ரேடியோகிராஃபியின் பயன்பாடுகள் பற்றி தெரியுமா?

நவம்பர் 8, உலக ரேடியோகிராஃபி தினம்
Applications of Radiography
Applications of Radiography
Published on

ரேடியோகிராஃபி என்பது உடலின் உட்புறத்தில் படங்களை எடுக்க எக்ஸ்ரே கதிர்களைப் பயன்படுத்தும் ஒரு மருத்துவ செயல்முறையாகும். ரேடியோகிராஃபி பாரம்பரிய மருத்துவப் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பல்துறை இமேஜிங் நுட்பமாகும்.

ரேடியோகிராஃபி வேலை செய்யும் விதம்: ஒரு எக்ஸ்ரே இயந்திரம் எக்ஸ் கதிர்களை உருவாக்குகிறது. இது ஒருவகையான மின்காந்த கதிர்வீச்சு ஆகும். எக்ஸ் கதிர்கள் உடல் அல்லது பொருளின் வழியாக செல்லும்போது அவை பொருட்களின் அடர்த்தி மற்றும் கலவையைப் பொறுத்து வெவ்வேறு வழிகளில் உறிஞ்சப்படுகின்றன. உதாரணமாக, எலும்புகள், தசைகளை விட அதிக எக்ஸ் கதிர்களை உறிஞ்சுகின்றன. உடலின் எதிர்பக்கத்தில் ஒரு டிடெக்டர் உறிஞ்சப்படாத எக்ஸ் கதிர்களை படம் பிடிக்கிறது. அதனால் அடர்த்தியான எலும்புப் பகுதிகள் வெண்மையாகவும் குறைந்த அடர்த்தியான மென்மையான திசுக்கள் உள்ள பகுதிகள் கருமையாகவும் தோன்றும்.

மருத்துவத் துறையில் ரேடியோகிராஃபியின் பயன்கள்:

நோயறிதல் இமேஜிங்: எலும்புகள், உறுப்புகள் மற்றும் திசுக்களைக் காட்சிப்படுத்த ரேடியோகிராபி பயன்படுத்தப்படுகிறது. இது எலும்பு முறிவுகள், கட்டிகள், தொற்றுகள் மற்றும் பிற மருத்துவ நிலைகளைக் கண்டறியும்.

பல் ரேடியோகிராஃபி: பல் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் துவாரங்களை கண்ட றிவதற்கும் சிகிச்சைகளை திட்டமிடுவதற்கும் உதவுகிறது.

கதிர்வீச்சு சிகிச்சை: கட்டிகளை துல்லியமாகப் படம் எடுக்க, குறிப்பாக புற்றுநோய் சிகிச்சையில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது.

கால்நடை மருத்துவம்: செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளின் எலும்பு முறிவுகள் மற்றும் மென்மையான திசுக்காயங்கள் உட்பட நிலைமைகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது.

தொழில்துறை பயன்பாடுகள்: உலோகம், பொறியியல் கூறுகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிதல் போன்ற தயாரிப்பு தரத்தை உறுதிப்படுத்த, உற்பத்தி செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல சேதம் ஏற்படாமல் குறைபாடுகள் உள்ளதா என்று பொருள்கள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய பயன்படுகிறது. விமானத்தின் பாகங்களை ஆய்வு செய்வதற்கும் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கும் பயன்படுகிறது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு: நுண்ணிய அளவில் பொருட்களின் உள்கட்டமைப்பை ஆராயப் பயன்படுகிறது. இது புதிய பொருட்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உயிரியல் மாதிரிகள் மற்றும் தாவரங்களின் ஆய்வுகளில் உள்கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகளைப் புரிந்துகொள்ளப் பயன்படுகிறது.

விமான நிலையப் பாதுகாப்பு: எக்ஸ்ரே இயந்திரங்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக சாமான்கள் மற்றும் சரக்குகளை ஸ்கேன் செய்யவும், கடத்தப்பட்ட பொருட்களை கண்டறிவதற்கும் உதவுகிறது.

எல்லைப் பாதுகாப்பு: நாட்டின் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் வாகனங்கள் மற்றும் சரக்குகளை ஆய்வு செய்யப் பயன்படுகிறது.

கலை மற்றும் தொல்லியல்: ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும் அவற்றின் கலவைகளைப் புரிந்துகொள்வதற்கும் மோசடியை கண்டறிவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. தொல்பொருள்கள் மற்றும் புதை வடிவங்களை ஆய்வு செய்யப் பயன்படுகிறது. மேற்பரப்புகளுக்கு அடியில் மறைந்திருக்கும் விபரங்களை வெளிப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
பச்சை மிளகாய் என்றால் காரம் மட்டுமில்லை; அதுக்கும் மேலே…!
Applications of Radiography

புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள்: புவியியலில் பாறை வடிவங்கள் மற்றும் நிலத்தடி கட்டமைப்புகளை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற வள ஆய்வுகளின் பின்னணியில் பயன்படுத்தப்படுகிறது. அதுபோலவே சுற்றுச்சூழல் ஆய்வுகளில் நிலத்தடி அசுத்தங்கள் அல்லது கட்டமைப்பு பலவீனங்களைக் கண்டறிய உதவுகிறது.

கதிர்வீச்சு பகுப்பாய்வு: அணுசக்தி நிலையங்களுக்குள் குழாய்கள் மற்றும் கட்டமைப்புகளின் ஒருமைப்பாட்டை மதிப்பிடுவதற்கும் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

உணவுத்தொழில்: உணவுப்பொதிகள் மற்றும் உள்ளடக்கங்களை ஆய்வு செய்யவும் வெளிநாட்டுப் பொருட்களை கண்டறிதல் மற்றும் தயாரிப்புப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பயன்படுகிறது.

கல்வி மற்றும் பயிற்சி: மருத்துவ இமேஜிங் நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை கையாள்வதில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com