
திருமணத்தில் ஒரு ஆண், மனைவி என்பவருக்கு தகப்பன் பொறுப்பை ஏற்கிறான். இருவருமே அந்த உறவில் புதிதாய்ப் பிறக்கிறார்கள். உறவுகள் என நினைத்து வளர்ந்த இருவரை புதிய உறவில் இணைப்பது திருமணம். அது மட்டுமில்லை திருமணம் நிகழ்த்தும் மாற்றங்கள் ஏராளம். இந்த மாற்றங்கள் தரும் பாடங்களைக் கற்றால் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியே! அந்தப் பாடங்கள் என்ன என்று பார்ப்போம்.
விட்டுக் கொடுத்தல்
திருமண வாழ்க்கை என்பது போட்டியோ பந்தயமோ அல்ல! தட்டிக் கொடுத்தல்களும், விட்டுக் கொடுத்தல்களும் ஒரு பூ மலர்வதுபோல தானாக நிகழவேண்டும். அப்படி நிகழும் அளவுக்கு அன்பை பரிமாறினால் வாழ்க்கையில் அவர்களைவிட வேறு யாரும் பெரிதாக தோன்றாது!
இனிமையான இல்லறம்
வாழ்க்கைத் துணையிடம் குறைகளையும், பலவீனங்களும் தாங்கள் பார்க்கும் விஷயங்களை மாற்ற முயற்சிப்பதில் எழுகிறது. அடுத்த பிரச்னை திருமண வாழ்வு என்பது சிறைச்சாலை அல்ல! ஒருவரை இன்னொருவர் திருத்த முயற்சிப்பதற்கு. வாழ்க்கை துணையின் பலவீனங்கள், குறைகள், இயலாமைகள், ரசனைகள், விருப்பங்கள் என அனைத்தையும் புரிந்துகொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் இனிமையான இல்லறத்திற்கு ஆதாரம்!
மனக்காயத்திற்கு மருந்து
மகிழ்ச்சியான தருணத்தில் பொங்கி வழிவது மட்டுமல்ல அன்பு! திடீரென நிகழும் பொருளாதாரம் இழப்பு, நெருக்கமானவரின் மறைவு, ஏதோ ஒரு துரோகம் என தாங்க முடியாமல் தவிக்கும் போது தோள்கொடுக்க வேண்டும்! இந்த நேரத்தில் வாழ்க்கை துணையின் ஆறுதலை விட மன காயங்களை ஆற்றும் மருந்து வேறுஎதுவும் இல்லை!
மனம் விட்டு பேசுங்கள்
புது வீடு வாங்குவது, குழந்தை பிறப்பது, வேலை பிரமோஷன் போன்றவை மட்டுமே திருமண வாழ்வில் உயர்வான தருணங்கள் என நினைக்காதீர்கள்! எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒரு விடுமுறை நாளில் அருகருகே அமர்ந்து அரை மணி நேரம் இருவரும் மனம்விட்டு பேசுவது கூட நினைத்து நினைத்து மகிழவேண்டிய அரிதான நிகழ்வுதான்!
மனதால் நிகழவேண்டும்
நெருக்கமான தம்பதிகள் என்பவர்கள் எப்போதும் சேர்ந்தே இருப்பவர்கள் அல்ல! மாலைலை ஆறு மணிக்கு வேலை விட்டு வீடு திரும்பி டிவி. செல், கம்ப்யூட்டர் என இயந்திர உலகத்தினை பார்த்துக் கொண்டு மனைவி, குழந்தை முகத்தை ஏறெடுத்து பார்க்காதவர்களும் உண்டு. வெளிநாட்டில் வேலை செய்தாலும் தாய் மண்ணில் இருக்கும் மனைவியுடன் தினமும் சில நிமிடங்களாக பேசும் கணவர்களும் உண்டு! நெருக்கம் என்பது மனதால் நிகழவேண்டும்! சொல்லி செய்வது அல்ல!
உறவில் அன்பு குறைய கூடாது
குழந்தைகள் பிறந்து வளர துவங்கிய பிறகு கணவன் - மனைவி இடையே பல வீடுகளில் நெருக்கம் குறைய தொடங்கிவிடும் .ஏதோ பல யுகங்ங்கள் சேர்ந்து வாழ்ந்து முடிந்துவிட்ட தம்பதிகள் போல உணர துவங்குவார்கள் தூக்கி எறிய வேண்டியது இந்த நினைப்புதான்!
நீங்கள் கணவன் மனைவி அதன் பிறகு குழந்தைகளுக்கு பெற்றோர் என்பதை உணருங்கள்! இந்த உறவில் அன்பு எப்போதும் குறைய கூடாது! இல்லாவிட்டால் குழந்தைகளை வளர்ப்பதற்காக ஒரு கூரைக்குள் இணைந்து வாழும் அறை நண்பர்கள்போல ஆகிவிடுவீர்கள்!
அன்பை மலரச் செய்யுங்கள்
தாம்பத்திய உறவை எப்போதும் புதிதாக வைத்திருக்கும் மகத்தான உணர்வு அன்பு! திருமணம் ஆன முதல் நாளிலிருந்து மாறாத அன்பை எப்போதும் இருவருக்கும் இடையிலும் மலரச் செய்யுங்கள்!
அன்பை வெளிப்படுத்த காரணங்கள் தேவையில்லை! சந்தர்ப்பங்களும் தேவையில்லை அன்புதான் கணவன் மனைவி உறவை மேலும் மேலும் நெருக்கமாக்கும் மந்திரம்! சந்தேகங்கள், தயக்கங்கள், பயத்தை உடைத்து உறவை இறுக்கமாக்கும் கருவி எப்போதும் ஜெயிப்பது உங்கள் இருவரிடையேஇருக்கும் உள்ள அன்புதான்!
இந்த அன்பை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சண்டையில்லாமல் யாரையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருந்தால் திருமண வாழ்வு எனும் பந்தம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.