‘குடுமி’ தமிழர்களின் அடையாளம் என்றால் ஆச்சரியமாக உள்ளதா?

Kudumi
Kudumi
Published on

‘குடுமி’ என்பது தலைமுடியை முன்னால் ஒரு பகுதியில் மட்டும் திரட்டி முடிச்சு போடும் ஒருவகை ஹேர் ஸ்டைலாகும். ‘குடுமி’ தமிழர்களுடைய அடையாளம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா? இது தமிழர்களின் அடையாளம் என்பதையும் தாண்டி தமிழர்களின் கலாசார அடையாளம் என்று கூட சொல்லலாம். இது அனைத்து ஜாதியினருக்குமான கலாசார அடையாளமாக இருந்துள்ளது என்பதுதான் உண்மை. அரசர் முதல் ஆண்டி வரை குடுமி யாவருக்கும் பொதுவுடமையாகவே இருந்துள்ளது என்பது வரலாற்று உண்மை.

பூர்வசிகை - அபரசிகை: குடுமி என்பது இரண்டு வகைப்படும். பூர்வசிகை, அபரசிகை என்று. பூர்வசிகை என்பது தலைப்பகுதியின் முன் உச்சியில் மட்டும் இருக்கும். அபரசிகை என்பது தலையின் உச்சியில் துவங்கி பின் பகுதி வரை நீண்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
எலியை வீட்டை விட்டே துரத்த இந்த டெக்னிக் டிரை பண்ணுங்க!
Kudumi

துறவிகளும் குடுமியும்: சினிமாக்களிலும், பொது இடங்களிலும் குடுமியை கிண்டலுக்குரிய பொருளாக்கி தமிழர்களின் அடையாளம் என்பதை மறக்க வைத்து விட்டனர். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாகக் கிண்டல் செய்து அதனை வைத்துக்கொள்ள தயங்கும்படி அனைவரையும் செய்து விட்டனர். அனைத்தையும் துறந்து துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் துறவிகள் கூட குடுமியை விடக் கூடாது என்பது தமிழர் சமய நெறியாகும். அதை இன்றும் வைஷ்ணவத்தில் கடைபிடிப்பதைக் காணலாம். ஆழ்வார்கள் சிலர் பூர்வசிகை உள்ளவர்கள். பூர்வசிகை உள்ளவர்களை 'சோழியர்கள் என்று அழைப்பது வழக்கம்.

துறவறத்தை ஏற்ற பின்பும் வைஷ்ணவ துறவிகள் தமிழ் கலாசார அடையாளமாக குடுமி வைப்பதை துறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இராமானுஜருக்கு முன்பும், அவருக்குப் பின்பும் இன்றும் கூட வைஷ்ணவத் துறவிகள் குடுமியை விடாது வைத்துக்கொள்ள வேண்டும் என்பது விதி. அரசர் முதல் துறவி வரை குடுமி வைக்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
நவரத்தின மோதிரத்தை யார் யார் அணியலாம்? அதன் பலன்கள் தெரியுமா?
Kudumi

முதுகுடுமி பெருவழுதி: புறநானூறு பாடல், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் ஒருவரின் புகழ் பாடுகிறது. வழுதி என்பது பாண்டியர்களின் குடிப்பெயர். பல்யாகசாலை என்பது பல யாகங்களைச் செய்தவன் என்றும், குடுமி என்பது அந்த மன்னனுடைய இயற்பெயர். காலத்தால் முற்பட்டவன் என்பதால் ‘முதுகுடுமி’ எனப்படுகிறார். அவர்கள் தங்கள் ஆட்சியின்பொழுது குடுமியைப் பெருமையுடனும், மதிப்புடனும் காட்டிக் கொண்டனர். ஆங்கிலேயர்கள் ஆட்சியின்பொழுது குடுமி வைப்பது படிப்படியாக குறைந்து போனது. குடுமிக்கு பதிலாக மேற்கத்திய சிகை அலங்காரங்கள் பிரபலமாயின.

ராபர்ட் கால்டுவெல்: 1860களில் தென்னிந்திய கிறிஸ்தவ சபைகளில் புதிதாக சபைக்கு வருபவர்களும், சபைக்காக வேலை பார்ப்பவர்களும் குடுமி வைத்துக் கொள்ளலாமா கூடாதா என்று ஒரு விவாதம் நடைபெற்றது. அருட்திரு ராபர்ட் கால்டுவெல், தனது கருத்துக்களை ஒரு நாளிதழுக்காக 1867ல் எழுதினார். இந்த கட்டுரை வெறும் வேதாந்த உரையாக மட்டுமல்லாமல், குடுமி பற்றிய வரலாறையும், குடுமி சம்பந்தமான சடங்குகள் பற்றியும் பல விஷயங்களையும் விவாதித்துச் செல்கிறது. வானதி பதிப்பகம் கூட, ‘ராபர்ட் கால்டுவெல் எழுதிய குடுமி பற்றிய சிந்தனைகள்’ என்ற புத்தகத்தை விற்பனை செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com