இயற்கையாக நேர்மறை சக்தியை அதிகரிப்பது எப்படித் தெரியுமா?

Positive Energy
நேர்மறை சக்தியை அதிகரிக்கhttps://www.qualcondreams.com
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

ன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் வீடுகளுக்கும் நச்சு நீக்கம் தேவைப்படுகிறது. சில சமயங்களில் மக்கள் தங்களை அறியாமலேயே எதிர்மறை ஆற்றலை தங்கள் வீட்டுக்குள் வரவழைத்துக் கொள்கிறார்கள். பின்பு நோய்கள் அல்லது குழப்பமான மனநிலையை உணர்கிறார்கள். இயற்கையான முறையில் வீட்டை நச்சுநீக்கம் செய்வதற்கான சில வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. தேவையில்லாத பொருட்களை அகற்றுவது: வீட்டிலிருந்து தேவையில்லாத பொருட்களை அகற்றுவது நம் வீட்டை நச்சுத்தன்மையிலிருந்து நீக்குவதற்கான மிக எளிமையான வழியாகும். வீட்டில் இருக்கும் தேவையில்லாத அட்டைப் பெட்டிகள் மற்றும் உபயோகிக்க முடியாத பொருட்கள், நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை தடுக்கின்றன. எனவே, அவற்றை அகற்றி விட்டால் வீட்டில்  நேர்மறை ஆற்றல் நிலவும்.

2. திரைச்சீலைகளை திறந்து வைக்க வேண்டும்: நிறைய வீடுகளில் திரைச்சீலைகளை போட்டு ஜன்னல்களை மறைத்து வைத்திருப்பார்கள். நமது வீட்டை நச்சுக்களில் இருந்து நீக்க அற்புதமான வழி இயற்கையான சூரிய ஒளியை வீட்டிற்குள் வரவேற்பதாகும். அதனால்தான் எப்போதும் நல்ல இயற்கை ஒளியுடன்கூடிய வீட்டை வாங்க பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். அதன் காரணம் சூரிய ஒளி வீட்டுக்குள் நேர்மறை ஆற்றலை கொண்டு வருகிறது என்பதால்தான்.

3. உப்பு சுத்திகரிப்பு: எதிர்மறை ஆற்றலை வீட்டில் இருந்து விலக்குவதற்கு மிகச் சிறந்த சாதனம் உப்பு. வீட்டின் மூலைகளில் உப்பை தூவி விடலாம் அல்லது  கல் உப்பு கலந்த நீரில் தரையைத் துடைப்பது நல்லது. வீட்டில் இருக்கும் தூசிகளை மட்டுமல்ல, தேங்கியிருக்கும் எதிர்மறை ஆற்றலையும் சுத்தம் செய்ய வல்லது என்று கூறுகிறார்கள்.

4. படிகங்கள் (Crystals): வீட்டில் படிகங்களை உபயோகிப்பது நேர்மறை ஆற்றலை வரவேற்பதற்கு சிறந்த வழியாகும். தெளிவான குவாட்ஸ் அல்லது அமேதிஸ்ட் போன்ற படிகங்கள் இயற்கையாக நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி படைத்தவை. இந்தப் படிகங்களை வீட்டு வாயில் கதவுகள் மற்றும் அறைகளில் லேசாக பிரஷ் கொண்டு தேய்க்கும்போது நேர்மறை ஆற்றலை அவை வீட்டிற்குள் கொண்டு வருகின்றன. அவை அமைதி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
மரத்தில் பூக்கும் தாமரை மலரைத் தெரியுமா?
Positive Energy

5. அத்தியாவசியமான எண்ணெய்கள் மற்றும் வாசனை திரவியங்கள்: இவை மென்மையான மற்றும் நுட்பமான வாசனையை வழங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தின் மனநிலையையும் ஆற்றலையும் உடனடியாக உயர்த்தும் வல்லமை படைத்தவை. இவை பலவிதமான நறுமணங்களில் கிடைக்கின்றன. மல்லிகை, லாவண்டர் போன்ற நறுமணங்கள் வீட்டில் இருப்பவர்களை அமைதிப்படுத்த இவை உதவும். மேலும் வீட்டில் தேங்கி நிற்கும் எதிர்மறை ஆற்றலையும் நீக்குகின்றன. இவற்றை அங்கங்கே தெளிப்பது நல்லது.

6. புனிதச் சின்னங்கள்: வீட்டில் புனித சின்னங்களான ஓம், ஸ்ரீயந்திரம், கோமதி சக்கரம் போன்றவற்றை வைக்க வேண்டும் இவை வீட்டை ஆற்றலுடன் பிரகாசமாக்கும் சக்தியை கொண்டுள்ளன. எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இவற்றை சுவர்களில் தொங்க விடலாம்.

7. லவங்கப்பட்டை: இது தீய ஆற்றலை அழிக்கும் சக்தி கொண்டது என்று நம்பப்படுகிறது. ஒரு சிறிய வெள்ளைத் துணியில் சிறிதளவு லவங்கப்பட்டையை பொடி செய்து வீடு முழுவதும் தூவி விட்டால் நேர்மறை சக்தியை அதிகரிக்கும் என்கிறார்கள்.

இத்துடன் வீட்டில் தினமும் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது. வீட்டில் தொட்டியிலாவது சில தாவரங்களை வளர்க்கலாம். இவை நேர்மறை சக்தியை வரவழைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com