம் என்றே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது பிறப்பின் அர்த்தம் தெரியாமலோ அல்லது நமக்கு இருக்கும் திறமையை வெளிப்படுத்தாமல் நமக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

பிறப்பும், இறப்பும் இந்த இரண்டு நிகழ்வுகள் இடையே மனிதன் எத்தனை மாறுபட்ட காலங்களைச் சந்திக்கிறான். அதிலிருந்து பல அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறான்.

காலங்கள் ஓட, ஓட மனிதனின் வயதும் ஏறுகிறது. பால்யம், இளமை, முதுமை என்று மூன்று விதமாக மனிதனின் வாழக்கை வகுக்கப்படுகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கைதான் அந்த மனிதனின் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

மனிதன் இறந்த பின்பு, அவனுடைய நல்ல குணங்கள், அவன் செய்த நல்ல செயல்கள் என்றும் நம்மோடு நிலைத்து நிற்கின்றன. இவை தான் ஒரு மனிதனின் வாழக்கையை வரலாறாக மாற்றுகிறது.

ஜென் துறவி ஒருவரின் மனைவி இறந்து விட்டார். துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது. எல்லோர் முகத்திலும் வருத்தம், கண்ணீர். ஆனால் துறவியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக்கொண்டு இருந்தார், சர்வசாதாரணமாக.

இதையும் படியுங்கள்:
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!
motivation

துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி. ஒருவன் துணிந்து கேட்டான், ''குருவே, நீங்களே இப்படிச் செய்யலாமா? என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும் போது, நீங்கள் கவலையின்றி பாடிக்கொண்டு இருக்கிறீர்களே?'

ஞானி சொன்னார்,

'பிறப்பில் சிரிக்கவோ, இறப்பில் அழுவதற்கோ

என்ன இருக்கிறது..? பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.

என் மனைவிக்கு முன்பு உடலோ, உயிரோ இல்லை. பிறகு உயிரும் உடலும் வந்தன. இப்போது இரண்டும் போய்விட்டன. 

இடையில் வந்தவை இடையில் போயின. இதில் வருத்தம் அடைவதற்கு என்ன இருக்கிறது?'' என்றார்.

பிறப்பு ஒன்று இருந்தால் அதனுடன் இறப்பு ஒன்றும் இருக்கிறது . பிறப்பும், இறப்பும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள். பிறப்பு எப்படி இன்றியமையாததோ, அது போல்தான் இறப்பும் பிறப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது இறப்பு துக்கத்தைக் கொடுக்கிறது.

மனிதன் எத்தனை காலங்கள் வாழ்ந்தான் என்பது முக்கியம் இல்லை. அவன் எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம். நம் வாழ்க்கை நம் மறைவுக்கு பின்னாலும் பேசப்பட வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்

logo
Kalki Online
kalkionline.com