பச்சை மிளகாய் என்றால் காரம் மட்டுமில்லை; அதுக்கும் மேலே…!

Health benefits of eating green chillies
Health benefits of eating green chillies
Published on

ச்சை மிளகாய் பரவலாக சுவைக்காகப் பயன்படுத்தப்பட்டாலும் அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் காணப்படுகின்றன. வாரத்திற்கு ஒருமுறை காரமான உணவு எடுத்துக் கொள்பவர்களை விட, வாரத்திற்கு இருமுறைக்கு மேல் காரமான உணவுகளை எடுத்துக் கொள்கிறவர்கள் 10 சதவீதம் பேர் மரணத்தை தள்ளிப்போடுவதாக சீன நாட்டின் மருத்துவ ஆய்வில் கண்டறிந்துள்ளனர். காரணம், மிளகாயில் உள்ள காப்சிகன் எனும் பொருள்தான். இது நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. அதோடு, புற்றுநோயையும் எதிர்த்துப் போராடுகிறது என்கிறார்கள்.

பச்சை மிளகாயில் உள்ள கேப்சிகன் எனும் சத்து நுரையீரல் புற்றுநோய் செல்களை பரவ விடாமல் தடுக்கிறது என்பதை அமெரிக்காவின் மார்ஷல் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வாரத்தில் 4 முறைக்கு மேல் மிளகாய் சாப்பிடுகிறவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 40 சதவீதம் குறைகிறது என்பதை அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியாலஜி ஆய்வில் தெரியவந்துள்ளது. மிளகாயில் உள்ள ‘காப்சிகன்’ கணையம் பகுதியில் தோன்றும் தேவையற்ற பொருட்களை அழித்து புற்றுநோய் ஆபத்தை முற்றிலும் தவிர்க்கிறது என்கிறார்கள் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். பச்சை மிளகாயில் உள்ள கேப்சிகன் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்துகிறது.

பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, பி6, சி, கே, இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம், கார்போஹைட்ரேட் என பல வகையான சத்துக்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாந்தின், லுடீன்-ஜியாக்சாண்டின் போன்ற ஆரோக்கியமான விஷயங்கள் உள்ளன.

நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், அது இரத்த சோகை எனப்படும். பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. அதனுடன், அவற்றில் உள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. 50 கிராம் பச்சை மிளகாய் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள காலையில் விரைவில் எழுந்திருக்கும் பழக்கம் ஏற்படுகிறதாம். மேலும், அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆய்வின் முடிவு கூறுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் காயம் ஏற்பட்டவர்களுக்கு அதிகளவில் பச்சை மிளகாய் கொடுப்பதை கவனித்திருப்போம். பச்சை மிளகாய் இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகின்றது.

பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலை பல வகையான தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஜலதோஷம் இருக்கும்போது, காரமான உணவுகளை சாப்பிட்டால் சற்று நிம்மதி கிடைக்கும். அதற்குக் காரணம் உண்டு.

பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது. மூக்கு தண்டில் உள்ள சளி சவ்வுகளைத் தூண்டுகிறது. அதன் மூலம் சளி மெலிந்து மூக்கை அடைக்காமல் வெளியேறும். இது சுவாசத்தை எளிதாக்குகிறது. சளி மற்றும் இருமல் அறிகுறிகள் குறையும்.

இதையும் படியுங்கள்:
ஆப்பிள், வால்நட் சாலட் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள்!
Health benefits of eating green chillies

காலையில் வெறும் வயிற்றில் பச்சை மிளகாயை கடித்தால் (முழுங்கக் கூடாது) உமிழ்நீர் சுரக்கும். அதை அப்படியே உள்ளே விழுங்கினால் அல்சர் கொஞ்ச நாட்களில் சரியாகும். உங்களால் காரத்தை பொறுத்துக்கொள்ள முடிந்தால் நாலைந்து பச்சை மிளகாய்களை கடித்துத் துப்புங்கள். அதனால் அதிகப்படியான உமிழ் நீர் சுரந்து வாய் சுத்தமாகும். பல் வலியும் குறையும் என்பதை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நிறைய பலன்கள் உண்டு. ஆனால், அதிகமாக சாப்பிட்டால் அது தீய விளைவை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தினமும் 50 கிராமுக்கு மேல் பச்சை மிளகாயை உட்கொள்வது டிமென்ஷியா போன்ற நிலைமைகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. பச்சை மிளகாயை அதிகம் சாப்பிடுவதும் உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். பச்சை மிளகாயை அதிகம் சாப்பிடுவதால் வயிற்றில் ஏற்படும் இரசாயன எதிர்வினையால் வயிற்றில் எரியும் உணர்வு, வீக்கம் போன்றவை ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com