Leg shaking habit  Is shuffling a hereditary habit? A health problem?
Leg shaking habit Is shuffling a hereditary habit? A health problem?https://worldknowledgebag.blogspot.com

கால் ஆட்டும் பழக்கம் என்பது பரம்பரை பழக்கமா? உடல்நலக் கோளாறா?

Published on

சிலர் இருக்கையில் அமர்ந்திருக்கும்போதும் படுத்துக்கொண்டிருக்கும்போதும் கால்களை ஆட்டிக்கொண்டு இருப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இதுபோன்று காரணம் இல்லாமல் காலை ஆட்டும் பழக்கம் பலரிடமும் உண்டு. இதை ஆங்கிலத்தில் Restless legs syndrome என்பார்கள். சிலருக்கு தூங்கும்போதும் கால் ஆட்டும் பழக்கம் இருக்கும். இது ஏன் தெரியுமா?

சிலருக்கு இது சிறிய வயதில் இருந்தே பழக்கமானதாக இருக்கும். இன்னும் சிலரோ அதை வேண்டுமென்றே பழக்கப்படுத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது நகம் கடித்துக் கொண்டும், போன் பேசும்போது காலாட்டிக் கொண்டும், சிலரோ கால் மேல் கால் போட்டும் அமர்ந்திருப்பார்கள். இவையெல்லாம் பழக்கத்தால் வந்தது என்றாலும் உடல் ரீதியாக பார்க்கும்போது, இது சில உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தவும், சுட்டிக் காட்டவும் செய்கிறது.

வீட்டுப் பெரியவர்கள் காலாட்டுவதைப் பார்த்தால், ‘அப்படிச் செய்யாதே, எதிரில் இருப்பவர்கள் தவறாக நினைப்பார்கள். இது மரியாதையான செயல் இல்லை’ என்று கூறுவார்கள். இது நல்ல பழக்கம் இல்லை என்றும் கண்டிப்பார்கள். மருத்துவர்களும் இந்தப் பழக்கத்தை தவறு என்றுதான் கூறுகிறார்கள்.

இப்படி கால் ஆட்டுவது மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக ஏற்படுகிறது என்றும், ஹார்மோன் இம்பேலன்ஸ் இருந்தாலும், சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் இப்படி கால்களை அசைப்பார்கள் என்றும் கூறுகிறார்கள். இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்களுக்கும் இந்த பழக்கம் இருக்கும் என்கின்றனர்.

குறைந்த நேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த கால் ஆட்டும் பழக்கம் இருப்பதைக் காண முடியும். நாற்காலியில் அமர்ந்து கால்களை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தால் இரத்த ஓட்டம் உடலில் சீராக பரவாமல் போகும். இது நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கால் ஆட்டும் பழக்கம் சிலருக்கு நாள் முழுவதும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கோயிலுக்குப் போனால் சிறிது நேரம் ஏன் உட்கார்ந்து வர வேண்டும் தெரியுமா?
Leg shaking habit  Is shuffling a hereditary habit? A health problem?

இதுபோன்று கால் ஆட்டும் பழக்கம் பரம்பரை காரணமாக ஏற்படலாம் என்றும் சரியான காரணத்தைக் கூற முடியாமல் போனாலும் இரும்பு சத்தும், டோபோமைனும் (நரம்பணு) குறைவதால் கால் ஆட்டும் பழக்கம் உண்டாவதாகக் கூறப்படுகிறது.

நம் பிள்ளைகளுக்கு சிறுவயதில் இருந்தே நல்ல பழக்கங்களைச் சொல்லித் தந்தால் பின்னால் கஷ்டப்படவோ, மன வருத்தம் கொள்ளவோ தேவையில்லை.

logo
Kalki Online
kalkionline.com