சுவாரஸ்யம் மிகுந்த சில நகை முரண்கள்!

cat and dog unity
cat and dog
Published on

சாதாரணமாக சில விஷயங்களைப் பார்க்கும்பொழுது பழமொழியோடு ஒத்துவைத்து பார்ப்போம். ஒரு விஷயத்தோடு அது ஒத்துப்போய்விட்டால் அதையே நாமும் சொல்லுவோம். சில நேரங்களில் வித்தியாசமான கோணத்தில் அவை நடந்து கொண்டால் அதை தீர்க்கமாக கடைசி வரை கவனிப்போம். அதுபோல் கவனித்த ஒரு நிகழ்வை இப்பதிவில் காண்போம்!

யாராவது வீட்டில் எதிரும் புதிருமாக எப்பொழுதும் சண்டை பிடித்துக் கொண்டு இருந்தால், ‘நாயும், பூனை மாதிரி அடித்துக் கொள்கிறீர்களே, கொஞ்சம் சும்மா இருங்களேன்’ என்று கூறுவோம். நாய், பூனை இரண்டும் எதிரி என்பதற்காக அப்படிச் சொல்லப்படுவது உண்டு. ஆனால், ஒரு வீட்டில் நாய்க்கும் பூனைக்கும் ஒரே தட்டில் சாப்பாடு வைத்து அவை இரண்டும் எந்தவிதமான சண்டையும் போட்டுக்கொள்ளாமல் ஒற்றுமையாக சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறோம். ‘நாயும், பூனையுமா? இப்படி ஒரு ஒற்றுமையா?’ என்றெல்லாம் மனதில் பல்வேறு கேள்விகள் எழத் தொடங்குவது உண்டு. ஆனால், கடைசி வரை அவை இரண்டும் அந்த வீட்டில் அப்படித்தான் வளர்ந்தது. இதுபோன்ற நகை முரண்கள் எப்பொழுதாவது ஏற்படுவது உண்டுதானே!

இதையும் படியுங்கள்:
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் வெள்ளை எருக்கன் செடியின் வேர்களும் பூக்களும்!
cat and dog unity

அதேபோல், ஆட்டைப் பற்றி கூறும்பொழுது சேர்ந்து வாழும் என்று தான் கூறுவோம். அது எப்பொழுதும் அப்படித்தான் இருக்கும். அவற்றிற்கு ஒரு மரக்கிளையையும், இலைகளையும் பறித்துப் போட்டால் மந்தையாக நின்று மேயும். ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொள்ளாது. அதனதன் வயிற்றுக்கானத் தீனியை சாப்பிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக இடத்தை காலிபண்ணும்.

ஆனால், நாயைப் பற்றி நாம் அனைவரும் என்ன சொல்லுவோம். அதற்கு சாப்பாடு வைத்தால் மற்ற ஒரு நாய் அதைப் பார்த்தால் கூட குரைக்கும். அடுத்த நாயை சேர்த்துக் கொள்ளாது. தனக்கு வைத்த சாப்பாட்டையும் சரிவர சாப்பிடாமல் சிந்தும். இதற்கு ‘நாய் பெற்ற தெங்கம் பழம்’ என்ற ஒரு பழமொழி கூட உண்டு. ஏனென்றால், நாய்க்கு ஒரு தேங்காய் கிடைத்தால் அது தானும் தின்னாது. மற்றவர்களுக்கும் கொடுக்காது. உருட்டிக் கொண்டே இருக்கும். அதற்காக கூறப்பட்டதுதான் அது.

இதையும் படியுங்கள்:
பூஜைப் பாத்திரங்கள் பளபளக்கணுமா? மஞ்சள் தூளுடன் இந்த ரெண்டை சேருங்க!
cat and dog unity

இப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டு வாசலில் நிறைய நாய்கள் நின்று ஒன்றுடன் ஒன்று சண்டை பிடித்துக்கொண்டே இருந்தது. இன்னொரு நாயையும் அதனோடு சண்டைக்குக் கூப்பிட்டது. ஆனால், அந்த நாய் இரண்டு கால்களையும் மடக்கி மண்டியிட்டு மற்ற நாய்கள் அனைத்தையும் சமாதானத்திற்கு அழைத்தது. அதை எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தோம். எங்கள் தெருவில் வாசல் பெருக்கி கோலம் போடும்பொழுது இந்த நிகழ்ச்சி நடந்தது.

இதைக் கண்ணுற்ற அனைவரும் வியப்பில் ஆழ்ந்து போனோம். பிறகு அந்த நாய்கள் அனைத்தும் இது சமாதானத்தை விரும்புவதை அறிந்தவுடன் எந்தவித சத்தமும் போடாமல் கலைந்து போனதைப் பார்க்க வேண்டுமே! மூக்கின் மேல் விரலை வைத்தோம். நாய்களின் குணத்தை நன்றி உடையதற்கு எடுத்துக்காட்டாகக் கூறுவது உண்டு. ஆனால், மோசமானவர்களையும் நாய் குணம் என்று திட்டுவார்கள். அதையும் கேட்டிருக்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை காணும்பொழுது நாயை மேன்மைபடுத்தாமல் இருக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
50 வயதிற்குப் பிறகும் அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும் சில தாரக மந்திரங்கள்!
cat and dog unity

அதேபோல், ‘காக்கா கூட்டத்தைப் பாருங்க; அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க’ என்ற பாடலையும், ‘காக்கை கரவாக் கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள’ என்ற திருக்குறளையும் படித்திருக்கிறோம்.

காக்கைக்கு சிறிதளவு உணவு கிடைத்தால் கூட கரைந்து அனைத்து காக்கைகளையும் அழைத்து அவற்றிற்கும் கொடுத்து விட்டு சாப்பிடும் பண்பு உடையதுதான் காகம். ஆனால், எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த ஒரு காக்கை கிடைத்த ஒரு ரொட்டி துண்டை எடுத்து வந்து நீரில் நனைத்து தானே முழுவதையும் சாப்பிட்டது. மற்ற காக்கைகள் வரும்பொழுது அவற்றுக்குக் கொடுக்காமல் அதை எடுத்துக் கொண்டு வேறு இடத்திற்குச் சென்று அமர்ந்து சாப்பிட்டது. கடைசி வரையிலும் மற்ற காக்கைகள் அதனோடு போக, அந்த ஒரு காகம் மட்டும் தனித்தே சாப்பிட்டதைக் காண முடிந்தது. கடைசி வரை இது ஒரு நெருடலாகவே இருந்தது. நகை முரண் என்பது இவற்றிலும் உண்டு என்பதை அப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்பது போல், ‘சில நேரங்களில் சில விலங்கு, பறவைகளோ’ என்று தோன்ற வைத்தது இந்தக் காட்சி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com